Vijay Stars: கொட்டும் மழையிலும் விஜய் நட்சத்திர கொண்டாட்டம் நிகழ்ச்சியை கண்டு ரசித்த மக்கள்
Vijay Stars: நேயர்கள் மழை விடும் வரை தங்களது இருக்கைகளை கையில் தூக்கி தலையில் வைத்து கொண்டு நிகழ்ச்சியை ரசித்த வண்ணம் இருந்தனர். இதனால் அங்கு ஆரவாரமாகவும் கொண்டாட்டமாகவும் இருந்தது.

விழுப்புரம்: விஜய் டிவியின், விஜய் நட்சத்திர கொண்டாட்டம் நிகழ்ச்சி கடந்த சில வாரங்களாக தமிழகத்தின் பல மாவட்டங்களில் பிரம்மாண்டமாக நடைபெற்றுவந்து கொண்டு இருக்கிறது. இதில் விஜய் டிவியின் மெகாதொடர் நட்சந்திரங்கள் மற்றும் சூப்பர் சிங்கர் , கலக்கப்போவது யாரு போன்ற நேயர்களின் அபிமான நிகழ்ச்சியின் போட்டியாளர்கள் கலந்துகொண்டு வருகின்றனர்.
7 மாவட்டங்களில் நடந்த நிகழ்ச்சி
தூத்துக்குடியில் ஆரம்பித்து நாகர்கோயில், விருதாச்சலம், கும்பகோணம், திருப்பூர், ஈரோடு , விழுப்புரம், திருவண்ணாமலை போன்ற இடங்களில் இதுவரை இந்த நிகழ்ச்சி நடைபெற்று முடிந்துள்ளது.
பாக்கியலட்சுமி தொடர் குழு
விஜய் டிவியின் பிரபல முகங்களான பாக்கியலட்சுமி தொடரின் நாயகி பாக்கியலட்சுமி (சுசித்ரா), பணிவிழும் மலர்வனம் தொடரின் வினுஷா தேவி, வீட்டுக்கு வீடு வாசப்படி தொடரின் திரவியம், ஆர்த்தி சுபாஷ், சின்ன மருமகள் தொடரின் தமிழ்செல்வி (ஸ்வேதா), மகாநதி தொடரின் காவேரி (லட்சுமி பிரியா) விஜய், முத்தழகு தொடரின் முத்தழகு (ஷோபனா), பூமிநாதன், சூப்பர் சிங்கர் நிகழ்ச்சின் வெற்றியாளர் ஜான், கலக்கப்போவது யாரு அமுதவாணன், என்று ஏராளமான நட்சத்திரங்கள் இந்த நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டனர்.