தமிழ் செய்திகள்  /  Entertainment  /  Pithamagan Comedian Comedy Actor Visweswararao Passed Away

Visweswararao: பிதாமகன் காமெடி நடிகர் விஸ்வேஷ்வர ராவ் மரணம்; அதிர்ச்சியில் கோலிவுட்! - நல்லடக்கம் எப்போது?

Kalyani Pandiyan S HT Tamil
Apr 02, 2024 05:29 PM IST

அண்மையில் பிரபல நடிகர் டேனியல் பாலாஜி மாரடைப்பால் உயிரிழந்த நிலையில், அதன் தொடர்ச்சியாக மற்றொரு காமெடி நடிகரும் காலமாகி இருக்கிறார்.

விஸ்வேஷ்வர ராவ்
விஸ்வேஷ்வர ராவ்

ட்ரெண்டிங் செய்திகள்

விஸ்வேஷ்வர ராவ் உடல் சென்னை சிறுசேரியில் இருக்கும் அவரது இல்லத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. இறுதிச் சடங்குகள் நாளை நடைபெற இருக்கின்றன.

ஆந்திராவை பூர்விகமாகக் கொண்ட விஸ்வேஷ்வரராவ் எழுத்தாளராகவும், இயக்குநராகவும் தன்னுடைய சினிமா வாழ்க்கையை தொடங்கினார். தமிழ், தெலுங்கு என 350-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தும் இருக்கும் இவர், சின்னத்திரையிலும் பல்வேறு தொடர்களில் நடித்திருக்கிறார்  

இரண்டு தேசிய விருதுகளை பெற்று இருக்கும் விஸ்வேஷ்வர ராவ் தெலுங்கில் பல நகைச்சுவை கதாபாத்திரங்களிலும் நடித்து இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. 

முன்னதாக, கடந்த சில தினங்களுக்கு முன்னர் பிரபல நடிகரான டேனியல் பாலாஜியும் மாரடைப்பால் காலமானார். அவரது இறப்பு திரையுலகினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. 

பிறப்பில் கிறிஸ்துவரான டேனியல் பாலாஜிக்கு ஆன்மிகத்தில் நாட்டம் அதிகமான நிலையில், அவர் ஆவடி அருகே அங்காள பரமேஸ்வரிக்கு கோயில் ஒன்றை கட்டினார். இந்த நிலையில் இது குறித்து அவர் கடந்த 11 மாதங்களுக்கு முன்னர் பிஹைண்ட் வுட்ஸ் சேனலுக்கு பேசி இருந்தார். அந்த பேட்டி இங்கே!

டேனியல் பாலாஜி பேசும் போது, “எனக்கு ஒரு 24,25 வயது இருக்கும். அப்பொழுதே எனக்கு கல்யாணம் தேவையில்லை என்பது தெரிந்தது. ஆனால் என்னுடைய அம்மாவிடம் இது குறித்து சொல்லாமல், பெண்களை தேடுங்கள் என்று கூறியிருந்தேன்.

ஆனால், என்னுடைய ராசி என்னுடைய ஜாதகத்தை அந்த பெண்களோடு பொருந்துகிறதா? என்று பார்த்தால், அந்த பெண்களுக்கு உடனே திருமணம் முடிந்து விடும்.

எனக்கும் கல்லூரி காலங்களில் காதலெல்லாம் இருந்தது. ஆனால் அந்த காதல் எல்லாம் கல்யாணத்தில் முடிய வேண்டிய அவசியம் இல்லை. ஆனால், இப்போது நான் தனியாக இருப்பது எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது. எனக்கு நிறைய ஸ்பேஸ் கிடைத்திருக்கிறது. நிறைய விஷயங்களை யோசிப்பதற்கு எனக்கு நேரம் கிடைத்து இருக்கிறது.

எனக்குள் இந்த ஆன்மிக நாட்டம் ஏன் வந்தது, எதற்காக எனக்கு இப்படியான உணர்வு ஏற்படுகிறது, எப்படி நான் வாழப்போகிறேன் உள்ளிட்ட பல கேள்விகள் எனக்குள் இருந்தன.

சாமி கும்பிடும் போதெல்லாம் என்னுடைய அம்மா, என்னை வாயைத்துறந்து சத்தமாக என்ன வேண்டுமோ கேள் என்று சொல்வார். ஆனால், நான் அப்படி வேண்ட மாட்டேன். அப்போது நடந்த ஒரு பூஜையில் மாலை அணிந்து கொண்ட வந்த ஒரு அம்மா, நான் சொல்லாமலேயே…ம்ம்ம்ம்… நான் பார்த்துக்கொள்கிறேன் என்றார்.

ஒருமுறை ஊரில் விழா நடந்தது. அந்த பூஜையின் போது நிறைய சாமியார்கள் சாமி ஆடினார்கள். நான் கொஞ்சம் மேட்டில் இருந்து அந்த விழாவை பார்த்துக் கொண்டிருந்தேன். அப்போது அங்கு ஆடிக்கொண்டிருந்த சாமியார்களில் ஒருவர் திடீரென்று என்னை நோக்கி வந்தார். என் பக்கத்தில் இருந்தவர்கள் என்னை விட்டு தெறித்து ஓடி விட்டார்கள்.

அவரும் என்னிடம் நான் காப்பாற்றுகிறேன் என்று சொன்னார். இதே போல பல ஊர்களில் பல சாமியார்கள் இப்படி சொல்லி இருக்கிறார்கள். ” என்றார்.

முன்னதாக, தமிழ் சினிமாவில் வித்தியாசமான வில்லன் நடிகராக அறியப்படும் நடிகர் டேனியல் பாலாஜி, மாரடைப்பு காரணமாக திடீரென காலமானார். 48 வயதான அவர், கொட்டிவாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனை அனுமதிக்கப்பட்ட நிலையில், அங்கு சிகிச்சை பலனின்றி காலமானதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

2003 ம் ஆண்டு காதல் கொண்டேன் படத்தின் மூலம் போலீஸ் அதிகாரி கதாபாத்திரத்தில் அறிமுகமான டேனியலுக்கு, காக்க காக்க படத்தில் அவர் ஏற்று நடித்த கதாபாத்திரம், அவருக்கு பேர் வாங்கித் தந்தது.

தொடர்ந்து பல்வேறு படங்களில் அவர் அடுத்தடுத்து நடித்திருந்தாலும், 2006ம் ஆண்டு அவர் நடித்த வேட்டையாடு விளையாடு திரைப்படம், அவருக்கு மீண்டும் ரீ என்ட்ரி கொடுத்தது. அமுதன் என்கிற அந்த கதாபாத்திரம், வேட்டையாடு விளையாடு படத்தின் வெற்றிக்கு பெரிய அளவில் உதவியது என்றே கூறலாம்.

அதைத் தொடர்ந்து 2007 ல் வெற்றி மாறன் இயக்கத்தில் பொல்லாதவன் படத்தில் ரவி என்கிற கதாபாத்திரமும், டேனியல் பாலாஜிக்கு பெரிய அளவில் பேரை தந்தது. ஆனாலும் அதன் பின் பெரிய அளவில் அவர் படங்களில் தோன்றவில்லை. குறிப்பிட்ட சில படங்களில் மட்டும் நடித்தார். வடசென்னை திரைப்படத்தில் அவர் ஏற்று நடித்த தம்பி கதாபாத்திரம் அவரை வித்தியாசமான கோணத்தில் காட்டியது.

சமீபத்தில் ஆன்மிக வழியில் அதிக நாட்டம் கொண்டவராக மாறிய டேனியல் பாலாஜி, கோயில் கும்பாபிஷேகம் உள்ளிட்ட ஆன்மிக பணிகளில் தீவிரமாக ஈடுபட்டார். திரைத்துறையில் நேர்மையாகவும், தன் திறமை மீது அதீத நம்பிக்கை கொண்டவராகவும் காணப்பட்ட டேனியல் பாலாஜி, இளம் வயதில் காலமான சம்பவம், அவரது ரசிகர்களை மட்டுமின்றி, திரைத்துறையில் பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

 

 

IPL_Entry_Point

டாபிக்ஸ்