Oscars 2025: ஆஸ்கர் ரேஸில் கங்குவா அவுட்.. சர்பைரஸாக தேர்வாகி இருக்கும் இந்திய குறும்படம் - முழு விவரம்
Oscar Nominations 2025: சிறந்த படத்துக்கான ஆஸ்கர் விருது பரிந்துரை லிஸ்டில் இடம்பிடித்திருந்த சூர்யாவின் கங்குவா, இறுதி பட்டியலில் இடம்பெறவில்லை. அத்துடன் இந்தியாவில் தயாரான குறும்படம் ஒன்றும் ஆஸ்கர் சிறந்த குறும்படம் பிரிவில் இடம்பிடித்துள்ளது.

97வது ஆஸ்கர் விருது வழங்கு விழா வரும் மார்ச் மாதம் மார்ச் மாதம் 3ஆம் தேதி அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சலிஸில் வைத்து நடைபெற இருக்கிறது. திரையுலகில் மிகவும் கெளரவமிக்க விருதாக கருதப்படும் ஆஸ்கர் விருதுக்கான போட்டியில் ஹாலிவுட் படங்கள் மட்டுமல்லாமல், உலக சினிமாக்களில் இருந்து பல்வேறு மொழி படங்களும் பல பரிவுகளில் போட்டியிருகின்றன.
இந்த ஆண்டுக்கான ஆஸ்கர் விருது போட்டி பிரிவில் பரிந்துரைக்கப்பட்ட படங்கள், நடிகர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள் பெயர் ஒவ்வொன்றாக வெளியிடப்பட்டு வருகின்றன.
கங்குவா அவுட்
இதையடுத்து சிறந்த படத்துக்கான பரிந்துரை லிஸ்டில் சூர்யாவின் நடிப்பில் பிரமாண்டமாக உருவான கங்குவா படம் இடம்பிடித்திருந்தது. படத்தின் முக்கிய போர்ஷன்களை மட்டும் திரைக்கதையாக உருவாக்கி, படக்குழுவினர் ஆஸ்காருக்கு அனுப்பியிருந்ததாக கூறப்பட்டது. முதல் சுற்றில் கங்குவா தேர்வான நிலையில், பிரிந்துரை லிஸ்டிலும் படம் இடம்பிடித்தது ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது.
இதைத்தொடர்ந்து இந்த ஆண்டுக்கான ஆஸ்கர் விருதில் சிறந்த படம் விருதுக்காக போட்டியிடும் படங்களின் லிஸ்ட் வெளியிடப்பட்டிருக்கும் நிலையில், அதில் கங்குவா இடம்பெறவில்லை. இதன் மூலம் ஆஸ்கர் ரேஸில் இருந்து கங்குவா படம் அவுட்டாகியுள்ளது.
ஆஸ்கர் விருதுக்கான போட்டியில் சிறந்த வெளிநாட்டு மொழி திரைப்பட விருதுக்கான பிரிவில், இந்தியா சார்பில் அதிகாரப்பூர்வாக தேர்வு செய்யப்பட்ட படமாக லபாட்டா லேடீஸ் படம் உள்ளது. ஆனால் ஆஸ்கர் விருதுக்கான பிற பிரிவுகளுக்கான போட்டியில் பல ஆயிரம் டாலர்களை கட்டணமான செலுத்தி, விண்ணப்பிக்கலாம். இந்த வழிமுறையை பின்பற்றி சிறுத்தை சிவா இயக்கித்தில் சூர்யா நடித்த கங்குவா படம் ஆஸ்கர் ரேஸுக்கு விண்ணப்பிக்கப்பட்டிருந்தது.
ஆடம் ஜே கிரேவ்ஸ் இயக்கியிருக்கும் இந்த குறும்படம் குழந்தை தொழிலாளர்களின் பிரச்னையை கதைக்களமாக கொண்டுள்ளது. கடந்த 2022ஆம் ஆண்டில் 95வது ஆஸ்கர் விருதில் சிறந்த ஆவண குறும்படத்துக்கான விருது வென்ற தி எலிபேண்ட் விஸ்பரர்ஸ் படத்தை தயாரித்த குனீத் மோங்க தான் இந்த படத்தையும் தயாரித்துள்ளார். இந்திய நடிகையான பிரியங்கா சோப்ராவும் இந்த படத்தின் நிர்வாக தயாரிப்பாளராக உள்ளார்.
அனுஜா குறும்பட கதை
இந்திய தலைநகரான டெல்லியில் உள்ள கார்மெண்ட் தொழிற்சாலையில் பணிபுரியும் 9 வயது திறமையான சிறுமி அனுஜாவுக்குப் பள்ளிக்குச் செல்லும் அரிய வாய்ப்பு கிடைக்கிறது. அதை தேர்வு செய்வதால் அவளுக்கும், அவளது சகோதரியின் வாழ்க்கையிலும் ஏற்படும் தாக்கங்களை எடுத்துரைக்கும் விதமாக இந்த படத்தின் கதை அமைந்துள்ளது. 22 நிமிடம் ஓடக்கூடிய இந்த குறும்படம், இந்தி மொழியில் தயாராகியுள்ளது. இந்த படத்தின் ஓடிடி வெளியீட்டு உரிமையை நெட்பிளிக்ஸ் பெற்றுள்ளது.
ஏற்கனவே, தி எலிபேண்ட் விஸ்பரர்ஸ் படம் சிறந்த ஆவண குறும்படம் ஆஸ்கர் விருதை வென்ற முதல் இந்திய படம் என்ற பெருமையை பெற்றுள்ளது. இதைப்போல் அனுஜா குறும்படமும் விருதை வெல்லுமா என்கிற எதிர்பாப்பு சினிமா ரசிகர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது.

தொடர்புடையை செய்திகள்