‘அவர் அப்பமே ப்ளேபாய்தான்.. ராதாகிட்டயே அவ்வளவு சில்மிஷம்.. ஷூட்டிங்கிற்கு கட் அடிக்க கார்த்திக் செய்த சம்பவம்!
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  ‘அவர் அப்பமே ப்ளேபாய்தான்.. ராதாகிட்டயே அவ்வளவு சில்மிஷம்.. ஷூட்டிங்கிற்கு கட் அடிக்க கார்த்திக் செய்த சம்பவம்!

‘அவர் அப்பமே ப்ளேபாய்தான்.. ராதாகிட்டயே அவ்வளவு சில்மிஷம்.. ஷூட்டிங்கிற்கு கட் அடிக்க கார்த்திக் செய்த சம்பவம்!

Kalyani Pandiyan S HT Tamil
Dec 27, 2024 01:36 PM IST

‘கார்த்திக் அப்பொழுதே பிளேபாய் மாதிரிதான் இருப்பாராம். செட்டில் இருக்கும் ராதாவிடம் சில்மிஷங்களை செய்து அலப்பறை கொடுப்பாராம்.’ - பாலாஜி பிரபு

 ‘அவர் அப்பமே ப்ளேபாய்தான்.. ராதாகிட்டயே அவ்வளவு சில்மிஷம்.. ஷூட்டிங்கிற்கு கட் அடிக்க கார்த்திக் செய்த சம்பவம்!
‘அவர் அப்பமே ப்ளேபாய்தான்.. ராதாகிட்டயே அவ்வளவு சில்மிஷம்.. ஷூட்டிங்கிற்கு கட் அடிக்க கார்த்திக் செய்த சம்பவம்!

இது குறித்து மீடியா சர்க்கிள் யூடியூப் சேனலுக்கு பேசிய அவர், முன்னதாக கார்த்திக் நடிப்பில் வெளியான சில படங்கள் பெரிய வெற்றியை பெற்றிருந்தன. இந்த நிலையில், 'பக்கத்து வீட்டு ரோஜா ' திரைப்படத்தில் நடிகர் கார்த்திக், அப்பா பாஸ்கருடன் இணைந்திருந்தார்.

பிளேபாய் கார்த்திக்

கார்த்திக் அப்பொழுதே பிளேபாய் மாதிரிதான் இருப்பாராம். செட்டில் இருக்கும் ராதாவிடம் சில்மிஷங்களை செய்து அலப்பறை கொடுப்பாராம். இதைப்பார்த்த அப்பா, இவர்களை வைத்தெல்லாம் நான் படம் எடுக்க வேண்டி இருக்கிறது என்று கிண்டலாகச் சொல்வாராம். அந்தளவுக்கு இருவரும் நெருக்கமானவர்களாக இருந்தார்கள்.

அந்த படம் நல்ல படியாக முடிந்தது. அதற்கு அடுத்ததாக ' சட்டத்தின் திறப்பு விழா' படத்தில் அப்பாவும் கார்த்தியும் இணைந்தார்கள். அதில் கார்த்திக்கு வழக்கறிஞர் கேரக்டர். அந்த படமும் நல்லபடியாக அமைந்தது. அதனைத் தொடர்ந்து கார்த்திக் நடிப்பில் வெளியான 'கிழக்கு வாசல்' திரைப்படம் மிகப்பெரிய ஹிட் ஆனது. இந்த நிலையில்தான் 'சக்கரவர்த்தி ' படத்திற்கு அப்பாவிற்கு கால்ஷீட் கொடுத்தார் கார்த்திக். சுமூகமாக ஒப்பந்தம் போடப்பட்டது.

படப்பிடிப்பிற்கான எல்லா ஏற்பாடுகளும் செய்யப்பட்டு படப்பிடிப்பு நடத்துவதற்காக எல்லோரும் காத்திருந்தார்கள். ஆனால், கார்த்திக் படப்பிடிப்புக்கு வரவில்லை. என்னவென்று தெரியவில்லையே என்று அப்பா அவருடைய மேனேஜருக்கு போன் செய்து கேட்க, அவரோ கார்த்திக் சார் எங்கிருக்கிறார் என்பது எங்களுக்கும் தெரியவில்லை என்று சொல்லிவிட்டார்.

 

மருத்துவமனையில் பதுங்கிய கார்த்திக்

விசாரித்த பொழுது அவர் அடையாரில் இருக்கும் ஒரு பிரபல மருத்துவமனையில் உள் நோயாளியாக அனுமதிக்கப்பட்டு இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து நானும் அப்பாவும் அந்த மருத்துவமனைக்குச் சென்று கார்த்திக்கை பற்றி விசாரித்தோம். ஆனால், மருத்துவமனை தரப்பில் அவர் இங்கு இல்லை என்று கூறி னார்கள். கொஞ்சம் அதட்டிக் கேட்டவுடன், அவர்கள் கார்த்தி இருக்கும் ரூமை காட்டி விட்டார்கள். நானும் அப்பாவும் அங்கு செல்வதற்குள், மருத்துவமனை ரிசப்ஷனில் இருந்து, நாங்கள் வருவதை அவரிடம் கூறிவிட்டார்கள். இதையடுத்து சுதாரித்துக் கொண்ட கார்த்திக், அங்கிருந்த நர்சிடம் சீக்கிரமாக ட்ரிப்ஸ் ஏற்றுங்கள். வருகிறார்கள்… வருகிறார்கள் என்று சொல்லி, வேண்டுமென்றே தன்னை ஒரு நோயாளி போல காட்டிக் கொண்டார்.

கிளப் பார்ட்டி

நாங்கள் உள்ளே சென்றவுடன் அப்பாவிடம் கார்த்தி நேற்று நைட்டில் இருந்து எனக்கு ஒரே குளிர் காய்ச்சல் என்று சொல்ல, உடனே அப்பா, நீ நேற்று இரவு ஏதோ ஒரு கிளப்பில் இருந்ததாக கேள்விப்பட்டேன் என்றார். அதை கார்த்தி அப்படியே சமாளித்து விட்டார். சடாரென்று ஏசியை பார்த்த அவர் காய்ச்சல் என்கிறாய், பின்னர் ஏசி போட்டு இருக்கிறார்கள் என்று கேட்டார். அதையும் அப்படியும், இப்படியுமாக சமாளித்தார். உடனே அப்படியா...என்ற அப்பா நீ என்னிடம் அட்வான்ஸ் வாங்கி இருக்கிறாய்; படப்பிடிப்பிற்கான எல்லா ஏற்பாடுகளும் செய்தாயிற்று; நான் இப்போது என்ன செய்வது என்று கேட்டார்.

கார்த்திக்கிற்கு நல்ல மார்க்கெட் இருந்தும், பட வாய்ப்புகள் அடுத்தடுத்து கிடைத்தும், இவர் இந்த மாதிரியான நடவடிக்கைகளில் தொடர்ந்து ஈடுபட்டார்; காரணம் என்னவென்றால் சில பழக்கங்களுக்கு அவர் அடிமையாகி விட்டார். எந்த ஒரு பழக்கமாக இருந்தாலும்,அதன் உச்சத்தை தொடும்பொழுது, அது உங்களை அது அடிமையாக்கி விடும்.

அப்படியான ஒரு கட்டாயம் தான் கார்த்திக்கிற்கும் ஏற்பட்டது. இப்போது அப்படியே ஹாஸ்பிடல் சீனுக்கு வருவோம். இறுதியாக கார்த்திக்கிடம் என்ன சொல்கிறீர்கள்... எப்போது வருவீர்கள் என்று அப்பா கேட்க, இரண்டு நாட்களில் வந்து விடுகிறேன் என்றார். சரி, என்று கேட்டுக்கொண்ட அப்பா அங்கிருந்து கிளம்பி விட்டார்; சொன்னபடி மூன்றாவது நாள் கார்த்தி படப்பிடிப்பிற்கு வந்தார்.

ஆனால், நம்மால் இப்படி ஷூட்டிங் தடைப்பட்டு விட்டதே என்பது குறித்து கொஞ்சம் கூட குற்ற உணர்ச்சி இல்லை. கார்த்தி மிக மிக கேஷுவலாக வந்தார்.

அவர் கேமராவுக்கு முன்னர் மட்டும் நன்றாக நடிப்பவர் அல்ல. கேமராவுக்கு பின்னரும் மிக நன்றாக நடிப்பவர்தான். அதனால் தான் நாம், அவருக்கு நவரச நாயகன் என்றது வைத்திருக்கிறார்கள் என்று நினைக்கிறேன்' என்று பேசினார்

Whats_app_banner

தொடர்புடையை செய்திகள்

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.