Parthiban And Vadivelu: “இங்கு நல்ல காமெடிகள் செய்யப்படும்..!” மீண்டும் இணையும் பார்த்திபன் - வடிவேலு காம்போ?
மீண்டும் இணைந்து நடிப்பது குறித்து பார்த்திபன் - வடிவேலு ஆகியோர் உரையாடல் நிகழ்த்தியுள்ளனர். எனவே விரைவில் தமிழ் சினிமாவில் இந்த காம்போ கம்பேக் கொடுப்பதற்கு சூழல் உருவாகியுள்ளது.
ஹாலிவுட் சினிமாவில் லாரன் - ஹார்டி போல் கோலிவுட் சினிமாவில் கவுண்டமணி - செந்தில் ஆகியோர் இரட்டை காமெடியர்களாக ஏராளமான படங்களில் ரசிகர்களை குலுங்க குலுங்க சிரிக்க வைத்தார்கள்.
ஆனால் ஒரு ஹீரோவும், காமெடியுனும் இணைந்து சில தரமான காமெடிக்களாக ரசிகர்களை குஷிப்படுத்தியது பார்த்திபன் - வடிவேலு கூட்டணி.
குண்டக்கா மண்டக்கான்னா என்ன?காமெடி தொடங்கி இங்கு நல்ல மீன்கள் விற்க்கப்படும் என இந்த காம்போவின் எண்ணற்ற காமெடிகள் இன்றளவும் பலரது வயிற்றை கிச்சு கிச்சு மூட்டி வருகிறது.
இதையடுத்து இவர்கள் இருவரும் மீண்டும் இணைய இருப்பதற்கான வாய்ப்பு உருவாகி உள்ளது. கடந்த வாரம் சென்னையில் நடைபெற்ற கலைஞர் நூற்றாண்டு விழாவில் பங்கேற்றார் நடிகர் பார்த்திபன். அங்கு வடிவேலுடன் இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படத்தை தனது எக்ஸ் பக்த்தில் பகிர்ந்திருக்கும் பார்த்திபன், "நீண்ட இடைவெளிக்குப் பிறகு இருவரும் இணைந்து நடித்தால் ? என்பது பற்றி நீண்ட நேரம் பேசினோம். பார்க்கலாம் …. விரைவில் வந்தால்!இல்லாவிட்டாலும் பார்க்கலாம் எப்போது வந்தாலும்!!!" என குறிப்பிட்டுள்ளார்.
இதன்மூலம் இவர்கள் இணைவதற்கான சூழல் உருவாகியிருப்பதை வெளிப்படுத்தியுள்ளார் பார்த்திபன். ஒத்த செருப்பு, இரவின் நிழல் என சீரியஸான படங்களை இயக்கியிருக்கும் பார்த்திபன், விரைவில் வெளியாக இருக்கும் துருவ நட்சத்திரம் படத்திலும் சீரிஸ் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
எனவே அதிலிருந்து கொஞ்சம் பிரேக் எடுத்து ஜாலி மோடில் மாறுவதற்காகவும் அவர் இப்படி கூறியிருக்கலாம். இந்த கூட்டணி மீண்டும் இணைத்தால் தமிழ் சினிமாவில் தற்போது பின்பற்றப்பட்டு வரும் கிரிஞ்ச் காமெடி வகைகளை பார்ப்பதிலிருந்து ரசிகர்கள் விடுபடலாம்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
டாபிக்ஸ்