தமிழ் செய்திகள்  /  Entertainment  /  Pavani Opens About Ameer Dedication Level In Dance

அமீர் காலுக்கு என்ன ஆச்சு? - பாவனி விளக்கம்

Aarthi V HT Tamil
Aug 17, 2022 11:17 AM IST

அமீர் காலில் காயம் ஏற்பட்டும் அவர் நடனமாடியது குறித்து பாவனி நெகிழ்ச்சியாக பதிவு வெளியிட்டுள்ளார்.

அமீர் - பாவனி
அமீர் - பாவனி

ட்ரெண்டிங் செய்திகள்

இதில் அனைவரின் விருப்பமான ஜோடியாக அமீர், பாவனி வலம் வருகின்றனர். நிஜத்திலும் இவர்கள் ஜோடியாக மாற வேண்டும் என்பதே அனைவரின் ஆசையாக உள்ளது. இதனிடையே கடந்த வாரம் திருமண வாரம் நடைபெற்றது.

இதில் அமீர், பாவனி மணக்கோலத்தில் வர, மேளம் கொட்டி, தாலி கட்டிய காட்சி இடம் பெற்றது. இதைப் பார்த்த ரசிகர்கள் விரைவில் இது உண்மையாக வேண்டும் என விரும்புவதாக தெரிவித்தனர்.

அமீர் காலில் காயம் ஏற்பட்டும் இதில் நடனமாடியுள்ளார். இது தொடர்பாக பாவனி தனது சமூக வலைதளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டு உள்ளார். அதில், “அமீர் கிடைத்ததற்கு நான் உண்மையிலேயே ஒரு அதிர்ஷ்டசாலி.

போட்டியாளராக உங்களைப் போன்ற ஒரு சிறந்த நடன இயக்குநரையும், ஒரு மாஸ்டரையும் பெற்றேன். என் கனவிலும் நடனமாடுவதைப் பற்றி நினைத்துப் பார்க்க முடியவில்லை. பயிற்சிக்கு ஒரே ஒரு நாள் மட்டுமே கிடைத்தாலும், பயமின்றி நடனமாட முடியும். இதை விட யாரும் சிறப்பாக என்னை உருவாக்க முடியாது.

கடுமையான முழங்காலில் காயம் ஏற்பட்டதால், நீங்கள் விடுப்பு எடுக்கும் வாய்ப்பு கிடைத்தது. நாற்காலியில் அமர்ந்து நிகழ்ச்சி நடத்த சேனல் உங்களுக்கு வாய்ப்பளித்தது.

ஆனால் நீங்கள் இன்னும் கைவிடவில்லை. எப்போதும் போல் உங்களை நம்பியவர்களுக்காக நடனமாட வேண்டும் என முடிவு எடுத்தீர்கள். ஒரு வேலைக்கான அர்ப்பணிப்பு கொடுக்கப்பட்டவுடன் என்னிடம் சொல்லுங்கள், பின்னர் எதுவும் நடக்கட்டும், அதை ஒருபோதும் நடுவில் விட்டுவிடாதீர்கள் என என்னிடம் பல முறை சொல்லி இருக்கிறீர்கள்.

உங்கள் பணிக்கான கடின உழைப்பு மற்றும் அர்ப்பணிப்புக்காக உங்கள் மீது மிகுந்த மரியாதை வைத்து இருக்கிறேன். இறுதியாக உண்மையில் உங்களை மகிழ்விப்பதற்காகவே நாங்கள் நிகழ்த்த நினைத்தோம். இது எங்களின் சிறந்த விஷயமாக இருக்காது என்று எங்களுக்குத் தெரியும், ஆனால் நண்பர்களே இதை மறக்கமுடியாத ஒன்றாக மாற்றியுள்ளீர்கள். எங்கள் மீது பொழிந்த அன்பிற்கு நன்றி, உங்களுக்காக இன்னும் அதிகமாகச் செய்ய வேண்டும் என்ற உணர்வு ஏற்படுகிறது” எனக் குறிப்பிட்டு உள்ளார்.

IPL_Entry_Point

டாபிக்ஸ்