Parasakthi Title: மீண்டும் சிக்கல்.. டிஜிட்டலில் ரீ-ரிலீஸ்.. பராசக்தி டைட்டிலை பயன்படுத்த வேண்டாம் - நேஷனல் பிக்சர்ஸ்
Parasakthi Title Controversy: சிவாஜி கணேசனின் அற்புத நடிப்பில் ரசிகர்களை கவர்ந்த பராசக்தி பவள விழா காண இருக்கும் நிலையில் டிஜிட்டலில் ரீ-ரிலீஸ் செய்யப்பட இருக்கிறது. எனவே அந்த தலைப்பை யாரும் பயன்படுத்த வேண்டும் என படத்தை தயாரித்த நேஷனல் பிக்சர்ஸ் தெரிவித்துள்ளது.

சுதா கொங்காரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் 25வது படமாக உருவாகும் படத்துக்கு பராசக்தி என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இதன் டைட்டில் டீஸர் கடந்த இரு நாள்களுக்கு முன் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது.
கூடவே படத்தின் டைட்டில் தொடர்பாக சர்ச்சையும் எழுந்தது. மறைந்த நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் அறிமுக படமாகவும், மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் அனல் பறக்கும் வசனத்தில் தமிழ் சினிமாவில் கல்ட் கிளாசிக் படமாக இருந்து வரும் பராசக்தி படம் டைட்டில் உரிமையை விஜய் ஆண்டனியும் வைத்திருந்தார். தற்போது சிவகார்த்திகேயன் படத்துக்கும் அந்த டைட்டில் வைக்கப்பட்டிருப்பதால், இரு தரப்பினரும் பேசி சுமூகமான முடிவு எடுக்கப்பட்டது. இதை உறுதிபடுத்தும் விதமாக புதிய போஸ்டரும் வெளியிடப்பட்டது.
மீண்டும் சிக்கல்
இதைத்தொடர்ந்து சிவகார்த்திகேயன் படத்தின் பராசக்தி டைட்டிலும் தற்போது மீண்டும் சிக்கல் எழுந்துள்ளது. சிவாஜி கணேசன் நடித்த பராசக்தி படத்தை தயாரித்த நேஷனல் பிக்ஸர்ஸ் நிறுவனம் இந்த முறை சிவகார்த்திகேயன் படத்துக்கு சிக்கலை ஏற்படுத்தியுள்ளனர். தங்களது பராசக்தி படத்தை டிஜிட்டல் மயமாக்கி மீண்டும் ரிலீஸ் செய்ய இருப்பதாகவும், படத்தின் தலைப்பை வேறு யாரும் பயன்படுத்த கூடாது என நேஷனல் பிக்சர்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது
சிவாஜி கணேசனின் பராசக்தி டிஜிட்டலில் ரீ-ரிலீஸ்
இதுதொடர்பாக நேஷனல் பிக்சர்ஸ் நிறுவனம் அறிக்கையும் வெளயிட்டுள்ளது. அதில், நேஷனல் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் பெருமாள் முதலியார் பராசக்தி படத்தை தயாரித்துள்ளார். சில பகுதிகளின் விநியோக உரிமை மட்டுமே ஏவிஎம் வசம் இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது. கருணாநிதியின் கனல் தெறிக்கும் வசனங்களும், சிவாஜியின் உணர்ச்சிகரமான நடிப்பும் மக்கள் மனதில் நிலைத்து நிற்கும் நிலையில், விரைவில் பராசக்தி படம் பவள விழா காண உள்ளது.
பராசக்தி படத்தில் சிவாஜியை ஹீரோவாக நடிக்க வைக்க ஏவி மெய்யப்ப செட்டியார் ஆட்சேபனை தெரிவித்தார். ஆனால் பெருமாள் தான் பிடிவாதமாக சிவாஜியை ஹீரோவாக்க வேண்டும் என்று சொல்லி நடிக்க வைத்தார். தன்னுடைய இறுதிக்காலம்வரை சிவாஜி கணேசன், ஒவ்வொரு பொங்கல் அன்றும் வேலூர் வந்து பெருமாளிடம் ஆசி பெற்று செல்வார். அப்படி எங்கள் தாத்தாவின் பெருமைமிகு தயாரிப்புதான் பராசக்தி படம்
எனவே படத்தை டிஜிட்டல் ரீமாஸ்டரிங் செய்து விரைவில் வெளியிட திட்டமிட்டுள்ளோம். எனவே பராசக்தி படத்தின் தலைப்பை வேறு யாரும் தங்கள் படங்களுக்கு பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
இந்த அறிக்கையின் மூலம் பராசக்தி டைட்டிலுக்கு மீண்டும் சிக்கல் உருவாகியுள்ளது.
விஜய் ஆண்டனி சமரசம்
முன்னதாக, சிவகார்த்திகேயன் 25வது படத்துக்கு பராசக்தி என தலைப்பு வைக்கப்பட்ட நிலையில், இசையமைப்பாளரும், நடிகருமான விஜய் ஆண்டனி நடிக்கும் 25வது படத்துக்கு சக்தி திருமகன் என தலைப்பு வைக்கப்பட்ட நிலையில், படத்தின் தெலுங்கு பதிப்புக்கு பராஷக்தி என பெயர் வைக்கப்பட்டிருந்தது. இதில் கடந்த ஆண்டு ஜூலை மாதமே பராஷக்தி தலைப்பை பதிவு செய்ததாக விஜய் ஆண்டனி விளக்கம் அளித்தார். இந்த நேரத்தில் பராசக்தி தலைப்பை சிவகார்த்திகேயன் படத்துக்கு வழங்கியிருப்பதாக ஏவிஎம் நிறுவனம் அறிவித்தது.
அத்துடன் சிவகார்த்திகேயனின் பராசக்தி படத்தை தயாரிக்கும டான் பிக்சர்ஸ், விஜய் ஆண்டனி இடையே நடைபெற்ற பேச்சுவார்த்தை பட டைட்டில் விஷயத்தில் சுமுகமான முடிவு எடுக்கப்பட்டது. அதன் படி பராசக்தி டைட்டில் தொடர்பாக விஜய் ஆண்டனி சமரசம் செய்து கொண்டார். சிவகார்த்திகேயன் பராசக்தி டைட்டில் தமிழ் மற்றும் தெலுங்கு மொழியிலும், விஜய் ஆண்டனி நடிக்கும் படத்துக்கு சக்தி முருகன் தலைப்பு தமிழிலும், பராஷக்தி தலைப்பு இந்தி. மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளிலும், தெலுங்கில் இந்த படத்துக்கு வேறு தலைப்பும் வைக்கப்படும் என முடிவு எடுக்கப்பட்டது. இதன் பின்னர் "தமிழ் தீ பரவட்டும்" என்று கேப்ஷனுடன் சிவகார்த்திகேயன் நடிக்கும் பராசக்தி படத்தின் புதிய போஸ்டரும் வெளியிடப்பட்டது.
பராசக்தி உரிமை யாருக்கு உள்ளது
இதன் பின்னர் பராசக்தி டைட்டில் பிரச்னை முடிவுக்கு வந்ததாக கூறப்பட்ட நிலையில், தற்போது சிவாஜி கணேசன் நடித்த பராசக்தி படத்தை தயாரித்த நேஷனல் பிக்சர்ஸ் நிறுவனம் மூலம் மறுபடியும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. சிவாஜி கணேசனின் பராசக்தி படத்தை தயாரித்த நிறுவனம் என்ற அடிப்பபடையில் படத்தின் உரிமை தங்களிடம் இருப்பதாகவும், அந்த டைட்டிலை மற்றவர்கள் பயன்படுத்த கூடாது எனவும் தெரிவித்துள்ளது. நேஷனல் பிக்சர்ஸ் நிறுவனத்தின் இந்த அறிக்கையால் படத்தின் டைட்டில் பிரச்னையை கடந்து, தற்போது படத்தின் உரிமை யாரிடம் உள்ளது என்கிற கேள்வியும் எழுந்துள்ளது.

தொடர்புடையை செய்திகள்
டாபிக்ஸ்