Director Shankar: 'மக்கள் எல்லாத்தையும் பாக்குறாங்க.. கூட்டி கழிச்சா உண்மை தெரியும்..' ஷங்கர்
Director Shankar: தன் மீது வரும் விமர்சனங்களை எல்லாம் மக்கள் பார்த்துக் கொண்சு தான் இருக்கிறார்கள். அவர்கள் உண்மையை தெரிந்து கொள்வார்கள் என டைரக்டர் ஷங்கர் கூறியுள்ளார்.

Director Shankar: தமிழ் சினிமாவின் பிரம்மாண்ட இயக்குநரான ஷங்கர் மீது சமீப காலமாக பல வெறுப்புகளும் வதந்திகளும் அதிகரித்த வண்ணமாக இருக்கிறது. குறிப்பாக இவரது இந்தியன் 2 படத்திற்கான விமர்சனங்கள் மிகவும் மோசமானதாகவே இருந்தது.
என்னோட பெஸ்ட் கொடுக்குறேன்
இந்நிலையில், டைர்கடர் ஷங்கர் அவர் மீதான விமர்சனங்களுக்கு இந்தியாகிளிட்ஸ் தமிழ் யூடியூப் சேனலுக்கு பேட்டி அளித்துள்ளார். அதில், "இப்போ தான் என் படத்த எல்லாம் முடிச்சு நான் கொஞ்சம் ரிலாக்ஸா இருக்கேன். நான் என்னால முடிஞ்ச பெஸ்ட படமா எடுத்து குடுக்குறேன். இது பாக்ஸ் ஆபிஸ்ல ஹிட் ஆகுதா இல்லையாங்குறது எல்லாம் அதுக்கு அப்புறம் தான்.
நம்பர் பின்னாடி போனா கதை இருக்காது
நாம நல்ல படம் பண்றோமான்னு தான் யோசிக்கனும். இங்க பாக்ஸ் ஆபிஸ்ல 1000 கோடி அடிக்குதா 2000 கோடி அடிக்குதான்னே யோசிக்க கூடாது.
வசூலில் ஜெயிச்ச படத்த மனசுக்குள்ள வச்சிட்டு படம் பண்ணுனா, அந்த படத்துல எது ஹைலைட்டுன்னு பாத்தமோ அத சுத்தி தான் நாம இருப்போம். அந்த ஹைலைட் எல்லாம் கனெக்ட் பண்ண தான் நாம யோசிச்சிட்டு இருப்போம். அதனால நாம எடுக்க நினைச்ச படத்த விட்டுட்டு எது பின்னாடியோ போயிட்டு இருப்போம். ஒரு கதை உருவாகுறதுக்கான வாய்ப்பே போயிடும்.
டைரக்டர் கையில எதுவும் இல்ல
தமிழ் சினிமாவுல ஒரு படத்தோட முதல் பாகம் ஹிட் ஆகுற அளவுக்கு அதுக்கு அடுத்த பாகம் எல்லாம் ஹிட் ஆகுறது இல்ல. இதுக்கான காரணம் என்னென்னு எனக்கும் தெரியல. முதல் பாகத்த விட அதிகமா தான் அடுத்த படத்துக்கான உழைப்ப போடுறோம்.
ஒரு படத்துக்கான பட்ஜெட் அதிகமா மாருறதோ படம் எடுக்க நேரம் அதிகமாகுறதோ வெறும் டைரக்டர் கையில மட்டும் இல்ல. படம் எடுக்க டைம் ஆகுதுன்னா அதுக்கு பல நடிகர்களோட கால்ஷீட் ரொம்ப முக்கியம். அதுல எதாவது மிஸ் ஆச்சுன்னா அது திரும்பவும் பழைய மாதிரி கிடைக்குறது கஷ்டம்.
எனக்கு தேவை இவ்ளோ தான்
எங்கயோ யாராவது மிஸ் பண்ற ஒரு விஷயமோ, இல்ல பெர்மிஷன் கிடைக்காம போறதோ தான் காரணம். இது அப்படியே ஒரு சைன் மாதிரி வந்து நம்பளயே தாக்குது.
எல்லாரும் இவரு படம் பண்ணுனாலே 3 வருஷம் ஆகிடுதுன்னு சொல்றாங்க. எனக்கு தேவை ஒன்றரை வருஷம் தான். வேற வேற காரணத்தால தான் படம் முடிக்க லேட் ஆகுது. இதுனால தான் பட்ஜெட்டும் அதிகமாகுது.
மக்கள் பாக்குறாங்க
கதை சொல்லும் போதே இதுக்கு எல்லாம் இவ்ளோ பட்ஜெட் ஆகுதுன்னு சொல்லிட்டு தான் படமே பண்ண ஆரம்பிக்குறோம். சில நேரங்கள்ல செய்திகள் அதை மிகப்படுத்தி வெளிவருது.
என்ன பத்தி நிறைய வதந்தி வருது. டைம் கிடைச்சா அதுக்கு பதில் சொல்லிட்டு தான் இருக்கேன். மக்கள் எல்லாரையும் பாத்துட்டு தான் இருக்காங்க. அவங்களே கூட்டி கழிச்சு எது உண்மைன்னு தெரிஞ்சிப்பாங்க" என்றார்.
பொறுப்புத் துறப்பு:
இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல், பொருள் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்களில் இருந்து சேகரித்து, உங்களுக்குத் தரப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

தொடர்புடையை செய்திகள்