முதல் வாரமே இப்படியொரு சர்ச்சை படமா? இரண்டு மலையாள படங்கள்! இந்த வாரம் ஓடிடி ரிலீஸ் லிஸ்ட்
2025ஆம் ஆண்டின் முதல் வாரத்தில் ஓடிடி தளத்தில் இரண்டு மலையாள படங்கள் வெளியாகின்றன. தமிழ் படங்கள் ரிலீஸ் குறித்து எதுவும் தகவல் வெளியாகவில்லை. இந்த வாரத்தில் ஓடிடியில் வெளியாககூடிய படங்கள் எவையெல்லாம் என்பதை பார்க்கலாம்

2025ஆம் ஆண்டு தொடங்கியிருக்கும் நிலையில் தமிழில் சில சிறுபட்ஜெட் படங்கள் முதல் வெள்ளிக்கிழமையான இன்று வெளியாகவுள்ளன. இதைத்தொடர்ந்து அடுத்த வாரம் பொங்கல் விடுமுறை தொடங்க இருக்கும் நிலையில் அதை டார்கெட் செய்து சில படங்கள் ரிலீஸுக்கு தயாராகி வருகின்றன.
தற்போது வரை பொங்கல் ரிலீஸ் ஆக கேம் சேஞ்சர், காதலிக்க நேரமில்லை ஆகிய படங்கள் தங்களது வெளியீட்டை உறுதி செய்துள்ளன. இதற்கிடையே இந்த ஆண்டின் முதல் வாரத்தில் பிரபல ஓடிடிகளிலும் சில புதிய படங்கள் வெளியாகின்றன. அந்த வகையில் வரும் வாரம் ஓடிடியில் பார்க்ககூடிய புதிய படங்கள் எவையெல்லாம் என்பதை பார்க்கலாம்
ஆல் வி இமாஜின் அஸ் லைட்
இரண்டு மலையாளி நர்ஸ்களான பிரபா மற்றும் அனுவின் கதையைச் சொல்லும் உணர்வுப்பூர்வமான கதையாக உள்ளது. பிரிந்த கணவன் அவளுக்கு எதிர்பாராத பரிசை அனுப்பு பிரபாவின் வாழ்க்கையில் மாற்றம் ஏற்படுகிறது. அனு தனது காதலனுடன் நெருக்கமாக இருக்க ஒரு இடத்தைக் கண்டுபிடிக்க போராடுகிறாள். பாயல் கபாடியா இயக்கியிருக்கும் இந்த படத்தில் கனி குஸ்ருதி, திவ்ய பிரபா, சாயா கதம் மற்றும் ஹிருது ஹாரூன் ஆகியோர் நடித்துள்ளனர். கேன்ஸ் திரைப்பட விழாவில் கிராண்ட் பிரிக்ஸ் விருது வென்ற உலக அளவில் கவனம் ஈர்த்த இந்த படம் ஜனவரி 3 முதல் டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் ஸ்டிரீமிங் ஆகிறது.