Ajith Kumar: ‘அவ்வளவு அவமானத்த பார்த்துருக்கேன்.. இதையெல்லாம் கடந்து’ - அஜித் வெள்ளை நரையோடு அலைய காரணம் தெரியுமா?
Ajith Kumar: மங்காத்தா படத்தில், அஜித் எடுத்த மிக முக்கியமான முடிவுகளில் ஒன்று; தன்னுடைய வெள்ளை நரையுடன் படத்தில் தோன்றுவது. கேட்பதற்கு சுவாரசியமாக இருந்தாலும், கொஞ்சம் பிசகினாலும் ரசிகர்கள் கிழவன் என்று சொல்லிவிட்டு சென்று விட வாய்ப்பு இருக்கிறது. -

நடிகர் அஜித்குமாருக்கு பத்மபூஷன் விருது அறிவிக்கப்பட்டு இருக்கிறது. இந்த நிலையில், அவரது வாழ்க்கையில், அவர் எடுத்த முக்கிய முடிவு குறித்தும், அதற்கான காரணம் குறித்தும் இங்கே பார்க்கலாம்
நடிகர் அஜித்குமாரின் கெரியரில் மிக முக்கியமான திரைப்படமாக அமைந்தது மங்காத்தா. இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கத்தில் வெளியான இந்தப்படம் அவரது கெரியர் மட்டுமல்லாமல், அஜித் சினிமா வாழ்க்கையிலும் மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தியது. அந்தப்படத்தில் முழுக்க, முழுக்க வில்லனாக அஜித் வெளிப்படுத்தி இருந்த நடிப்பு அனைவரையும் பிரமிக்க வைத்தது.
அந்தப்படத்தில் அஜித் எடுத்த மிக முக்கியமான முடிவுகளில் ஒன்று; தன்னுடைய வெள்ளை நரையுடன் படத்தில் தோன்றுவது. கேட்பதற்கு சுவாரசியமாக இருந்தாலும், கொஞ்சம் பிசகினாலும் ரசிகர்கள் கிழவன் என்று சொல்லிவிட்டு சென்று விட வாய்ப்பு இருக்கிறது. ஆனாலும், அந்த முடிவை தைரியமாக எடுத்தார் அஜித். அந்த முடிவை அவர் எடுத்ததிற்கான காரணத்தை கடந்த 11 வருடங்களுக்கு முன்னதாக விஜய் டிவி வெளியிட்டது. அந்த சுவாரசிய தகவலை பார்க்கலாம்.
காரணம் என்ன?
வெள்ளை நரையுடன் திரையில் தோன்றுவதற்கான காரணத்தைக் கேட்ட போது, ‘ நான் வேலைக்கு வந்து கிட்டத்தட்ட 26 வருடங்களுக்கு மேல் ஆகிவிட்டது. 16 வயதில் நான் என்னுடைய முதல் வேலையை தொடங்கினேன். இந்த 26 வருடத்திற்கு மேலான வாழ்க்கையில் நான் எத்தனையோ தோல்விகளை சந்தித்து இருக்கிறேன் எத்தனையோ வெற்றிகளை சந்தித்து இருக்கிறேன். எத்தனையோ அவமானங்களை சந்தித்து இருக்கிறேன். எத்தனையோ நம்பிக்கை துரோகங்களை சந்தித்து இருக்கிறேன். அதையெல்லாம் கடந்து வந்ததுதான் இந்த வெள்ளை நரை. இதை நான் மறைக்க வேண்டிய அவசியம் கிடையாது.' என்று கூறியிருக்கிறார்.
அஜித் வெங்கட் பிரபு கூட்டணி
அந்தப்படம் மிகப்பெரிய ஹிட்டான போதும், அதன் பின்னர் அஜித் - வெங்கட் பிரபு கூட்டணி இணைய வில்லை. அதற்கான காரணத்தை அண்மையில் கொடுத்த பேட்டி ஒன்றில் வெங்கட் பிரபு பேசி இருந்தார். அந்த பேட்டியை பார்க்கலாம்.
இது தொடர்பாக ப்ரோவோக் யூடியூப் சேனலுக்கு பேசிய வெங்கட் பிரபு, ‘சென்னை 28 படத்தைப் பார்த்த அஜித் சாருக்கு, அந்தப்படம் மிகவும் பிடித்து விட்டது. இதனையடுத்து, அப்போதே அவருடன் நான் படம் செய்வதற்காக, அவர் என்னை ஒரு தயாரிப்பாளரிடம் அனுப்பினார்; ஆனால், அந்த தயாரிப்பாளருக்கு ஒரு பெரிய ஸ்டாரை நான் வைத்து, எடுத்து விடுவேனா என்ற சந்தேகம் இருந்தது; அதனால் அப்போது அந்த படம் நடக்கவில்லை. ஆனால் அஜித் சார் என் மீது வைத்த நம்பிக்கையை விடவே இல்லை.
சரோஜா படம் வெளியான பின்னரும், அவர் நான் அவருடன் படம் செய்வதற்கு இன்னொரு தயாரிப்பாளரிடம் அனுப்பினார். ஆனால் அதுவும் வொர்க் அவுட் ஆகவில்லை; இதனையடுத்து தான் நாங்கள் மங்காத்தா திரைப்படத்தில் இணைந்தோம். அந்தப்படத்திற்கு பிறகு நானும் அவரும் இணைவதற்கு பல வாய்ப்புகள் வந்தன.
ஆனால் நான் என்னுடைய கமிட்மெண்டில் கொஞ்சம் பிசியாக இருந்தேன். அதனால் அவருடன் என்னால் படம் செய்ய முடியவில்லை. இதன் காரணமாக, அவர் என் மீது கோபமாக இருக்கிறார் என்று நினைக்கிறேன். அவருடன் நான் படம் செய்வதற்கு தயாராக இருக்கிறேன். அழைப்புக்காக காத்திருக்கிறேன்’ என்று பேசினார்.
அஜித்துடன் மங்காத்தா திரைப்படத்தில் வெங்கட் பிரபு இணைந்தார். அந்தப்படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது; அஜித்குமாருக்கும் அந்தப்படம் பெரிய திருப்புமுனையாக அமைந்தது. முழுக்க, முழுக்க வில்லனாக அஜித் குமார் மங்காத்தா படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்து இருந்தார். இந்தப்படத்திற்கு பிறகு அவர்கள் இருவரும் இணைவார்கள் என்று அனைவரும் எதிர்பார்த்தனர். ஆனால், அந்தக்கூட்டணி இணையவே இல்லை. இது பலருக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. இந்த நிலையில் அஜித் வெங்கட் பிரபு மீது கோபமாக இருப்பதாகவும், அதன் காரணமாகவே வெங்கட் பிரபுவை தன் அருகில் நெருங்கவிட வில்லை என்றும் தகவல் வெளியானது. இந்த நிலையில், அதனை அவரே விளக்கி இருக்கிறார்.

தொடர்புடையை செய்திகள்
டாபிக்ஸ்