Oscars 2025: எல்லாம் திட்டமிட்டபடி நடக்கும்.. ஜனவரி 23இல் பைனல் லிஸ்ட்.. ரேஸில் உள்ள கங்குவா உள்பட 6 படங்கள்
Oscar 2025: 96 வருட வரலாற்றில் முதல் முறையாக ஆஸ்கர் விருது வழங்கும் நிகழ்ச்சி ரத்து செய்யப்படுவதாக தகவல்கள் உலா வந்தன. சிறந்த படத்துக்கான போட்டி பிரிவில் சூர்யாவின் கங்குவா உள்பட 6 இந்திய படங்களில் இடம்பிடித்துள்ளன.

அமெரிக்காவில் லாஸ் ஏஞ்சலிஸ் மாகணத்தில் ஏற்பட்ட காட்டு தீ காரணமாக கடுமையான பாதிப்புகள் ஏற்பட்டது. இதன் காரணமாக உலக சினிமா ரசிகர்களை எதிர்பார்ப்பில் ஆழ்த்திய கெளரவிக்க மிக்க ஆஸ்கர் விருது வழங்கும் நிகழ்வு ரத்து செய்யப்படுவதாக தகவல்கள் வெளியாகின. 96 வருடு ஆஸ்கர் வரலாற்றில் முதல் முறையாக நிகழ்ச்சி நடைபெறாமல் போவதாக கூறப்பட்டது.
ஆனால் இந்த தகவலுக்கு மறுப்பு தெரிவித்திருக்கும் ஆஸ்கர் அகாடமி தரப்பினர், விருது வழங்கும் நிகழ்ச்சி திட்டமிட்டபடி கண்டிப்பாக நடைபெறும் என தெரிவித்துள்ளதாக தி ஹாலிவுட் ரிப்போர்டர் ஊடகத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆஸ்கர் 2025 விருதுகள் ரத்து செய்யப்படவில்லை
இதுதொடபாக ஆஸ்கர் அகாடமியை சேர்ந்த மூத்த பிரமுகர்களிடம் கேட்டபோது, "ஆஸ்கர் விருதை ரத்து செய்வது குறித்த ட்டம் எதுவும் பரிசீலிக்கப்படவில்லை.ய அத்தகைய ஆலோசனைக் குழு எதுவும். ஆஸ்கார் விருது விழாவின் தேதிக்கு இன்னும் 47 நாள்கள் இருக்கின்றன.
விருதுகளுக்கான பரிந்துரைகளுக்கான காலக்கெடு நீட்டிக்கப்பட்டது. விருதுக்காக பரிந்துரைக்கப்பட்டவர்கள் ஜனவரி 23ஆம் தேதியில் அறிவிக்கப்படுவார்கள்" என கூறியுள்ளனர்.
லாஸ் ஏஞ்சலிஸ் காட்டுத்தீ
அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்துக்கு உட்பட்ட லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் கடந்த வாரத்தில் ஏற்பட்ட காட்டுத்தீயால், பொதுமக்கள், பிரபலங்கள் என பலரும் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த காட்டுத்தீயில் சிக்கி 25க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். 50க்கும் மேற்பட்டோர் காணாமல் போன நிலையில், 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கட்டிடங்கள் முற்றிலுமாக சேதமடைந்துள்ளன.
பாதிப்புக்குள்ளான பிரபலங்கள்
பிரபல நடிகர்களான மார்க் ஹாமில், மாண்டி மூர் மற்றும் ஜேம்ஸ் உட்ஸ் உள்ளிட்டோரும் காட்டுத்தீயால் வீடுகளை விட்டு வெளியேறினர். பாலிசேட்ஸ் கடற்கரை பகுதியில் அமைந்த நடிகர் கேரி எல்விஸ் வீடும் தீயில் எரிந்து போனது. மாலிபு பகுதியில் அமைந்த, பிரபல மாடல், பாடகி மற்றும் நடிகையான பாரீஸ் ஹில்டனின் வீடும் எரிந்து சேதமடைந்தது.
இந்திய நடிகையான பிரியங்கா சோப்ரா தனது வீட்டில் இருந்தவாறு சிறிது தூரத்தில் உள்ள மலைகள் தீப்பிடித்து பற்றி எரியும் காட்டுத்தீயின் கோரத்தை காட்டும் விதமாக விடியோவை பகிர்ந்திருந்தார். அதேபோல் பாகுபலி படத்தில் மனோகரி பாடல் மூலம் பிரபலமான நடிகை நோரா ஃபதேகி வீடு காட்டுத்தீயில் பற்றி எரிந்த நிலையில் தனது இடத்தை காலி செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.
ஆஸ்கர் ரேஸில் கங்குவா
சூர்யா நடிப்பில் மிக பெரிய எதிர்பார்ப்புடன் வெளியான கங்குவா படம் எதிர்மறையான விமர்சனங்களால் படுதோல்வியை சந்தித்து. ரூ. 200 கோடிக்கு மேல் நஷ்டத்தை சந்தித்த கங்குவா, சிறந்த படத்துக்கான பரிந்துரை பட்டியலில் இடம்பிடித்திருக்கும் 207 படங்களில் ஒன்றாக இருக்கிறது.
ஆஸ்கர் விருதுக்கான போட்டியில் சிறந்த வெளிநாட்டு மொழி திரைப்பட விருதுக்கான பிரிவில், இந்தியா சார்பில் அதிகாரப்பூர்வாக தேர்வு செய்யப்பட்ட படமாக லபாட்டா லேடீஸ் படம் இருந்த நிலையில், போட்டி பிரிவில் இடம்பெறவில்லை. ஆனால் ஆஸ்கர் விருதுக்கான பிற பிரிவுகளுக்கான போட்டியில் பல ஆயிரம் டாலர்களை கட்டணமான செலுத்தி, விண்ணப்பிக்கலாம். இந்த வழிமுறையை பின்பற்றி சிறுத்தை சிவா இயக்கித்தில் சூர்யா நடித்த கங்குவா படம் ஆஸ்கர் ரேஸுக்கு விண்ணப்பிக்கப்பட்டுள்ளது.
கங்குவா தவிர பிருத்விராஜ் சுகுமாரன் நடித்த மலையாள படமான ஆடுஜீவிதம், இந்தி படங்களான சந்தோஷ், கேர்ள்ஸ் வில் பி கேர்ள்ஸ், சுதந்திர வீர் சாவர்க்கர், புடுல் என்ற பெங்காலி படம், ஆல் வி இமாஜின் அஸ் லைட் என்ற மலையாள படமும் இந்த லிஸ்டில் இடம்பிடித்துள்ளன

தொடர்புடையை செய்திகள்
டாபிக்ஸ்