Pa Ranjith: ‘அம்பேத்கர் ஜெயந்தி விழா சீன் பக்கத்த கிழிக்கச் சொன்னாங்க.. தனுஷ்தான் நான் ஆசைப்பட்ட ஹீரோ! -பா.ரஞ்சித்!
Pa Ranjith: என்னுடைய முதல் படத்திற்கான ஸ்கிரிப்ட்டை எழுதும் பொழுது அதில் அம்பேத்கர் ஜெயந்தியை கொண்டாடுவது போன்ற காட்சி ஒன்றை எழுதி இருந்தேன். - பா.ரஞ்சித்!
வாழை படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நேற்று நடந்தது. அந்த நிகழ்வில் பேசிய இயக்குநர் பா.ரஞ்சித் பல்வேறு விஷயங்களை பேசினார்.
மாரி செல்வராஜ் மீது பொறாமை
அவர் பேசும் போது, “எனக்கு மாரி செல்வராஜ் மேலிருக்கும் பொறாமையை விட, ராம்சாரின் மேல் இருக்கும் பொறாமைதான் அதிகம். காரணம் என்னவென்றால், ஒரு உதவி இயக்குநராக நாம் இருக்கும் பொழுது, நாம் எல்லாவற்றையும் வெளிப்படையாக பேசி விட முடியுமா என்ற கேள்வி இங்கு இருக்கிறது.
நான் உதவி இயக்குநராக பயணத்தை தொடங்கும் பொழுது, என்னுடைய படங்கள், என்னுடைய வாழ்க்கை பற்றித்தான் பேச வேண்டும் என்பதில் நான் உறுதியாக இருந்தேன். அப்படி இருக்கும் பொழுது இங்கிருக்கும் திரைப்படங்களைப் பற்றி விவாதிப்பது, இங்கிருக்கும் திரைப்பட மாஸ்டர்களை பற்றி பேசுவது உள்ளிட்ட இடங்களை, நான் தேடித்தேடி கண்டுபிடிக்க வேண்டிய நிலை இருந்தது.
உலகத்திரைப்படங்களில் தலித் சினிமா
உலக திரைப்படங்களில் இலக்கியங்களில் தலித் சினிமாக்கள் பற்றிய வாதங்கள், பேச்சுக்கள் இருந்தன. ஆனால், தமிழ் சினிமாவில் இருந்ததா என்றால் இல்லை என்று தான் சொல்ல வேண்டும். என்னுடைய முதல் படத்திற்கான ஸ்கிரிப்ட்டை எழுதும் பொழுது அதில் அம்பேத்கர் ஜெயந்தியை கொண்டாடுவது போன்ற காட்சி ஒன்றை எழுதி இருந்தேன்.
அதை படித்தவர்கள் நீங்கள் அந்த பக்கத்தை மட்டும் கிழித்துப் போட்டு விடுங்கள். இங்கு இருக்கும் தயாரிப்பாளர்கள் அதை அனுமதிக்க மாட்டார்கள் என்று என்னிடம் கூறினார்கள். அதனால் தான் நான் மிகவும் பிரபலமான தயாரிப்பாளர்கள் யாரிடமும் செல்லவே இல்லை. அதனால்தான் நான் எந்த ஒரு பிரபலமான ஹீரோவிடமும் செல்லவில்லை.
தனுஷ்தான் நான் செல்லஆசைப்பட்ட ஹீரோ
நான் செல்ல வேண்டும் என்ற ஆசைப்பட்ட ஹீரோ என்றால் அது தனுஷ்தான். ஆனால், அதிலும் எனக்கு ஒரு காலகட்டத்தில் உடன்பாடு இல்லாமல் ஆகி விட்டது. அப்படித்தான் என்னுடைய பயணம் சிக்கலாக இருந்தது. ஆனால், மாரி செல்வராஜுக்கு அப்படி இல்லை. மாரி செல்வராஜை ராம் சார் அவ்வளவு அழகாக படிப்பை நோக்கி வழி நடத்தி இருக்கிறார். உண்மையில் எனக்கு ராம் சார் கிடைத்திருந்தால், நானும் என்னுடைய முதல் படத்திலேயே என்னுடைய அரசியலை இன்னும் அழுத்தமாக பதிவு செய்திருப்பேன்.” என்று பேசினார்.
முன்னதாக, இந்தப்படத்தில் கலந்து கொண்ட மிஷ்கின் பேசும் போது, “ உண்மையில் மேடையில் பேசுவது போல போர் அடிக்கும் விஷயம் வேறு எதுவுமே கிடையாது. நான் கொட்டுக்காளி படத்தின் ட்ரெயிலர் வெளியீட்டு விழாவில் பெர்ஃபார்மன்ஸ் செய்தேன். நான் ஒரு சோகமான கோமாளி. ஆகையால் நான் கெட்ட வார்த்தைகளை பேசுவதை தயவு செய்து பொறுத்துக் கொள்ளுங்கள். நான் மேடையில் பேசுவதை பார்த்து விட்டு, நான் சரக்கு அடித்து விட்டு பேசுகிறேன் என்றெல்லாம் சொல்கிறார்கள்.
உண்மையில் நான் சரக்கடித்து நீண்ட நாட்கள் ஆகிவிட்டன. நான் தற்போது வொர்க் அவுட் செய்து கொண்டிருக்கிறேன். இந்தியாவில் முதலில் சிக்ஸ் பேக் கொண்ட டைரக்டராக நான் இருப்பேன். அதற்காக நான் ரெடியாகி கொண்டிருக்கிறேன்.” என்று பேசினார்.
பொறுப்புத் துறப்பு:
இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்களில் இருந்து சேகரித்து, உங்களுக்குத் தரப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
தொடர்புடையை செய்திகள்
டாபிக்ஸ்