Pithukuli Murugadas : முருகன் புகழ் பாடுவதில் முத்திரை பதித்த பித்துக்குளி முருகதாஸ் பிறந்த தினம் இன்று!
Pithukuli Murugadas : முருகன் புகழ் பாடுவதில் முத்திரை பதித்த பித்துக்குளி முருகதாஸ் பிறந்த தினம் இன்று!
குழந்தை பருவத்தில் விளையாட்டு மட்டும்தான் குழந்தைகளின் தலையாய நோக்கமாக இருக்கும். ஆனால் அந்த வயதில் ஒருவருக்கு தெய்வீக உணர்வு ஏற்பட்டால் எப்படி இருக்கும்? அவர் என்ன செய்திருப்பார்? பால சுப்ரமணியன் என்ற சிறுவனுக்கு அந்த எண்ணங்கள் ஏற்பட, அதை அவரால் எளிதாக மறந்துவிட முடியவில்லை. அவர் தனது பள்ளியை 7ம் வகுப்போடு முடித்துவிட்டு, தனது உள்ளுணர்வு உந்துதலை நோக்கி பயணிக்க துவங்கினார்.
கோயமுத்தூரில் இருந்து ஒரு பைசா கூட கையில் இல்லாமல் ரயில் ஏறினார். ஈரோட்டில் இறக்கிவிடப்பட்டார். பல வேலைகளை செய்து பணம் சம்பாதித்தார். அதில் 25 பைசாவை தர்ம காரியங்களுக்கு வழங்கிவிட்டு, எஞ்சிய தொகையை வைத்து வாழ துவங்கினார். அங்கிருந்து அடுத்த நகருக்கு சென்றார். அந்த தெய்வத்தை தேடிச்சென்ற பயணத்தில், அவர் பல துறவிகளை சந்தித்தார். அதில் பிரம்மானந்த பரதேசியார், வள்ளியம்மை சச்சிதானந்த சுவாமிகள், சுவாமி ஞானானந்த கிரி, சுவாமி ராமதாஸ், மாதா கிருஷ்ணா பாய் உள்ளிட்ட பலரை சந்தித்தார்.
பித்துக்குளி என்றால் தமிழில் மனநலன் பாதிக்கப்பட்டவர் என்று பொருள். பிரம்மானந்த பரதேசியார் இவரை பித்துக்குளி என்றே அழைத்தார். ஒருநாள் தன்னைப்போல் ஆவாய் என்றும் தெரிவித்தார். அப்படியே பித்துக்குளி என்பது அவரின் பெயராகவும், அடையாளமாகவும் மாறிப்போனது.
வள்ளியம்மை சச்சிதானந்தன் அவரை தன்னுடன் அழைத்துக்கொண்டு சென்று அவருக்கு அருணகிரிநாதர் பாடல்கள், கந்தர் அனுபூதி, கந்தர் அலங்காரம், வேல் வகுப்பு, வேலைக்காரன் வகுப்பு, சீர்பட வகுப்பு மற்றும் திருப்புகழ் பாடல்களை கற்றுக்கொடுத்தார்.
இந்திய சுதந்திரப்போராட்டத்தின்போது உப்பு சத்யாகிரகத்தில் பங்கேற்றார். இருமுறை சிறை சென்றார். பல்வேறு இடங்களுக்குச் சென்று பல மொழிகளை கற்றார். அவர்களின் தெய்வ பக்தி பாடல்களையும் கற்றார். இவர் இசைத்தொகுப்பில் புரந்தரதாச, தியாகராஜா, மீரா பாய், துக்காராம், கபீர், ஜெயதேவர், தேவாரம், திருவாசகம், திருப்பாவை, திருவருட்பா, திருமந்திரம், ஊத்துக்காடு வெங்கட கவி, பாரதியார் மற்றும் அருணகிரிநாதர் ஆகியவை இடம் பெற்றுள்ளன.
இவர் இந்தியா முழுவதும் நடந்தே இருமுறை பயணம் செய்துள்ளார். இவர் நேபாள அரண்மனைக்கு கவுரவ விருந்தினராக அழைக்கப்பட்டுள்ளார். இவர் நிறைய கச்சேரிகளுக்கு பணம் வாங்காமல் பாடிக்கொடுத்து, அன்னதானம் மட்டும் செய்ய வைத்துள்ளார்.
குழந்தைப்பருவத்தில் இவரது ஒரு கண்ணில் விளையாடும்போது ஏற்பட அடி உள்புறத்தில் காயமாகியிருந்தது. அது நீண்ட நாட்களுக்குப்பின்னர், தொற்றை மற்றொரு கண்ணிற்கும் பரப்பியது. முருகன் இவரது கனவில் தோன்றி தொற்று ஏற்பட்ட கண்ணை நீக்குமாறு கூறினார். அதனால் இவரது வலது கண் பாதுகாக்கப்பட்டு, கருப்பு கண்ணாடி இவரது அடையாளமானது.
தேவியின் மீது இவர் கொண்ட பற்றால், இவரது வாயில் இருந்து வரும் பாடல்கள் இவரது விரல்களில் இருந்து ஹார்மோனியம் வழியாக வரும் இசையும் ஒன்றினைந்து புதிய இசை அற்புதத்தை உருவாக்கும். தவ ராஜராஜேஸ்வரி, ஆனைக்காவில், கல்யாணி ராக திவேஷா, ஷண்முகப்பிரியா ஆகியவை இவரின் பிரபல பாடல்களாகும்.
பக்தி ரசம் நிறைந்த இவரது பாடல்களுக்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் இருந்தனர். இவரும் அவர்களை நாம சங்கீர்த்தனத்தை பாடி, மகிழும் வாய்ப்பை கொடுத்தார். தென்ஆப்பிரிக்கர்களுக்காக, இவர் பித்துக்குளி முருகதாஸ் கல்வி அறக்கட்டளையை துவக்கினார். இவரது செல்வங்களை தானமாகக்கொடுத்து, வாலாஜாபேட்டையிவ் உள்ள தீனபந்து ஆசரமத்தை நிறுவினார்.
இவர் தேவி சரோஜா என்பவரை திருமணம் செய்துகொண்டார். தேவி அம்மா என்று அவர் அழைக்கப்பட்டார். அவரும் முருகனை சேவை மனப்பான்மையில்தான் திருமணம் செய்துகொண்டார். தேவி அம்மா 2011ம் ஆண்டு இறைவனின் திருப்பாதங்களை அடைந்தார்.
கோவையில் 1920ம் ஆண்டு ஜனவரி 25ம் தேதி சுந்தரம் ஐயர், அலமேலு தம்பதியருக்கு மகனாக தைப்பூசத்தன்று பிறந்தார் பித்துக்குளி முருகதாஸ். இவர் திரைப்படங்களிலும் சில பக்தி பாடல்கள் பாடியுள்ளார். பித்துக்குளி முருகதாஸ் 2015ம் ஆண்டு நவம்பர் 17ம் தேதி கந்த சஷ்டி அன்று இறைவனடி சேர்ந்தார். அவருக்கு அப்போது வயது 95.