Oru Nodi: வெற்றி.. வெற்றி.. ஒரு நொடி பட இயக்குநருக்கு கார் பரிசளித்த தயாரிப்பாளர்
இப்போது எல்லாம் ஒரு படம் வசூல் ரீதியாகவோ அல்லது விமர்சன ரீதியாகவோ வெற்றி அடைந்து இருக்கிறது என்றால் அந்த படக்குழு நடிகர், இயக்குநர், தயாரிப்பாளர் பரிசுகள் வாங்கி கொடுப்பதை வழக்கமாக வைத்து இருக்கிறார்கள்.

இயக்குனர் மணிவர்மனுக்கு ஒரு நொடி தயாரிப்பாளர்கள் கார் பரிசளித்து இருக்கிறார்.
பிரபல திரைப்பட தயாரிப்பாளரும், பாஃப்டா திரைப்படக் கல்லூரி நிறுவனரும், ‘ காற்றின் மொழி ’, ‘ இவன் தந்திரன் ’, ‘ கோடியில் ஒருவன் ’, ‘ கொலைகாரன் ’ போன்ற முக்கியமான படங்களை வெளியிட்ட விநியோகஸ்தர் தனஞ்செயன். இவர் தற்போது ஒரு நொடி என்ற படத்தை முன்னின்று வழங்குகிறார். மதுரை அழகர் மூவிஸ் மற்றும் வொயிட் லேம்ப் பிக்ஷர்ஸ் ஆகிய நிறுவனங்கள் இந்த படத்தை தயாரித்து உள்ளனர்.
வித்தியாசமான கதை களத்துடன் உருவாகி இருக்கும் ‘ ஒரு நொடி ’ படத்தில் ‘ தொட்டால் தொடரும் ’ பட நாயகனும் ‘ அயோத்தி ’ படத்தில் முக்கியமான பாத்திரத்தில் நடித்தவருமான தமன் குமார் முற்றிலும் புதிய பாத்திரம் ஒன்றில் நாயகனாக நடித்து இருக்கிறார்.
அவருடன் எம். எஸ். பாஸ்கர், வேல ராமமூர்த்தி, பழ கருப்பையா, கஜராஜா, தீபா ஷங்கர், ஸ்ரீரஞ்சனி ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களை ஏற்றிருக்கின்றனர்.
ஒளிப்பதிவு இயக்குநராக கே.ஜி.ரத்தீஷ் பொறுப்பேற்க, கலை இயக்குனர் பணியை கவனிக்கிறார் எஸ்.ஜே. ராம். அறிமுக இசையமைப்பாளர் சஞ்சய் மாணிக்கமும், படத்தொகுப்பாளர் எஸ் குரு சூர்யாவும் படத்துக்கு தங்கள் பங்களிப்பை பலமாக செய்து இருக்கிறார்கள்.
ஒரு நொடி ரிலீஸ்
இந்நிலையில் ‘ ஒரு நொடி ’ படம் கடந்த மாதம் 26 ஆம் தேதி வெளியானது. வசூல் ரீதியாக வெற்றி பெறவில்லை என்றாலும் விமர்சன ரீதியாக மக்கள் மனதை வென்று இருக்கிறது.
மதுரை அழகர் மூவிஸ் மற்றும் வொயிட் லேம்ப் பிக்ஷர்ஸ் தயாரிப்பில், தயாரிப்பாளரும் விநியோகஸ்தருமான தனஞ்செயன் வெளியிட்ட திரைப்படம் ஒரு நொடி.
அறிமுக இயக்குநர் மணிவர்மன் இயக்கத்தில் தமன்குமார் நாயகனாக வைத்து அவர் இயக்கிய ‘ஒரு நொடி’ படம் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பு பெற்று திரையரங்கில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது.
இயக்குநர் மணிவர்மனுக்கு தயாரிப்பாளர் கொடுத்த பரிசு
இப்படத்தின் வெற்றியை கொண்டாடும் விதமாக இயக்குநர் மணிவர்மனுக்கு தயாரிப்பாளர்கள் தனஞ்செயன், மதுரை அழகர் மூவிஸ் அழகர், மற்றும் வொயிட் லேம்ப் பிக்ஷர்ஸ் கே. ஜி. ரத்திஷ் ஆகிய மூன்று பேரும் கார் பரிசளித்து அவரை உற்சாகப்படுத்தி உள்ளனர். இது தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.
இப்போது எல்லாம் ஒரு படம் வசூல் ரீதியாகவோ அல்லது விமர்சன ரீதியாகவோ வெற்றி அடைந்து இருக்கிறது என்றால் அந்த படக்குழு நடிகர், இயக்குநர், தயாரிப்பாளர் பரிசுகள் வாங்கி கொடுப்பதை வழக்கமாக வைத்து இருக்கிறார்கள்.
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
ஹிந்துஸ்தான் தமிழ் வாட்ஸ் அப் குடும்பத்தில் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்.

டாபிக்ஸ்