'நான் புகழுக்காக இல்ல கடனுக்காக நடிக்க வந்தேன்.. நான் இருட்டுல குதிக்குறேன்னு தெரியும்'- அஜித் ரீவைண்ட்
நடிகர் அஜித் குமார் அவரது முதல் மாடலிங் வேலைகள் மற்றும் அதன் மூலம் கிடைத்த பணத்தை என்ன செய்தார், எப்படி நடிக்க வந்தார் என்பதை சமீபத்தில் இந்தியா டுடேவிற்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார்.

'நான் புகழுக்காக இல்ல கடனுக்காக நடிக்க வந்தேன்.. நான் இருட்டுல குதிக்குறேன்னு தெரியும்'- அஜித் ரீவைண்ட்
பத்ம பூஷண் விருது பெற்ற நடிகர் அஜித் குமார், இந்தியா டுடேயின் பேட்டியில், தான் எப்படி ‘திடீர் நடிகர்’ ஆனார் என்பதைப் பகிர்ந்துள்ளார். அவருடைய பயணத்தை மிகவும் தீவிரமாக எடுத்துக் கொண்டதையும் கூறியுள்ளார்.
எனக்காக செலவு பண்ண முடியாதுன்னு சொன்னாங்க
பேட்டியில், "நடிப்பு என்னுடைய பிளானிலேயே இல்லை. நான் திடீர் நடிகர். ஸ்கூல் படித்து முடித்த பிறகு, ஆட்டோ உற்பத்தி நிறுவனத்தில் சுமார் ஆறு மாதங்கள் வேலை செய்தேன். 18 வயதில் மோட்டார் சைக்கிள் பந்தயத்தில் இறங்கினேன். என் அப்பா, இது மிகவும் செலவான விளையாட்டு, எங்களால் உனக்கு சப்போர்ட் செய்ய முடியாது, எனவே, உன் செலவுக்கு நீயே வழி கண்டுபிடிக்க வேண்டும் என்று சொன்னது எனக்கு நினைவிருக்கிறது.