தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Oru Nodi Ott Release Date: வித்தியாசமான கதையால் பாராட்டுகளைப் பெற்ற ஒரு நொடி ஓடிடியில் ரிலீஸ்.. எப்போது தெரியுமா?

Oru Nodi OTT release date: வித்தியாசமான கதையால் பாராட்டுகளைப் பெற்ற ஒரு நொடி ஓடிடியில் ரிலீஸ்.. எப்போது தெரியுமா?

Manigandan K T HT Tamil
May 30, 2024 04:58 PM IST

Oru Nodi: ஒரு நொடியின் தொழில்நுட்பக் குழுவில் ஒளிப்பதிவாளர் கே.ஜி.ரதீஷ், இசையமைப்பாளர் சஞ்சய் மாணிக்கம் மற்றும் எடிட்டர் எஸ்.குரு சூர்யா ஆகியோர் உள்ளனர். பெரிய நட்சத்திரங்கள் இல்லாததால் பரவலான வரவேற்பைப் பெறாமல் இதுபோன்ற படங்கள் திரையரங்குகளில் நீண்ட நாட்கள் ஓடாமல் போய்விடுகிறது.

வித்தியாசமான கதையால் பாராட்டுகளைப் பெற்ற ஒரு நொடி ஓடிடியில் ரிலீஸ்.. எப்போது தெரியுமா?
வித்தியாசமான கதையால் பாராட்டுகளைப் பெற்ற ஒரு நொடி ஓடிடியில் ரிலீஸ்.. எப்போது தெரியுமா? (X)

ட்ரெண்டிங் செய்திகள்

இருப்பினும், ஓடிடியின் வருகைக்குப் பிறகு யார் நடித்திருந்தால் என்ன கதை நன்றாக இருந்து திரைக்கதை விறுவிறுப்பாக இருந்தால் நாங்கள் பார்க்க ரெடி என ரசிகர்கள் வீடுதோறும் காத்திருக்கிறார்கள்.

காணாமல் போன எம்.எஸ்.பாஸ்கரை கண்டுபிடிக்கும் பணியில் தமன் குமார் போலீஸ்காரராக நடிக்கிறார்.

ஒரு நொடியின் தொழில்நுட்பக் குழுவில் ஒளிப்பதிவாளர் கே.ஜி.ரதீஷ், இசையமைப்பாளர் சஞ்சய் மாணிக்கம் மற்றும் எடிட்டர் எஸ்.குரு சூர்யா ஆகியோர் உள்ளனர்.

பி. மணிவர்மன் மற்றும் நடிகர் தமன் குமார் ஆகியோர் சமீபத்தில் ஒரு நொடியில் இணைந்து பணியாற்றியதைத் தொடர்ந்து அடுத்த படத்திலும் இணைந்து பணியாற்ற உள்ளனர் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில் இந்தப் படம் ஆஹா தமிழ் ஓடிடி தளத்தில் இன்றிரவு வெளியாகிறது.

ஊடகங்களின் பாராட்டு மழை

தி டைம்ஸ் ஆஃப் இந்தியாவைச் சேர்ந்த அபினவ் சுப்ரமணியன் படத்தை 5 நட்சத்திரங்களுக்கு 3 நட்சத்திரங்கள் என மதிப்பிட்டு, "இறுக்கமான திரைக்கதையும், மேலும் சஸ்பென்ஸ் நிறைந்த உருவாக்கமும் படத்தை உண்மையான அனுபவமாக உயர்த்தியிருக்கலாம்" என்று குறிப்பிட்டார்.

டைம்ஸ் நவ்வின் மணிகண்டன் கே.ஆர் படத்தை 5 நட்சத்திரங்களுக்கு 3 நட்சத்திரங்கள் என்று மதிப்பிட்டு, “ஒரு நொடி ஒரு விதிவிலக்கான த்ரில்லர் படமாக இருக்கும், ஆனால் இது நிச்சயமாக ஒரு பிடிவாதமான புலனாய்வுக் கதையை விவரிக்கும் நேர்மையான மற்றும் பாராட்டத்தக்க முயற்சியாகும், இது உங்களை இறுதிவரை சரியாக யூகிக்க வைக்கிறது. ” என்று பாராட்டி எழுதியுள்ளார்.

தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸைச் சேர்ந்த அக்‌ஷய் குமார், “இவ்வளவு சொல்லப்பட்டாலும், ஒரு நொடி ரொமான்டிக் டிராக்கில் அதிக ஈடுபாடு காட்டுவதில் இருந்து பாதுகாப்பாக தன்னைத்தானே விலக்கிக்கொண்டது, மேலும் அதிர்ஷ்டவசமாக ஒரு வழக்கமான 'தமிழ் சினிமாவிலிருந்து விலகி நிற்கிறது." என்றார்.

ஜீ தமிழில் இருந்து ஆர்.கே. ஸ்பார்க் குறிப்பிடுகையில், “படத்தில் சில இடங்களில் லாஜிக் தவறுகள் இருந்தாலும் திரைக்கதை அதை யோசிக்க விடவில்லை” என பாராட்டி எழுதியிருந்தார்.

யார் இந்த தமன் குமார்

தமன் குமார் தமிழ் மொழி படங்களில் நடித்து வருபவர் ஆவார். பிந்து மாதவிக்கு ஜோடியாக 2012 ஆம் ஆண்டு வெளியான சட்டம் ஒரு இருட்டரை திரைப்படத்தில் அறிமுகமானார்.

தமன் குமார் 2011 இல் லண்டன் மாப்பிள்ளை என்ற படத்திற்காக ஒப்பந்தம் செய்யப்பட்டார், ஆனால் படத்தின் தயாரிப்பை முடிக்க முடியவில்லை, வெற்றிகரமான ஆடிஷனுக்குப் பிறகு சினேகா பிரிட்டோவின் சட்டம் ஒரு இருட்டரை படத்தில் விக்ரம் பிரபுவுக்குப் பதிலாக அவர் பிந்து மாதவி மற்றும் பியா பாஜ்பாய்க்கு ஜோடியாக முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார். அதே பெயரில் பழைய படத்தின் ரீமேக்கான இந்த படம், சிறிய விளம்பரத்துடன் வெளியிடப்பட்டது. பாக்ஸ் ஆபிசில் பெரிய அளவில் படம் போகவில்லை என்றாலும் தமன் குமாரின் நடிப்பு பாராட்டுகளைப் பெற்றது.

டி20 உலகக் கோப்பை 2024

டாபிக்ஸ்