தமிழ் செய்திகள்  /  Entertainment  /  Parthiban Unique Gifts In Kalaignar 100

Parthiban: கலைஞர் 100 விழா.. பார்த்திபன் செய்த தரமான செயல்!

Aarthi Balaji HT Tamil
Jan 07, 2024 10:30 AM IST

இயக்குநர் பார்த்திபன், கலைஞர் 100 விழாவில் வித்தியாசமான பரிசு ஒன்றை வழங்கினார்.

பார்த்திபன்
பார்த்திபன்

ட்ரெண்டிங் செய்திகள்

இவ்விழாவில் நடிகர் ரஜினிகாந்த், கமல் ஹாசன், சூர்யா, வடிவேல், கார்த்தி, தனுஷ், சிவகார்த்திகேயன், கன்னட ஸ்டார் சிவராஜ்குமார் மற்றும் நடிகை நயன்தாரா, உள்ளிட்ட பல திரைக்கலைஞர்கள் கலந்து கொண்டார்கள்.

இந்த விழாவில் கலந்து கொண்ட முதலைமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு, தமிழ் திரைப்பட தயாரிப்பளர் சங்கம் சார்பாக நினைவு பரிசு வழங்கப்பட்டது. பரீட்சை அட்டையில் ஒரு பேப்பர் வைக்கப்பட்டு இருந்தது.

அதில், " ஐயா! ஐயமில்லை. காற்றுள்ள வரை தமிழும், தமிழ் உள்ள வரை தங்களின் நினைவும் நிலைக்கும். கலைஞர் 100 அல்ல, கலைஞர் 1000 கூட கொண்டாடுவோம். தங்களின் மறுபதிப்பாம் எங்களின் முதலமைச்சர் மாண்புமிகு முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்களுக்கு இப்பரிசினை வழங்கி உங்களின் வாழ்த்துகளை பெற்றுக் கொள்கிறோம்" என குறிப்பிடப்பட்டு இருந்தது.

இதனை பார்த்திபன் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு இருந்தார். அதில், “ கலைஞரின் நினைவாக நேற்று வழங்கிய பரிசு நான் வடிவமைத்து. இரு மரத்தை இழைத்து pad & paper ஆக்கியது திரு சண்முகம். அதில் பித்தளை க்ளிப்பை சொருகியது திரு கேசவன்.

என் பெயரை அதில் பொறிக்காமலே சிலர் கேட்டார்கள் “இது நீங்கள் செய்ததா?”வென. மகிழ்ச்சி.நேரமின்மையால் நான் பேசா விட்டாலும் என் குரல் k s ரவிக்குமார் நாடகத்தில் ஒலித்தது.

சரி.. அடுத்து.. ஞாயிறு : ஓய்வெடுக்க அல்ல!எனக்கு வேலையிருக்கு நிறைய” எனக் குறிப்பிட்டு உள்ளார். பார்த்திபனின் பதிவு சமூக வலைதளங்களில் வைரலாகிறது.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

ஹிந்துஸ்தான் தமிழ் வாட்ஸ் அப் குடும்பத்தில் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்.

WhatsApp channel

டாபிக்ஸ்

பொழுதுபோக்கு மற்றும் பிக்பாஸ் , கோலிவுட் தொடர்பான அப்டேட் செய்திகளை இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் மூலம் உடனுக்குடன் அறியலாம்.