தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Pawan Kalyan: ஆந்திர மக்களின் செழிப்பு..! வராஹி அம்மனை வேண்டி பவன் கல்யாண் 11 நாள்கள் உண்ணாவிரதம்

Pawan Kalyan: ஆந்திர மக்களின் செழிப்பு..! வராஹி அம்மனை வேண்டி பவன் கல்யாண் 11 நாள்கள் உண்ணாவிரதம்

Muthu Vinayagam Kosalairaman HT Tamil
Jun 27, 2024 11:30 PM IST

ஆந்திர மக்களின் செழிப்பு வேண்டி வராஹி அம்மனை வேண்டி பவன் கல்யாண் 11 நாள்கள் உண்ணாவிரதம் இருந்து வருகிறார்.

வராஹி அம்மனை வேண்டி பவன் கல்யாண் 11 நாள்கள் உண்ணாவிரதம்
வராஹி அம்மனை வேண்டி பவன் கல்யாண் 11 நாள்கள் உண்ணாவிரதம்

ட்ரெண்டிங் செய்திகள்

சமீபத்தில் நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் போது, ஆந்திரா மாநிலத்துக்கு சட்டப்பேரவை தேர்தலும் நடைபெற்றது. இதில் எதிர்கட்சியாக இருந்த தெலுங்கு தேசத்துடன், பவன் கல்யாணின் ஜன சேனா கட்சி கூட்டணி வைத்து 21 தொகுதிகளில் போட்டியிட்டது. இதையடுத்து போட்டியிட்ட 21 இடங்களிலும் வெற்றி பெற்றது.

துணை முதலமைச்சர் பதவி

இதைத்தொடர்ந்து இந்த மாத தொடக்கத்தில் நடிகர் பவன் கல்யாண், ஆந்திராவின் துணை முதலமைச்சராக பொறுப்பேற்றார். இதையடுத்து ஆந்திர மக்களும், மாநிலமும் வளம் பெற வேண்டி 11 நாள்கள் பவன் கல்யாண் உண்ணாவிரதம் இருந்து வருகிறார்.

ஆன்மிக பாதை

பவன் தனது மாநில மக்களின் மகிழ்ச்சி, செழிப்பு மற்றும் நலனுக்காக உண்ணாவிரதத்தில் அமர்ந்துள்ளார். ஜூன் 26 (புதன்கிழமை) தொடங்கியிருக்கும் இந்த உன்னாவிரதத்தை, 11 நாள்கள் வரை தொடரவுள்ளாராம். நடைபெறும் வராஹி தீக்ஷை அவர் செய்வதாக கூறப்படுகிறது. அதன்படி, 11 நாட்கள் உண்ணாவிரதம் இருப்பார்.

வராஹி அம்மனுக்கு விரதம் இருந்து அவரை வழிபடுகிறார் வாராஹி தீட்சை என்ற நோன்பை கடைப்பிடிக்கிறார். இந்த விரதத்தின் விதிகள் கடினமானவை எனவும், கடந்த ஆண்டு ஜூன் 2023இல், அவர் இதேபோல் வராஹி தேவியை வணங்கி விரதம் இருந்துள்ளார்.

வராஹி அம்மன் தீட்சை என்றால் என்ன?

வராஹி அம்மன் தீட்சை தெலுங்கில் ஆஷாத மாதத்தில் அனுசரிக்கப்படுகிறது. தீட்சை ஒன்பது அல்லது பதினோரு நாட்கள் செய்யப்படுகிறது. தீட்சை பெறும் நபர் வழக்கமான உணவை சாப்பிடுவதைத் தவிர்த்து, 'சாத்விக் உணவை' தேர்வு செய்ய வேண்டும். அதன்படி, பால், பழம் மற்றும் பழங்கள் மட்டும் எடுத்துக்கொள்வார்.

இந்த விரதத்தில் இருக்கும் நபர், வெறும் தரையில் தூங்க வேண்டும், வெறுங்காலுடன் இருக்க வேண்டும். அசைவ பொருள்கள் மற்றும் மதுவை தவிர்க்க வேண்டும் என்றும் நம்பப்படுகிறது.

பவன் கல்யாண் படங்கள்

முன்னதாக, பவன் கல்யாண் பதவியேற்ற பின்னர்,பிரபலங்கள் பலரும் தங்களது வாழ்த்துக்களை அவருக்கு தெரிவித்தனர். ஜனசேனா கட்சி, ஆந்திர மாநில சட்டப்பேரவை தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அங்கம் வகித்தது. தனது கட்சியான ஜனசேனாவை 2014ஆம் ஆண்டில் பவன் கல்யாண் நிறுவினார்.

1996ஆம் ஆண்டில் வெளியான அக்கடா அம்மாயி இக்கட அப்பாயி என்ற படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார் பவன் கல்யாண். துலி பிரேமா, கப்பார் சிங், அட்டாரிண்டிகி தரேதி போன்ற பல சூப்பர் ஹிட் படங்களில் நடித்துள்ளார்.

கடைசியாக இவரது நடிப்பில் ப்ரோ என்ற படம் கடந்த ஆண்டில் வெளியாகி வெற்றி பெற்றது. இந்த படத்தை சமுத்திரகனி இயக்கியிருந்தார். 

தற்போது பவன் கல்யாண் ஓஜி, உஸ்தாத் கப்பர் சிங், ஹரி ஹர வீர மல்லு ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

ஹிந்துஸ்தான் தமிழ் வாட்ஸ் அப் குடும்பத்தில் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்.

 

WhatsApp channel

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.