Tamil News  /  Entertainment  /  Peru Adult Star Thaina Fields Body Found On Her House

Porn Star Died: பாலியல் துன்புறுத்தல் புகார்..! பெரு நாட்டில் பிரபல ஆபாச பட நடிகை உடல் இறந்த நிலையில் கண்டெடுப்பு!

Muthu Vinayagam Kosalairaman HT Tamil
Jan 12, 2024 02:40 PM IST

பெரு நாட்டை சேர்ந்த ஆபாச பட நடிகையான தானியா ஃபீல்ட்ஸின் உடல் அவரது வீட்டில் கண்டெடுக்கப்பட்டது. ஆபாச பட துறையை சேர்ந்தவர்களாலேயே பாலியல் துன்புறுத்தல் இருந்து வருவதாக குற்றச்சாட்டை அவர் முன் வைத்திருந்த நிலையில், அவரது வீட்டிலேயே இறந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டார்.

ஆபாச பட நடிகை தானியா ஃபீல்ட்ஸ்
ஆபாச பட நடிகை தானியா ஃபீல்ட்ஸ்

ட்ரெண்டிங் செய்திகள்

அந்த வகையில் பெரு நாட்டை சேர்ந்த 24 வயது நிரம்பிய ஆபாச பட நடிகையாக இருப்பவர் தானியா பீல்ட்ஸ். இவருக்கென தனி ரசிகர் கூட்டமும் இருக்கிறது. இதையடுத்து தானியா ஃபீல்ட்ஸ் பெருவில் உள்ள ட்ருஜிலோ பகுதியில் வசித்து வந்துள்ளார். தனது வீட்டில் இறந்த நிலையில்தானியாவின் உடல் கண்டெடுக்கப்பட்டது.

இதைத்தொடர்ந்து போலீசாருக்கு வழக்கு பதிவு செய்து, தானியா இறப்பு தொடர்பாக தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தானியாவின் நிஜ பெயர் அபிகாயில் என்பதாகும். கடந்த எட்டு மாதங்களுக்கு முன்னர், தனது துறையில் பாலியல் துன்புறுத்தல் இருப்பதாக வெளிப்படையாக பேசியிருந்தார்.

"ஆபாச பட நடிகையான பிறகு பாலியல் ரீதியாக துன்புறுத்தலுக்கு ஆளாகியுள்ளேன். முதலில் இதனை சட்ட ரீதியாக எதிர்கொள்ள வேண்டாம் என நினைத்தேன். ஆனால் பலரும் என்ன கமிட் செய்தால் என்னவோணாலும் செய்யலாம் என நினைத்தார்கள். இதையொல்லாம் நினைத்து பலமுறை அழுதுள்ளேன்" என்று கூறியிருந்தார்.

தற்போது அவரது வீட்டிலேயே இறந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டிருக்கும் நிலையில், தானியா இறப்புக்கான காரணத்தை போலீசார் விசாரித்து வருகின்றனர்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

WhatsApp channel

டாபிக்ஸ்

பொழுதுபோக்கு மற்றும் பிக்பாஸ் , கோலிவுட் தொடர்பான அப்டேட் செய்திகளை இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் மூலம் உடனுக்குடன் அறியலாம்.