தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Pa Ranjith: நான் நன்றி கெட்டவனா?… ‘ நம்ம சிரிப்பு அவ்வளவு பவர் ஃபுல்’ - ரஜினி ரசிகர்களுக்கு பா.ரஞ்சித் பதிலடி!

Pa Ranjith: நான் நன்றி கெட்டவனா?… ‘ நம்ம சிரிப்பு அவ்வளவு பவர் ஃபுல்’ - ரஜினி ரசிகர்களுக்கு பா.ரஞ்சித் பதிலடி!

Kalyani Pandiyan S HT Tamil
Apr 14, 2024 01:21 PM IST

அவரது நீலம் பண்பாட்டு மையம் சார்பில் பாபாசாகேப் அம்பேத்கர் பிறந்த மாதமான ஏப்ரல் மாதத்தை தலித் வரலாற்று மாதமாக கொண்டாடும் வகையில் சென்னையின் பல்வேறு இடங்களில் விழாக்கள் ஏற்பாடு செய்யப்பட்டு இருக்கின்றன.

பா.ரஞ்சித் பதிலடி!
பா.ரஞ்சித் பதிலடி!

ட்ரெண்டிங் செய்திகள்

இது குறித்து அவர் பேசும் போது, “உண்மையில் நாம் விழிப்புணர்வு கொண்ட சமூகமாக இருக்கிறோமா?, விழிப்புணர்வு ஏன் இல்லாமல் இருக்கிறது. நம்முடைய கலையை இன்னும் ஏன் பொது வெளி தளத்திற்கு கொண்டு செல்லாமல் இருக்கிறோம், நமக்குள் எது தடையாக இருக்கிறது, எதை தடையாக நினைக்கிறோம், உள்ளிட்ட கேள்விகளுக்கு பதில் தேட வேண்டிய காலகட்டமாக இது இருக்கிறது. 

சும்மா சிரித்ததற்கே பல பல அர்த்தங்களை சொல்லும் இடத்தில் இருக்கிறோம்.  அப்படியானால் நமது சிரிப்பு எவ்வளவு சக்தி வாய்ந்த ஒன்றாக இருக்கிறது என்பதை புரிந்து கொள்ள வேண்டிய தேவை இருக்கிறது. அதனால் நாம் ஒரு முக்கியமான காலகட்டத்தில் இருப்பதாக நம்புகிறேன். இந்த காலகட்டத்தில் நாம் விழிப்புணர்வு அடையவில்லை என்றால் எப்பொழுதுமே விழிப்புணர்வு அடைய முடியாது.” என்று பேசினார். 

நடந்தது என்ன? 

முன்னதாக, தலித் அரசியலை தன் படங்களில் பேசி வந்த இயக்குநர் பா.ரஞ்சித் உடன் ரஜினிகாந்த் இணைய இருப்பதாக அறிவிப்பு வெளியிடப்பட்டது.

இந்த அறிவிப்பு அனைவரையும் ஆச்சரியப்படுத்திய நிலையில், படத்தின் புரமோஷனையும் பிரமாண்டமாக செய்தார் அந்தப்படத்தின் தயாரிப்பாளர் தாணு. படத்தின் டீசரும் அதில் ரஜினிகாந்த் பேசிய ‘கபாலிடா’ என்ற வசனமும் மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

படம் எதிர்மறையான விமர்சனங்களை பெற்ற போதும், பாக்ஸ் ஆஃபிசில் நல்ல வசூலை பார்த்ததாக தயாரிப்பாளர் தாணு பேசி இருந்தார். இதையடுத்து, அடுத்ததாகவும் பா.ரஞ்சித் உடன் ‘காலா’ படத்தில் இணைந்தார் ரஜினிகாந்த். கபாலியை விட கொஞ்சம் கமர்சியலாக படம் எடுக்கப்பட்டிருந்தாலும், திரைப்படம் பெரிதான வரவேற்பை பெற வில்லை.

ஆனால், இந்த இரு படங்களை இயக்கியதின் வாயிலாக, பொருளாதார அளவில் தேர்ந்த நிலையையும், மக்கள் மத்தியில் பிரபலமாகவும் மாறினார் இயக்குநர் ரஞ்சித். அதனை தொடர்ந்து தலித் அரசியல் தொடர்பான திரைப்படங்களை தயாரிப்பது, கலை நிகழ்ச்சிகளை நடத்துவது, நூலகம் அமைத்து வாசிப்பை ஊக்கப்படுத்துவது, இசை நிகழ்ச்சி, திரைப்பட விழா உள்ளிட்ட பலவற்றை முன்னின்று செய்து வருகிறார்.

அந்த வகையில் அவரது நீலம் பண்பாட்டு மையம் சார்பில் பாபாசாகேப் அம்பேத்கர் பிறந்த மாதமான ஏப்ரல் மாதத்தை தலித் வரலாற்று மாதமாக கொண்டாடும் வகையில் சென்னையின் பல்வேறு இடங்களில் விழாக்கள் ஏற்பாடு செய்யப்பட்டு இருக்கின்றன.

இந்த விழா கடந்த 05.04.2024 அன்று தலித் வரலாற்று மாதக் கண்காட்சியுடன் துவங்கியது. தொடர்ந்து PK ரோசி திரைப்பட விழாவின் கடைசி நாளான கடந்த 10ம் தேதி, கலைஞர்கள் உரையாடினர். இதில் இயக்குநர் பா.ரஞ்சித்தும் கலந்து கொண்டார்.

அப்படியான விவாதம் ஒன்றில் ரஞ்சித் நடந்து கொண்ட விதம், ரஜினி ரசிகர்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தி இருக்கிறது. ஆம், அந்த விவாதத்தில் எதிர் தரப்பில் இருப்பவர் நீங்கள் உங்கள் அரசியலை ரஜினி வாயிலாகவே சொல்லி விட்டீர்கள். அவருக்கு நீங்கள் பேசும் அரசியல் புரிந்ததா? இல்லையா என்று கூட எனக்குத் தெரியவில்லை என்று சொல்ல, கூட்டத்தில் இருந்தவர்கள் சிரித்து கைத்தட்டினார்கள்.

ரஞ்சித்தும் அதற்கு மறுப்பு தெரிவிக்காமல் சிரித்தார். அவரது இந்த செயல்முறை ரஜினி ரசிகர்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. அதற்கு தற்போது ரஞ்சித் பதிலடி கொடுத்திருக்கிறார். 

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

IPL_Entry_Point

டாபிக்ஸ்