Oscars 2024: ஓபன் ஹெய்மர் முதல் பார்பி வரை.. ஆஸ்கர் விருதுகள் யார் யாருக்கு கிடைத்தன? - முழு லிஸ்ட் இங்கே!
சிறந்த திரைப்படத்திற்கான விருதும் ஓபன் ஹெய்மர் படத்திற்கே வழங்கப்பட்டது. சிறந்த துணை நடிகருக்கான விருது ஓபன்ஹெய்மர் படத்தில் நடித்த ராபர்ட் டவுனி ஜூனியருக்கு வழங்கப்பட்டது. சிறந்த ஒரிஜினல் ஸ்கோரிற்கான விருது ஓபன் ஹெய்மர் படத்தில் பணியாற்றிய லுட்விக் கோரன்சனுக்கு வழங்கப்பட்டது.
2023ம் ஆண்டிற்கான ஆஸ்கர் விருதுகள் வழங்கும் விழா அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெற்று வருகிறது. 96 வது ஆஸ்கர் விழாவாக கொண்டாடப்படும் இந்த விருது விழாவில் பிரபல இயக்குநர் கிறிஸ்டோஃபர் நோலனின் ஓபன்ஹெய்மர் திரைப்படம் சிறந்த நடிகை, சிறந்த படம், சிறந்த நடிகர், சிறந்த இயக்குநர், சிறந்த துணை நடிகர், சிறந்த ஒரிஜினல் ஸ்கோர், சிறந்த ஒப்பனை, சிறந்த லைவ் ஆக்ஷன், சிறந்த துணை நடிகை, சிறந்த திரைக்கதை, சிறந்த ஒரிஜினல் பாடல், சிறந்த அனிமேஷன் Feature, சிறந்த ஆடை வடிவமைப்பு, சிறந்த ஒலி அமைப்பு, சிறந்த எடிட்டிங், விஷுவல் எஃபெக்ட்ஸ், சிறந்த ஒளிப்பதிவு, சிறந்த ஆவணப்பட ஷார்ட், சிறந்த புரொடக்ஷன் டிசைன், சிறந்த ஆவணப்பட Feature உள்ளிட்ட 13 பிரிவுகளில் இடம் பெற்று இருந்தது. இந்த நிலையில் ஓபன் ஹெய்மர் திரைப்படத்திற்கு மொத்தம் 7 விருதுகள் கிடைத்திருக்கின்றன.
சிறந்த இயக்குநருக்கான ஆஸ்கர் விருது ஓபன் ஹெய்மர் திரைப்படத்தை இயக்கிய கிறிஸ்டோஃபர் நோலனுக்கு வழங்கப்பட்டது.
ஓபன் ஹெய்மர் திரைப்படத்தில் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியதற்காக நடிகர் சிலியன் மர்ஃபிக்கு சிறந்த நடிகருக்கான ஆஸ்கர் விருது வழங்கப்பட்டது.
சிறந்த திரைப்படத்திற்கான விருதும் ஓபன் ஹெய்மர் படத்திற்கே வழங்கப்பட்டது.
சிறந்த துணை நடிகருக்கான விருது ஓபன்ஹெய்மர் படத்தில் நடித்த ராபர்ட் டவுனி ஜூனியருக்கு வழங்கப்பட்டது.
சிறந்த ஒரிஜினல் ஸ்கோரிற்கான விருது ஓபன் ஹெய்மர் படத்தில் பணியாற்றிய லுட்விக் கோரன்சனுக்கு வழங்கப்பட்டது.
ஹோய்டே வான் ஹோய்டெமா (Hoyte van Hoytema) விற்கு ஓபன் ஹெய்மர் திரைப்படத்தில் சிறந்த ஒளிப்பதிவு செய்தமைக்காக சிறந்த ஒளிப்பதிவாளருக்கான ஆஸ்கர் விருது வழங்கப்பட்டது.
அதே போல சிறந்த எடிட்டிங்கிற்கான விருது ஓபன் ஹெய்மர் திரைப்படத்தின் எடிட்டர் ஜெனிஃபர் லேமிற்கு வழங்கப்பட்டது.
சிறந்த நடிகைக்கான விருது புவர் திங்ஸ் படத்தில் சிறந்த நடிப்பை கொடுத்ததிற்காக நடிகை எம்மா ஸ்டோனுக்கு வழங்கப்பட்டது.
சிறந்த துணை நடிகைக்கான விருது ஹோல்டுஓவர்ஸ் படத்தில் நடித்த டேவின் ஜாய் ரேண்டால்ஃப் - கு வழங்கப்பட்டது.
சிறந்த ஒரிஜினஸ் திரைக்கதைக்கான விருது அனடாமி ஆஃப் ஃபால் திரைப்படத்தில் பணியாற்றிய ஜஸ்டின் ட்ரைட் மற்றும் ஆர்தர் ஹராரி ஆகியோருக்கு வழங்கப்பட்டது.
சிறந்த தழுவல் திரைக்கதைக்கான விருது அமெரிக்கன் ஃபிக்ஷன் திரைப்படத்தில் பணியாற்றிய கோர்ட் ஜெஃபர்சனுக்கு வழங்கப்பட்டது.
சிறந்த சர்வதேச திரைப்படத்திற்கான ஆஸ்கர் விருது தி சோன் ஆஃப் இன்டரஸ்ட் என்கிற பிரிட்டன் படத்திற்கு வழங்கப்பட்டது.
சிறந்த தயாரிப்பு வடிவமைப்பாளருக்கான ஆஸ்கர் விருது புவர் திங்ஸ் படத்தில் பணியாற்றிய ஜேம்ஸ் பிரைஸ் மற்றும் சோனா ஹீத் ஆகியோருக்கு வழங்கப்பட்டது.
சிறந்த மேக்கப் கலைஞருக்கான ஆஸ்கர் விருதானது புவர் திங்ஸ் திரைப்படத்தில் பணியாற்றிய நதியா ஸ்டாசே, மார்க் கூலியர் மற்றும் ஜோஷ் வெஸ்டன் ஆகியோருக்கு வழங்கப்பட்டது.
சிறந்த அனிமேஷன் குறும்படத்திற்கான ஆஸ்கர் விருது வார் இஸ் ஓவர் திரைப்படத்திற்காக வழங்கப்பட்டது.
சிறந்த ஆவண குறும்படத்திற்கான ஆஸ்கர் விருது தி லாஸ்ட் ரிப்பேர் ஷாப் என்கிற குறும்படத்திற்கு வழங்கப்பட்டது.
சிறந்த லைவ் ஆக்ஷன் குறும்படத்துக்கான ஆஸ்கர் விருதானது தி வொண்டர் ஃபுல் ஸ்டோரி ஆஃப் ஹென்றி சுகர் என்ற குறும்படத்திற்கு கிடைத்திருக்கிறது.
சிறந்த ஒரிஜினல் பாடலுக்கான ஆஸ்கர் விருது பார்பி படத்தில் இடம்பெற்ற வாட் வாஸ் ஐ மேடு ஃபார் என்கிற பாடலுக்கு வழங்கப்பட்டது.
சிறந்த விஷூவல் எஃபெக்ட்ஸ் - ற்கான விருது காட்ஜில்லா மைனஸ் ஒன் திரைப்படத்திற்கு வழங்கப்பட்டது.
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

டாபிக்ஸ்