Tamil News  /  Entertainment  /  Ott Special American Thriller Film Directed By Renny Harlin You Can Watch It On Amazon Prime

HT OTT SPL: ‘பக்காவான ஒரு சஸ்பென்ஸ் மூவி’-அமேசான் ப்ரைமில் பார்க்க நீங்க ரெடியா?

Manigandan K T HT Tamil
Jan 28, 2024 06:00 AM IST

ஒரு பணக்கார நபரின் வீட்டில் க்ரைம் நடந்திருப்பதாகவும் அதை சுத்தம் செய்து தருமாறும் டாம் ஆர்டரைப் பெறுகிறார்

க்ளீனர் படத்தின் காட்சி
க்ளீனர் படத்தின் காட்சி

ட்ரெண்டிங் செய்திகள்

தாயை இழந்த மகளுக்கு தந்தையும் ஓய்வுபெற்ற காவல்துறை அதிகாரியுமான டாம் கட்லர் (சாமுவேல் ஜாக்சன்) குற்றச் சம்பவ இடத்தை சுத்தம் செய்யும் தொழிலை செய்து வருகிறார். ஒரு கொள்ளையின் போது இவரது மனைவி கொலை செய்யப்பட்டிருப்பார். அதை அவர்களின் இளம் மகள் ரோஸ் கண்டு மனதளவில் தனியாக இருப்பதை விரும்பாதவராக இருப்பார்.

ஒரு பணக்கார நபரின் வீட்டில் க்ரைம் நடந்திருப்பதாகவும் அதை சுத்தம் செய்து தருமாறும் டாம் ஆர்டரைப் பெறுகிறார். அடுத்த நாள் அந்த வீட்டில் இருந்தவர் காணாமல் போனதும், அங்க நடந்த க்ரைம் போலீஸுக்கு தெரியாமல் இருப்பதும் பின்னர் டாமுக்கு தெரியவருகிறது.

அதேநேரம், அந்த வீட்டில் உள்ள பெண் தனது கணவரை காணவில்லை என்கிறார். இதனால், போலீஸ் விசாரணையைத் தொடங்குகிறது. அந்த வீட்டில் அவர் கொலை செய்யப்பட்டுள்ளார் என்பது டாமுக்கு மட்டுமே தெரிகிறது. அவர் என்ன செய்தார், கொலையாளியை கண்டுபிடித்தாரா? அவரது மனைவி என்ன செய்தார்? என்பது படத்தின் பரபர திரைக்கதை.

ராஜேஷ் குமார் நாவலை படிப்பது போன்ற விறுவிறுப்பு இந்தப் படத்தை பார்க்கும்போது உங்கள் நிச்சயம் ஏற்படும்.

அமேசான் பிரைமில் இந்தப் படம் காணக் கிடைக்கிறது.

WhatsApp channel

டாபிக்ஸ்

பொழுதுபோக்கு மற்றும் பிக்பாஸ் , கோலிவுட் தொடர்பான அப்டேட் செய்திகளை இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் மூலம் உடனுக்குடன் அறியலாம்.