Silambarasan: ‘THE MOST WANTED STUDENT’.. ஆஸ்கர் அகாடமி நூலக அங்கீகாரம் பெற்ற டைரக்டருடன் இணையும் சிம்பு - விபரம் உள்ளே
Silambarasan: சிலம்பரசன் பிறந்த நாள் ஸ்பெஷலாக அவரின் 49 வது படத்தின் அப்டேட் வெளியாகி இருக்கிறது. இந்தப்படத்தை டான் பிக்சர்ஸ் தயாரிக்கிறது.

Silambarasan: தமிழ் சினிமாவின் மிக முக்கியமான நடிகராக வலம் வந்து கொண்டிருந்த நடிகர் சிலம்பரசன் பர்சனல் பிரச்சினைகள் காரணமாக ஒருகட்டத்தில் சினிமா மீது பிடிப்பு இல்லாத நடிகராக மாறினார்.அதன் பலன் அவரது படங்கள் அடுத்தடுத்து தோல்வி கண்டன. கூடவே அவரின் உடல் எடையும் அளவுக்கதிமாக கூடியது.
உடல் எடையை குறைத்தார்
இந்த நிலையில் மீண்டும் உடல் எடையை குறைத்த அவர் அது தொடர்பான வீடியோவையும் வெளியிட்டார். அந்த வீடியோ வரவேற்பை பெற்ற நிலையில், இனி சினிமாவில் மிக உன்னிப்பாக கவனம் செலுத்தப்போவதாகவும், தனக்கான இடத்தை இனி விட்டுக்கொடுக்கப்போவதில்லை என்றும் பேசினார்.
உடல் எடையைக்குறைத்த பின்னர் அவர் நடிப்பில் வெளியான ‘ஈஸ்வரன்’ திரைப்படம் வரவேற்பு பெறவில்லை என்றாலும், அடுத்ததாக வெளியான ‘மாநாடு’ திரைப்படம் மிகப்பெரிய வெற்றிபெற்றது. அதனை தொடர்ந்து வெளியான ‘வெந்து தணிந்தது காடு’ ‘பத்து தல’ திரைப்படங்கள் சுமாரான வெற்றியைப்பெற்றன.