Tamil News  /  Entertainment  /  Papri Ghosh Open Statement About Adjustment In Cinema

Papri Ghosh: படுக்கைக்கு அழைத்தால் ஓகே..உடனே இதை செய்ய தயார்.. ஷாக் கொடுத்த பாண்டவர் இல்லம் சீரியல் நடிகை பாப்ரி!

Aarthi Balaji HT Tamil
Jan 21, 2024 05:00 AM IST

Papri Ghosh Adjustment: நடிகை பாப்ரி கோஷ் சினிமாவில் நடிகைகள் சந்திக்கும் அட்ஜெஸ்மெண்ட் பிரச்னையை எப்படி எளிமையாக சமாளிக்க வேண்டும் என பேட்டி அளித்து உள்ளார்.

பாப்ரி கோஷ்
பாப்ரி கோஷ்

ட்ரெண்டிங் செய்திகள்

ஆனால் இப்போது முற்றிலும் மாறிவிட்டது. காலத்திற்கு ஏற்றார் போல் நடிகைகள் தங்கள் அனுபவித்த அட்ஜெஸ்மெண்ட் பற்றி துணிச்சலாக குரல் கொடுத்து வருகிறார்கள். நடிகைகள் பலரும் காஸ்டிங் கவுச் அனுபவத்தை மனம் திறந்து பேசினர். 

அந்த லிஸ்டில் புதியதாக நுழைந்து இருப்பவர் தான் நடிகை பாப்ரி கோஷ். தனது அனுபவங்களைப் பகிர்ந்துள்ளார். அது சமூக வலைத்தளங்களில் கவனத்தை ஈர்த்து இருக்கிறது.

இது தொடர்பாகக் கடந்த 2018 ஆம் ஆண்டு India glitz யூடியூப் சேனலில் அவர் அளித்த பேட்டியில், “அட்ஜெஸ்மெண்ட் பற்றி அனைவரும் பேசுவது மிகவும் தீவிரமான விஷயமாகப் பேசப்பட்டாலும், இந்தப் பிரச்னையை எதிர்கொள்ள மிக எளிமையான வழி இருக்கிறது.

அட்ஜஸ்ட் செய்தால் தான் படத்தில் வாய்ப்பு தருவதாக யாராவது என்னிடம் வந்து சொன்னால் வேண்டாம் என்று சொல்ல மாட்டேன்.எந்த மாற்றங்களுக்கும் நான் தயாராக இருக்கிறேன். என்னிடம் அப்படி கேட்ட அவரின் வீட்டிற்கு நான் நேரடியாகச் செல்வேன். அவரின் குடும்பத்தினர் முன்னிலையில் அந்த நபருக்கு நான் முத்தமிடுவேன். ஏன் இப்படி செய்தேன் என அவன் வீட்டில் உள்ளவர்கள் கேட்பார்கள்.

இப்படி செய்தால் படத்தில் வாய்ப்பு தருகிறேன் என அவர் சொன்னதைச் சொல்லிவிடுவேன். இப்படி அட்ஜஸ்ட் செய்ய ஆசைப்பட்டார் அதனால் தான் முத்தம் கொடுத்தேன் என சொல்லிவிடலாம். அந்த நபரை தனது குடும்பத்தினர் மரியாதையுடன் நடத்துவார்கள். இப்படி தான் இந்த விஷயத்தை நாம் கையாள வேண்டும் “ என்றார்.

நடிகை பாப்ரி கோஷ், பேசியதை பார்த்த நெட்டிசன்கள், பெண் என்றால் இப்படி தான் துணிச்சலாக இருக்க வேண்டும். மற்ற நடிகைகளும் இவரை போல் வெளியே துணிச்சலாக பேசினால் சினிமாவில் அட்ஜெஸ்மெண்ட் என்ற ஒரு கலாச்சாரம் இருக்கவே இருக்காது என கருத்து சொல்லி வருகிறார்கள். 

நடிகை பாப்ரி கோஷ் 2009 ஆம் ஆண்டு பெங்காலி திரைப்படமான கல்பேலாவில் அறிமுகமானார். இதனையடுத்து அப்படியே தமிழ் சினிமா பக்கம் திரும்பிவிட்டார். தமிழில் இவருக்கு முதலில் வாய்ப்பு கொடுத்தது என்றால் அது எஸ்.ஏ.சந்திரசேகர் தான். டூரிங் டாக்கீஸ் படத்தில் கவர்ச்சியான பாத்திரத்தில் நடித்து இருந்தார். பாப்ரி, தமிழில் பைரவா, சர்கார் மற்றும் விஸ்வாஸ் படங்களில் நடித்தார்.

கடைசியாக இவர், பைரவா படத்தில், விஜய் மற்றும் கீர்த்தி சுரேஷுடன் நடித்து இருந்தார்.

அதற்குப் பிறகு சினிமாவில் வாய்ப்பு கிடைக்காத காரணத்தினால், பாப்ரி கோஷ் சின்னதிரைக்கு வந்துவிட்டர். சொல்ல போனால் அவரை ரசிகர்கள் மனதில் நிற்க வைத்தது சீரியல் தான். 2018 முதல் 2020 வரை நாயகி தொடரில் நடித்தார். அதற்குப் பிறகு பாண்டவர் இல்லம் சீரியலில் நடித்தார். இந்த இரண்டுமே சூப்பர் டூப்பர் ஹிட்டானது. இந்த இரண்டு சீரியல்களும் சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பானது என்பது குறிப்பிடத்தக்கது.

நன்றி: Indiaglitz

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

ஹிந்துஸ்தான் தமிழ் வாட்ஸ் அப் குடும்பத்தில் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்.

WhatsApp channel

டாபிக்ஸ்

பொழுதுபோக்கு மற்றும் பிக்பாஸ் , கோலிவுட் தொடர்பான அப்டேட் செய்திகளை இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் மூலம் உடனுக்குடன் அறியலாம்.