Pa RanjithonRajinikanth: ‘தலித் அரசியலெல்லாம் ரஜினிக்கு’; கேள்விக்கு சிரித்த ரஞ்சித்; கோபத்தில் ரசிகர்கள்- நடந்தது என்ன?
இந்த இரு படங்களை இயக்கியதின் வாயிலாக, பொருளாதார அளவில் தேர்ந்த நிலையையும், மக்கள் மத்தியில் பிரபலமாகவும் மாறினார் இயக்குநர் ரஞ்சித்.

தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் என்று ரசிகர்களால் அழைக்கப்படுபவர் நடிகர் ரஜினிகாந்த். ஆரம்ப காலத்தில் இருந்தே அவர் தன்னை அரசியலில் முழுமையாக ஈடுபடுத்திக்கொள்ளவில்லை என்றாலும், அரசியலில் தன் குறித்த பார்வையை வெளிப்படுத்தாமலோ, அதிகாரத்தில் இருந்து தன்னை எதிர்த்தவர்களுக்கு பதிலடிகளை கொடுக்காமலோ இருந்ததில்லை. அவர் நிச்சயம் அரசியலுக்கு வருவார் என்று அவரது ரசிகர்கள் நீண்ட வருடங்களாக காத்துக்கொண்டிருந்த நிலையில், ஒரு கட்டத்தில் தான் அரசியலுக்கு வருவது உறுதி என்று தெரிவித்தார்.
தொடர்ந்து கட்சியை நிலைபடுத்துவது தொடர்பான நடவடிக்கைகளையும் ஒவ்வொன்றாக எடுத்து வந்தார். இதற்கிடையே அவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்ட நிலையில், மருத்துவர் ஆலோசனையின் அடிப்படையில் அரசியலில் இருந்து விலகுவதாக அறிவித்தார். அவரது இந்த முடிவு மக்கள் மத்தியில் கடுமையான விமர்சனங்களை பெற்றது. அதன் பின்னர் மேடை ஒன்றில் பேசிய ரஜினிகாந்த், உடல்நிலை மோசமானதன் காரணமாகவும், மருத்துவரின் எச்சரிக்கை காரணமாகவுமே தான் அரசியலில் இருந்து விலகியதாக கூறினார்.
அந்த காலக்கட்டத்தில் ரஜினிகாந்த் நடித்த படங்களும் தோல்வியை தழுவிக்கொண்டிருந்தன. அந்த சமயத்தில்தான், தலித் அரசியலை தன் படத்தில் பேசி வந்த இயக்குநர் பா.ரஞ்சித் உடன் ரஜினிகாந்த் இணைய இருப்பதாக அறிவிப்பு வெளியிடப்பட்டது.