Parvathy thiruvothu: ‘7 வருஷம் ஒரு படம் கூட ஓடல.. நல்ல நடிகைன்னு ஒருத்தன் சொல்லல..’ - பார்வதி எமோஷனல் பேட்டி!
Parvathy thiruvothu: நான் திரைத்துறைக்கு வந்து கிட்டத்தட்ட 18 வருடங்கள் ஆகிவிட்டன. முதல் ஏழு வருடங்களில் எனக்கு வெற்றிப் படங்களே கிடையாது. பாக்ஸ் ஆபிஸ் வெற்றி என்றால் என்னவென்றே தெரியாது. என்னை நல்ல நடிகை என்று யாரும் சொன்னது கிடையாது. -

நடிகை பார்வதி, தன்னுடைய பர்சனல் வாழ்க்கை குறித்து தொகுப்பாளர் ரம்யா யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில் பேசி இருக்கிறார்.
நான் ஒரு முரட்டு சிங்கிள்
இது குறித்து அவர் பேசும் போது, “ இப்போதில் இருந்து இன்னும் ஒரு 11 வருடங்கள் கழிந்தால், வாழ்க்கை குறித்தான என்னுடைய பார்வை என்பது முற்றிலுமாக மாறி இருக்கும். இப்போது கூட நான் தனியாகதான் இருக்கிறேன். அதற்காக நான் காதலித்து பிரேக்கப் செய்து கொண்டு, தனியாக இருக்கிறேன் என்று அர்த்தம் அல்ல. நான் ஒரு முரட்டு சிங்கிள்.
இப்போதும் நான் சாதாரணமாக மருந்து கடைக்குச் சென்று, எனக்கு தேவையான மருந்துகளை வாங்கிக் கொள்கிறேன். மக்கள், நீங்கள் எந்தவிதமாக உங்களை வெளிப்படுத்துகிறீகளோ, அப்படித்தான் உங்களை அணுகுவார்கள். என்னைப் பற்றி மக்கள் கொஞ்சம் ஆர்வமாக இருக்க வேண்டும் என்றால், அதற்கு தேவையான விஷயங்களை பி. ஆர் மூலமாக நான் செய்து விடுவேன். ஆனால் இன்றைய தினம் எல்லாமே ஒரு திறந்த புத்தகம்தான். நாம் மக்களிடம் இருந்து எதையும் மறைக்க முடியாது. எல்லா திட்டமும் அவர்களுக்குத் தெரியும்.