தமிழ் செய்திகள்  /  Entertainment  /  Pazhaya Joke Thangadurai's Tree Planting Video Goes Viral

Video: ரஜினியிடம் வாழ்த்து..விவேக் பாணியில் தரமான சம்பவம் செய்த கடிஜோக் தங்கதுரை!

Karthikeyan S HT Tamil
Jan 04, 2024 09:31 PM IST

சமூக வலைத்தளங்களில் மிகவும் ஆக்டிவாக இருக்கும் காமெடி நடிகா் தங்கதுரை தற்போது தனது எக்ஸ் தளத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டிருக்கிறாா்.

ரஜினிகாந்த், தங்கதுரை
ரஜினிகாந்த், தங்கதுரை

ட்ரெண்டிங் செய்திகள்

காமெடி நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான தங்கதுரை, தமிழில் எங்கேயும் எப்போதும், மாநகரம், அட்டகத்தி போன்ற பல படங்களில் காமெடி வேடங்களில் தோன்றி அசத்தியுள்ளாா். இவருடைய கேரியாில் சார்ப்பட்டா பரம்பரை நல்ல வரவேற்பை பெற்றுதந்தது.

சமூக வலைத்தளங்களில் மிகவும் ஆக்டிவாக இருக்கும் தங்கதுரை தற்போது தனது எக்ஸ் தளத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டிருக்கிறாா். அந்த வீடியோ பதிவில், "கடந்த சில மாதங்களுக்கு முன் பசுமை நாயகன் நடிகர் விவேக் சாரின் மரம் வளர்ப்பை மக்களிடம் எடுத்துச் செல்லலாம் என முடிவெடுத்தேன். இதை தலைவர் ரஜினி சாரிடம் சொல்லி வாழ்த்து பெற்று இந்த வருடத்தில் இருந்து மரம் வளர்ப்பை ஆரம்பித்திருக்கிறேன். அப்துல்கலாம் ஐயா வழியில் விவேக் சாரின் ஆசியோடு தொடர்ந்து வருடத்துக்கு குறைந்தது 30,000 மரக்கன்றுகள் நட இருக்கிறேன். உத்வேகம் கொடுத்த மக்களுக்கு நன்றி. மரம் வளர்ப்போம், இயற்கை வளம் காப்போம்." எனப் பதிவிட்டுள்ளார்.

இதுகுறித்து மேலும் அவர் கூறுகையில், நடிகர் விவேக் வழியில் மரம் வளர்ப்பு குறித்து மக்களிடம் எடுத்து செல்ல முடிவெடுத்துள்ளதாகவும், இதுபற்றி நடிகர் ரஜினிகாந்திடம் சொல்லி வாழ்த்து பெற்று இனி வருடத்திற்கு குறைந்தது 30,000 மரக்கன்றுகள் நட திட்டமிட்டுள்ளதாகவும் நடிகா் தங்கதுரை தெரிவித்துள்ளாா். தங்கதுரையின் அந்த வீடியோவிற்கு மக்களின் பாராட்டும் வாழ்த்தும் குவிந்துவருகிறது.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

WhatsApp channel

டாபிக்ஸ்

பொழுதுபோக்கு மற்றும் பிக்பாஸ் , கோலிவுட் தொடர்பான அப்டேட் செய்திகளை இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் மூலம் உடனுக்குடன் அறியலாம்.