Oscars 2024: சிறந்த நடிகர், சிறந்த இயக்குநர், சிறந்த படம்! - ஆஸ்கர் விருதுகளை அள்ளிய ஓபன் ஹெய்மர்; கெத்து காட்டிய நோலன்
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Oscars 2024: சிறந்த நடிகர், சிறந்த இயக்குநர், சிறந்த படம்! - ஆஸ்கர் விருதுகளை அள்ளிய ஓபன் ஹெய்மர்; கெத்து காட்டிய நோலன்

Oscars 2024: சிறந்த நடிகர், சிறந்த இயக்குநர், சிறந்த படம்! - ஆஸ்கர் விருதுகளை அள்ளிய ஓபன் ஹெய்மர்; கெத்து காட்டிய நோலன்

Kalyani Pandiyan S HT Tamil
Mar 11, 2024 09:05 AM IST

சிறந்த துணை நடிகருக்கான விருது ஓபன்ஹெய்மர் படத்தில் நடித்த ராபர்ட் டவுனி ஜூனியருக்கு வழங்கப்பட்டது. சிறந்த ஒரிஜினல் ஸ்கோரிற்கான விருது ஓபன் ஹெய்மர் படத்தில் பணியாற்றிய லுட்விக் கோரன்சனுக்கு வழங்கப்பட்டது.

கிறிஸ்டோபர் நோலன்
கிறிஸ்டோபர் நோலன்

சிறந்த இயக்குநருக்கான ஆஸ்கர் விருது ஓபன் ஹெய்மர் திரைப்படத்தை இயக்கிய கிறிஸ்டோஃபர் நோலனுக்கு வழங்கப்பட்டது.

ஓபன் ஹெய்மர் திரைப்படத்தில் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியதற்காக நடிகர் சிலியன் மர்ஃபிக்கு சிறந்த நடிகருக்கான ஆஸ்கர் விருது வழங்கப்பட்டது.

சிறந்த திரைப்படத்திற்கான விருதும் ஓபன் ஹெய்மர் படத்திற்கே வழங்கப்பட்டது.

சிறந்த துணை நடிகருக்கான விருது ஓபன்ஹெய்மர் படத்தில் நடித்த ராபர்ட் டவுனி ஜூனியருக்கு வழங்கப்பட்டது.

சிறந்த ஒரிஜினல் ஸ்கோரிற்கான விருது ஓபன் ஹெய்மர் படத்தில் பணியாற்றிய லுட்விக் கோரன்சனுக்கு வழங்கப்பட்டது.

ஹோய்டே வான் ஹோய்டெமா (Hoyte van Hoytema) விற்கு ஓபன் ஹெய்மர் திரைப்படத்தில் சிறந்த ஒளிப்பதிவு செய்தமைக்காக சிறந்த ஒளிப்பதிவாளருக்கான ஆஸ்கர் விருது வழங்கப்பட்டது.

அதே போல சிறந்த எடிட்டிங்கிற்கான விருது ஓபன் ஹெய்மர் திரைப்படத்தின் எடிட்டர் ஜெனிஃபர் லேமிற்கு வழங்கப்பட்டது.

முன்னதாக, ஆஸ்கர் மேடையில் பிரபல குத்துச்சண்டை வீரர் ஜான் சீனா நிர்வாணமாக வந்தது பரபரப்பை ஏற்படுத்தியது. என்ன நடந்தது என்பதை பார்க்கலாம்.

 

ஆஸ்கர் விருதை தொகுத்து வழங்கிய ஜிம்மி கிம்மெல் ஆஸ்கர் விருதின் வரலாறை பகிர்ந்து கொண்டிருந்தார். அப்போது யாரும் எதிர்பாராத வண்ணம் ஜான் சீனா மேடைக்கு நிர்வாணமாக வந்தார்.

இதைப்பார்த்த ஜிம்மி இந்த மேடையில் ஒரு மனிதன் நிர்வாணமாக ஓடுவதை உங்களால் கற்பனை செய்து பார்க்க முடியுமா? இது பைத்தியக்காரத்தனமாக இருக்காதா? என்று கூறினார்.

தொடர்ந்து கிம்மெல், இப்படியான நேர்த்தியான நிகழ்ச்சியில், நீங்கள் இப்படிப்பட்ட செயலை செய்ததிற்காக வெட்கப்பட வேண்டும் என்று சொல்ல ஜான் சீனா ‘ ஆண் உடல் என்பது நகைச்சுவை அல்ல’ என்றார்.

தொடர்ந்து பேசிய கிம்மெல் புகழ்பெற்ற குத்துச்சண்டை வீரர் நிர்வாணமாக சண்டை செய்கிறார் என்று கூறினார். இதற்கு பதிலளித்த ஜான் சீனா நண்பா, நான் நிர்வாணமாக குத்துச்சண்டை செய்வதில்லை. எனக்கான ஆடையிலேயே நான் குத்துச்சண்டை செய்வேன்.

இதனையடுத்து கிம்மெல் நீங்கள் அணியும் ஜோர்ட்ஸ் (அரை டவுசர்) நிர்வாணத்தை விட மோசமானது என்று சொல்ல, பார்வையாளர்கள் சிரித்தனர்.

அதனைதொடர்ந்து ஜான் சீனா வின்னர் கார்டை வைத்து தன்னுடைய அந்தரங்க உறுப்பை மறைத்துக்கொண்டு, மேடையின் மையத்திற்கு வந்தார். இதைப்பார்த்த ரசிகர்கள் விழுந்து விழுந்து சிரித்தனர்.

மேடைக்கு வந்த ஜான் சீனா “ஆடைகள், அவை மிகவும் முக்கியம். இந்த இடத்தில் அது மிக மிக முக்கியம் என்று நினைக்கிறேன்.” என்றார். இதையடுத்து மேடையில் இருந்து விளக்குகள் அணைக்கப்பட, மேடைக்கு வந்த ஆஸ்கர் விருது உதவியாளர்கள் ஜான் சீனாவை ஆடை அணியவைத்தனர்.

 

இதனையடுத்து இருவரும் இணைந்து “புவர் திங்ஸ்” படத்தில் சிறந்த ஆடை வடிவமைப்பு செய்ததிற்காக ஹோலி வாடிங்டனுக்கு சிறந்த ஆடை வடிவமைப்பாளருக்கான விருது வழங்கப்படுவதாக அறிவித்தனர்.

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

Whats_app_banner

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.