OTTplay Awards 2022: திருப்புமுனை நடிப்புக்கான விருதை வென்ற குரு சோமசுந்தரம்!
மதுரை மீனாட்சி அம்மன் கோயிலை பார்த்தால் உண்டாகும் பிரமிப்பை போன்ற உணர்வை மின்னல் முரளி படத்தின் கதையில் நடிக்க ஒப்பந்தமான பிறகு உணர்ந்தாக திருப்புமுனையை ஏற்படுத்திய நடிப்புக்கான ஓடிடிப்ளே விருது பெற்ற பின்னர் நடிகர் குரு சோமசுந்தரம் கூறினார்.

இந்தியாவின் முதல் ஓடிடி விருது வழங்கும் நிகழ்ச்சியான ஓடிடிப்ளே விருதுகள் 2022இல், திருப்பமுனையான நடிப்புக்கான விருதை கோலிவுட்டை சேர்ந்த நடிகர் குரு சோமசுந்தரம் வென்றுள்ளார்.
இந்தியா முழுவதும் பிரபலமான 12 ஓடிடி செயலிகளை ஒன்றிணைத்து தரும் ஹெச்டி நிறுவனத்தின் செயலிதான் ஓடிடிப்ளே. இதையடுத்து ஓடிடியில் வெளியான படங்கள், வெப்சீரிஸ்கள் மற்றும் அதில் பங்கேற்ற கலைஞர்களை கெளரவபடுத்தும் விதமாக ஓடிடி விருதுகள் முதல் முறையாக இந்தியாவில் வழங்கப்பட்டது.
மும்பையில் நடைபெற்ற ஓடிடிப்ளே விருது நிகழ்ச்சியில் பங்கேற்ற பிரபலங்கள் பலரும் பங்கேற்றார்கள்.
தமிழிலிருந்து ஜெய்பீம், சார்பட்டா பரம்பரபரை படங்களுக்கு விருது கிடைத்தது. திருப்புமுனையான நடிப்புக்கான விருதை கோலிவுட் நடிகர் குரு சோமசுந்தரம் வென்றனர். இதன் பின்னர் அவர் பேசியதாவது, "இந்த விருது நிகழ்ச்சியில் பங்கேற்பதை பெருமையாக கருதுகிறேன். இந்த மறக்க முடியாத நிகழ்வில் சில விஷயங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். நான் பிறந்து வளர்ந்தது மதுரையில், தென்தமிழகத்தில் உள்ள இந்த நகரத்தை பலரும் தெரிந்திருக்க வாய்ப்பு உள்ளது. மதுரை ஒரு பாரம்பரியமான நகரம் மட்டுமில்லாமல் மனமான மல்லி, மெதுவான இட்லி, புகழ்பெற்ற மீனாட்சி அம்மன் கோயில போன்ற பல்வேறு பெருமைகளை கொண்ட நகரம்.
முக்கியத்துவம் பெற்ற மீனாட்சி கோயிலில் மிகப் பெரிய கோபுரங்கள், கோயிலின் கட்டமைப்பு உண்மையில் மிகவும் பிரமாண்டமாக அமைந்திருக்கும். கோயிலின் உள்ள ஒரு ஏக்கர் அளவில் சிறிய குளம் அமைந்துள்ளது. கோயில் கட்டடத்தின் பிரமாண்டத்தை ஒப்பிடுகையில் அது மிகவும் சிறியதாகவே தெரியும். அந்த கோயிலின் பக்கத்தில்தான் எனது வீடு அமைந்திருக்கும். சிறுவயதில் நான் அங்குதான் வசித்தேன். வீட்டை விட்டு வெளியேறும்போதெல்லாம் இந்த கோயிலின் பிரமாண்டத்தை பார்த்து வளர்ந்தேன். இங்கு கண்ணாம்மூச்சி விளையாட்டெல்லாம் விளையாடியுள்ளேன்.
இதுபோன்ற பிரமிப்புகளை பார்த்தால் நான் எப்போதும் வியப்பதுண்டு. அதுபோன்றதொரு உணர்வைதான் மின்னல் முரளி படத்துக்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டதும் உணர்ந்தேன். இந்தப் படம் மிகப் பெரிய அளவில் வெற்றி பெறும் என நம்பினேன். எனவே அதில் எந்த மாதிரி நடிக்க வேண்டும் என தீர்மானித்து அதை வெளிப்படுத்தினேன்.
இந்தப் படத்தில் நடித்தது மிகவும் மகிழ்ச்சி. மேடை நாடக பின்னணியில் இருந்து வந்திருக்கும் என் போன்ற நடிகர்களுக்கு இதுவொரு கனவு கதாபாத்திரம். ஏனென்றால் மின்னல் முரளி சூப்பர் ஹீரோ கதையம்சத்தை கொண்டது.
நான் எனது குழந்தை பருவத்தில் பல்வேறு காமிக்ஸ் புத்தகங்களை படித்துள்ளேன். ராணி, முத்து, லயன் என பல்வேறு காமிக்ஸ் கதைகளை படித்துள்ளேன். அதில் ஒரு காதபாத்திரத்தின் பெயர் இரும்பு கை மாயாவி. அந்த கதாபாத்திரம் மின்சாரத்தை தொட்டால் அவரது உடல் ஹோலோ மேன் போல் மறைந்துவிடும். அதேபோல் ரிவீல்வர் ரீட்டா போன்ற சூப்பர் ஹீரோயின் கதாபாத்திரங்களும் காமிக்ஸ் கதைகளில் இடம்பிடித்துள்ளன.
இந்த தருணத்தில் சிறந்த படத்தை உருவாக்கிய படக்குழுவினர்களுக்கும், இயக்குநர் பேசில் ஜோசப், ஒளிப்பதிவாளர் சமிர் தாஹிர், எழுத்தாளர்கள் அருண் அனிருதன், ஜஸ்டின் மேத்யூ, படத்தயாரிப்பாளர்களுக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.
இவ்வாறு அவர் பேசினார்.
ஆரண்ய காண்டம் படத்தில் காளையன் என்ற கதாபாத்திரம் மூலம் புகழ் பெற்ற நடிகர் குரு சோமசுந்தரம் அதன் பிறகு கடல், ஜிகர்தண்டா, ஜோக்கர், பேட்ட உள்பட பல படங்களில் நடித்துள்ளார். இவர் தற்போது ஏரளாமான மலையாள படங்களில் நடித்து வருவதோடு வெப் சீரிஸ்களிலும் நடிக்கிறார்.
குணச்சித்திரம், வில்லத்தனம், கதையின் நாயகன் என பல்வேறு விதமான கதாபாத்திரங்களிலும் நடித்துள்ள இவர் கடந்த ஆண்டு டோவினோ தாமஸ் நடிப்பில் மலையாளத்தில் வெளியான மின்னல் முரளி படத்தில் சூப்பர்ஹீரோ கதாப்பத்திரத்தில் நடித்திருப்பார். படத்தில் இவரது கதாபாத்திரம் கொஞ்சம் நெகடிவ்வாக சித்திரிக்கப்பட்டிருந்தாலும் அதற்கான பின்னணி வலுவாக அமைக்கப்பட்டிருந்தது, கதாபாத்திரத்துக்கு தேவையான நடிப்பை சிறப்பாக நடிகர் குரு சோமசுந்தரம் வெளிப்படுத்தி இருந்தது ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்தது.

டாபிக்ஸ்