தமிழ் செய்திகள்  /  Entertainment  /  Pathuthalafdfs: Arts Belong To Everyone- G.viprakash Condemned!!

PathuThalaFDFS: கலைகள் அனைவருக்கும் சொந்தமானது-ஜி.வி.பிரகாஷ் கண்டனம்!

Pandeeswari Gurusamy HT Tamil
Mar 30, 2023 12:20 PM IST

G.V.Prakash Kumar: முதலில் அனுமதிக்க மறுத்தததை எவ்விதத்திலும் ஏற்றுக்கொள்ள இயலாது. கலைகள் அனைவருக்கும் சொந்தமானது.

ஜி.வி.பிரகாஷ்
ஜி.வி.பிரகாஷ்

ட்ரெண்டிங் செய்திகள்

சென்னை ரோகிணி திரையரங்கில் பத்து தல படத்தின் முதல் காட்சிக்கு டிக்கெட் இருந்தும் நரிக்குறவர் சமூகத்தை சேர்ந்த இருவரை உள்ளே விட மறுத்த ரோகிணி திரையரங்க ஊழியர்கள் மறுத்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து சமூக வலை இதனால் அப்பகுதியில் சிறிய சலசலப்பு ஏற்பட்டது. இதற்கு சமூக வலை தளங்களில் பலர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

ரோஹிணி திரையரங்கம் விளக்கம்

பத்து தல படம் U/A சென்சார் பெற்றது என்பதால் 4 சிறார்களுடன் வந்த நரிக்குறவ சமூகத்தினரை படம் பார்க்க அனுமதிக்கவில்லை என ரோஹிணி திரையரங்கம் விளக்கம் அளித்திருந்தது. இந்நிலையில் U/A சென்சார் என்றால் படத்தை பெற்றோருடன் சிறார்கள் பார்க்க அனுமதி என்றுதான் அரத்தம் என ரசிகர்கள் கருத்துக்ககளை பதிவிட்டு வருகின்றனர்.

நடிகர் ஜி.வி பிரகாஷ் கண்டனம்

இந்நிலையில் நடிகரும், இசையமைப்பாளருமான ஜி.வி.பிரகாஷ் தனது டுவிட்டர் பதிவில் கடும் கண்டனம்தெவித்துள்ளார். அதில், "அந்த சகோதரியும் சகோதரர்களும் பின் தாமதமாக அனுமதிக்கப்பட்டதாக விவரம் தெரிகிறது , எனினும் முதலில் அனுமதிக்க மறுத்தததை எவ்விதத்திலும் ஏற்றுக்கொள்ள இயலாது. கலைகள் அனைவருக்கும் சொந்தமானது" என்று தெரிவித்துள்ளார்.

முன்னதாக சிம்பு நடிப்பில் உருவாகிருக்கும் பத்து தல திரைப்படம் உலகம் முழுவதும் இன்று பிரமாண்டமாக வெளியானது. கன்னடத்தில் சூப்பர் ஹிட்டான மஃப்டி படத்தின் ரீமேக்காக இந்தப் படம் உருவாக்கப்பட்டுள்ளது. கெளதம் கார்த்திக், கெளதம் கார்த்திக் முக்கியத்துவம் வாய்ந்த கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். கதையின் நாயகியாக பிரியா பவானி ஷங்கர் தோன்றுகிறார். அனுசித்தாரா, கலையரசன், ரெடிங் கிங்ஸ்லீ, நமோ நாரயணா உள்பட பலரும் நடித்துள்ளார்.

நடிகர் ஆர்யாவின் மனைவியும், நடிகையுமான சாயிஷா சைகல் ராவடி என்ற பாடலுக்கு ஐடம் டான்ஸ் ஆடியுள்ளார். இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான் இசையில் அனைத்து பாடல்களும் சூப்பர் ஹிட்டான நிலையில், படம் மீது மிகப் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

சில்லுனு ஒரு காதல், நெடுஞ்சாலை படங்களை இயக்கி ஓபில் என் கிருஷ்ணா படத்தை இயக்கியுள்ளார். ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படம் உலகம் முழுவதும் இன்று வெளியாகும் நிலையில் படத்தின் ரிலீஸை சிம்புவின் ரசிகர்களை கோலாகலமாக கொண்டாடி வருகிறார்.

முன்னணி ஹீரோக்களின் படங்கள் காலை 5 மணிக்கே முதல் காட்சி திரையிடப்படும் ட்ரெண்ட் கோலிவுட்டில் கடைப்பிடிக்கப்பட்டு வரும் நிலையில், வழக்கம் போல் 8 மணிக்கு முதல் காட்சி திரையிடப்படப்பட்டுள்ளது.

IPL_Entry_Point

டாபிக்ஸ்