Tamil News  /  Entertainment  /  Parthiban Helps To Bonda Mani
போண்டா மணிக்கு உதவிய பார்த்திபன்
போண்டா மணிக்கு உதவிய பார்த்திபன்

Parthiban: போண்டா மணிக்கு உதவிய பார்த்திபன்

22 September 2022, 20:06 ISTAarthi V
  • Share on Twitter
  • Share on FaceBook
22 September 2022, 20:06 IST

உடல் நலம் பாதிக்கப்பட்ட போண்டா மணிக்கு, நடிகர் பார்த்திபன் உதவி செய்துள்ளார். 

ரன், சுந்தரா சுந்தரா டிராவல்ஸ், வின்னர், திருமலை உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். போண்டா மணிக்கு மாதவி என்ற மனைவியும், சாய்ராம் என்ற மகன், சாயம்மாள் என்ற மகளும் உள்ளனர்.

ட்ரெண்டிங் செய்திகள்

இவர் தனது இரண்டு சிறுநீரகங்களும் செயலிழந்து சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இவருக்கு மாற்று சிறுநீரகம் பொருத்தும் வரையில் சிகிச்சை அளிக்குமாறு மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் ஏற்பாடு செய்து வைத்து உள்ளார். 

இந்நிலையில் போண்டா மணிக்கு தொடர்ப்பு கொண்டு நடிகர் பார்த்திபன் நலம் விசாரித்து, உதவி செய்து வருகிறார். இது குறித்து அவர் கூறுகையில், ”நான் தகவல் கேள்விபட்டவுடன் மருத்துவர் பக்தவத்சலத்துடன் பேசினேன். போண்டா மணிக்கு என்ன தேவையோ அதை செய்ய இருப்பதாக கூறினார். 

அதன்படி தற்போது அவருக்கு டயாலிசிஸ் செய்யப்பட்டு வருகிறது. சனிக்கிழமை அவருக்கு சிறிய அறுவை சிகிச்சை செய்ய இருப்பதாக மருத்துவர் பக்தவத்சலம் கூறினார். 

முதற்கட்டமாக போண்ட மணியின் அன்றாடத் தேவைக்கு வேண்டிய பண உதவியை என்னுடைய மனிதநேய மன்றத்திலிருந்து செய்திருக்கிறேன். இன்னும் அவருக்கு வேண்டிய உதவிகளை செய்வேன்” என்றார்.

 

  • Share on Twitter
  • Share on FaceBook

டாபிக்ஸ்