OTT releases: அல்லு அர்ஜூனின் ‘புஷ்பா 2’ முதல் ‘குயர்’ வரை- இந்த வார ஓடிடி ரிலீஸ் படங்கள் சிலவை இங்கே!
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Ott Releases: அல்லு அர்ஜூனின் ‘புஷ்பா 2’ முதல் ‘குயர்’ வரை- இந்த வார ஓடிடி ரிலீஸ் படங்கள் சிலவை இங்கே!

OTT releases: அல்லு அர்ஜூனின் ‘புஷ்பா 2’ முதல் ‘குயர்’ வரை- இந்த வார ஓடிடி ரிலீஸ் படங்கள் சிலவை இங்கே!

Kalyani Pandiyan S HT Tamil
Published Jan 31, 2025 10:10 AM IST

OTT releases: அர்ஜூனின் ‘புஷ்பா 2’ முதல் டொவினோவின் ‘ ஐடெண்டிட்டி’ வரை- இந்த வார ஓடிடி ரிலீஸ் படங்கள் சிலவற்றை இங்கே பார்க்கலாம்

OTT releases: அல்லு அர்ஜூனின் ‘புஷ்பா 2’ முதல்  ‘குயர்’ வரை- இந்த வார ஓடிடி ரிலீஸ் படங்கள் சிலவை இங்கே!
OTT releases: அல்லு அர்ஜூனின் ‘புஷ்பா 2’ முதல் ‘குயர்’ வரை- இந்த வார ஓடிடி ரிலீஸ் படங்கள் சிலவை இங்கே!

புஷ்பா - 2

சுகுமாரின் இயக்கத்தில், அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா மற்றும் ஃபஹத் பாசில் உள்ளிட்ட பலர் நடித்த, 3 மணி நேரம் 44 நிமிடங்களை கொண்ட  ‘புஷ்பா 2’ திரைப்படம் நேற்றைய தினம் (30-01-2025) நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகி இருக்கிறது. 

புஷ்பா பாகம் 1 -ல் தினக்கூலியாக இருந்த புஷ்பா (அல்லு அர்ஜூன்) இந்தப்படத்தில் சிண்டிகேட்டின் தலைவராக மாறிவிட்டார். ஸ்ரீவள்ளியையும் (ராஷ்மிகா) மணந்து விட்டார். அதன்பின்னர் என்ன ஆனது, பன்வர் சிங் ஷெகாவத் (பஹத்) உடனான மோதல் அவரை எங்கு நிறுத்தியது? உள்ளிட்ட கேள்விகளுக்கு பதிலளிக்கும் வகையில் இந்த பாகம் எழுதப்பட்டு இருக்கிறது.

 

தி ஸ்டோரிடெல்லர்

பிரபல இயக்குநர் சத்யஜித் ரேயின் கோல்போ பொலியே தாரிணி குரோ ( Golpo Boliye Tarini Khuro) என்ற சிறுகதையால் ஈர்க்கப்பட்டு, உருவாக்கப்பட்டிருக்கும் திரைப்படம் ‘தி ஸ்டோரிடெல்லர்’

கதையின் கரு:

கொல்கத்தாவைச் சேர்ந்த ஓய்வுபெற்ற அச்சக ஊழியர் பரேஷ் ராவல். இவர் தனது மகனுடன் இருக்க அகமதாபாத்திற்கு இடம்பெயர்கிறார். இதற்கிடையே, தூக்கமின்மையால் பாதிக்கப்பட்ட அவர், கதை சொல்லியாக மாறுகிறார். அப்போது பல்வேறு சீக்ரெட்டான விஷயங்கள் வெளிப்படுகின்றன. அதன் பின்னர் என்ன ஆனது என்பது படத்தின் கதையாக விரிகிறது. இந்தப்படத்தில் அடில் ஹுசைன், ரேவதி, தன்னிஷ்டா சாட்டர்ஜி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்தப்படம் கடந்த ஜனவரி 28 முதல் டிஸ்னி - ஹாட் ஸ்டார் ஓடிடி தளத்தில் ஒளிப்பரப்பாகி வருகிறது.

குயர் - MUBI

குயர்

1985 ஆம் ஆண்டு வில்லியம் எஸ் பர்ரோஸின்  ‘குயர்’ நாவலை தழுவி உருவாக்கப்பட்டிருக்கும் திரைப்படம்தான் ‘குயர்’.

கதையின் கரு:

ஒரு அமெரிக்க வெளிநாட்டவர் ஒரு தனிமையான வாழ்க்கையை நடத்திக்கொண்டிருக்கிறார். அவர் ட்ரூ ஸ்டார்க்கியின் யூஜின் அலெர்டனை சந்திக்கும் போது அவரது வாழ்க்கை ஒரு திருப்பத்தை சந்திக்கிறது. அவரை விட இவர் மிகவும் இளையவர். 

அவர்களுக்குள் உறவு உருவாகிறது. அதன் பின்னர் என்ன ஆனது என்பது கதை. ஜேசன் ஸ்வார்ட்ஸ்மேன், ஹென்றி ஜாகா, ஓமர் அப்பல்லோ மற்றும் லெஸ்லி மான்வில் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் இதில் நடித்துள்ளனர். இந்தப்படம் MUBI ஓடிடி தளத்தில் இன்று ( 31 -01-2025) முதல் ஒளிப்பரப்பாக இருக்கிறது.

You’re Cordially Invited

இரு குடும்பங்கள் தன்னுடைய கனவு திருமணத்தை ஒரே நாளில், ஒரே தீவில் நடத்துகிறது. அதில் வரும் குழப்பங்களும், திருப்பங்களுமே படத்தின் கதையாக விவரிக்கப்பட்டு இருக்கிறது.

ஐடெண்டிட்டி.

மலையாள நடிகர் டோவினோ தாமஸ் ஜோடியாக திரிஷா நடித்துள்ள படம்  ‘ஐடெண்டிட்டி’. இப்படம் ஜனவரி 2ஆம் அன்று திரையரங்குகளில் வெளியானது.

ஆக்‌ஷன் திரில்லர் திரைப்படமான இது தமிழ் டப்பிங்கிலும் ரிலீஸ் ஆனது. இப்படத்தை அகில் பால் மற்றும் அனாஸ் கான் ஆகியோர் இயக்கி உள்ளனர். இந்தப்படம் ஜீ 5 ஓடிடி தளத்தில் இன்று முதல் வெளியாகி இருக்கிறது.

The Recruit சீசன் 2 -

சிஐஏ வக்கீல் ஓவன் ஹென்ட்ரிக்ஸ், தென் கொரியாவில் ஒரு உளவு நடவடிக்கையை மேற்கொள்கிறார். அவர் எதிர்கொள்ளும் மிக முக்கியமான அச்சுறுத்தல்களில், சில, அவரது நிறுவனத்திற்குள்ளேயே தோன்றக்கூடும் என்பதை அவர் கண்டுபிடிக்கிறார். அதன் பின்னர் என்ன ஆனது என்பது படத்தின் கதையாக விவரிக்கிறது. இந்தப்படம் நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் ஒளிபரப்பாகி இருக்கிறது.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்களில் இருந்து சேகரித்து, உங்களுக்குத் தரப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.