சினிமாவில் இருந்து எப்போது ஓய்வு? - ‘நான் எதையும் சாதரணமாக எடுக்க விரும்பவில்லை’ - ஓப்பனாக பேசிய அஜித்குமார்!
மக்கள் தங்களது வாழ்க்கை குறித்து நொந்து கொள்கிறார்கள். என்னைப் பொறுத்தவரை காலை நாம் நல்லபடியாக கண்விழித்தாலே அதுவே மிகப்பெரிய ஆசீர்வாதம். நான் இதனை ஏதோ தத்துவவாதியாக நினைத்து சொல்ல வில்லை

சினிமாவில் இருந்து எப்போது ஓய்வு? - ‘நான் எதையும் சாதரணமாக எடுக்க விரும்பவில்லை’ - ஓப்பனாக பேசிய அஜித்குமார்!
இந்திய அரசின் உயரிய விருதான பத்மபூஷண் விருது அஜித்திற்கு வழங்கப்பட்டதை தொடர்ந்து, இந்தியா டுடே நிறுவனம் அஜித்தை பேட்டி எடுத்தது. பல வருடங்களாக பேட்டிக்கொடுக்காமல் இருந்த அஜித் அதில் பல்வேறு விஷயங்கள் குறித்து குறித்து பேசி இருக்கிறார். அதில் ஒரு பகுதியாக திரைத்துறையில் இருந்து ஓய்வு பெறுவது குறித்தும் பேசினார்.
இது குறித்து அவர் பேசும் பொது, ‘அதைப் பற்றி எனக்குத் தெரியாது. இது நான் எப்போது ஓய்வு பெற வேண்டும் என்று திட்டமிடுவது பற்றி அல்ல; நான் ஓய்வு பெற வேண்டிய கட்டாயத்தில் இருக்கலாம். ஆனால், நான் எதையும் சாதாரணமாக எடுத்துக்கொள்ள விரும்பவில்லை.