ஒரு கிளைமாக்ஸ் காட்சிக்காக 120 நாள் ஷூட்டிங்.. 300 நாள் VFX வேலை.. என்ன படம் தெரியுமா?
பிரபாஸ் நடிக்கும் 'ராஜசாப்' படம் 2025 டிசம்பரில் திரைக்கு வர உள்ள நிலையில், படத்தின் ரிலீஸ் தாமதம் குறித்து தயாரிப்பாளர் விளக்கம் அளித்துள்ளார்.

ஹாரர் காமெடி ஜானரில் பான் இந்தியா ஸ்டார் பிரபாஸ் நடித்துள்ள திரைப்படம் ராஜா சாப். இந்தப் படத்தின் ரிலீஸிற்காக அவரது ரசிகர்கள் தொடர்ந்து காத்திருக்கும் நிலையில், ஒவ்வொரு முறையும் ரிலீஸ் தேதி தள்ளிப் போய்க்கொண்டே இருந்தது. இதற்கான காரணம் என்ன என்பது பற்றி, படத்தின் தயாரிப்பாளர் டீசர் வெளியீட்டு நிகழ்ச்சியில் பேசியுள்ளனர்.
தாமதத்திற்கு காரணம்
ராஜா சாப் படத்தின் டீசர் வெளியீட்டு நிகழ்வு திங்கள்கிழமை (ஜூன் 16) நடைபெற்றது. இதில் பேசிய படத்தின் தயாரிப்பாளர் விஸ்வபிரசாத், "படத்தின் இயக்குநர் மாருதி பட ஸ்கெட்யூல்டை எப்படி நிர்வகிக்க முடியும் என்று எனக்குத் தெரியவில்லை. படப்பிடிப்பு காலை 6 மணிக்குத் தொடங்கி இரவு 10 அல்லது 11 மணி வரை நீடித்தது. இது 120 நாட்கள் நீடித்தது. இது கிளைமாக்ஸ் ஷீட்டிங்கிற்கு மட்டுமே. ஏனென்றால் அந்த 120 நாட்களில் இருந்து 40 நிமிட கிளைமேக்ஸ் மட்டும் தான் எடுக்கப்பட்டது."