அல்லுவை மறைமுகமாக தாக்கிய பவர் ஸ்டார்.. சந்தோஷம் சோகமாக மாறக்கூடாது என்றும் கருத்து!
சினிமா நிகழ்ச்சிக்கு நான் வரும்போது ரசிகர்களுக்கு சின்ன காயம் ஆனாலும் எனக்கு வலிக்கும். சந்தோஷம் துக்கமா மாறக் கூடாதுன்னு சினிமா நிகழ்ச்சிக்களுக்கு நான் அதிகம் போவதில்லை என பவண் கல்யான் பேசியுள்ளார்.

பிரம்மாண்ட இயக்குநர் ஷங்கரின் முதல் நேரடி தெலுங்கு படமாக உருவாகியுள்ளது கேம் சேஞ்சர். ராம் சரண் இரட்டை வேடத்தில் நடிக்கும் இந்தப் படத்தில், கியாரா அத்வானி கதாநாயகியாக நடிக்கிறார். மேலும், அஞ்சலி, எஸ்.ஜே.சூர்யா போன்றோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கின்றனர்.
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வரும் ஜனவரி 10ம் தேதி ரிலீஸ் ஆகும் இந்தப் படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சி நேற்று ஆந்திர மாநிலம் ராஜமுந்திரியில் நடைபெற்றது. இதில், நடிகரும், ஆந்திர துணை முதல்வருமான பவர் ஸ்டார் பவண் கல்யாண் கலந்து கொண்டார்.
பிளாக்ல டிக்கெட் வாங்கினேன்
அப்போது அவர் நிகழ்ச்சியில் பேசுகையில், "நான் ரொம்ப கம்மியாத்தான் தியேட்டருக்கு போய் சினிமா பார்ப்பேன். ஷங்கர் எடுத்த ஜென்டில்மேன் படத்தை சென்னையில பிளாக்கில டிக்கெட் வாங்கி தியேட்டர்ல பார்த்தேன். அப்போ எனக்கு நான் நடிகர் ஆவேன்னு கூட தெரியாது.
