Lyricist Kabilan: 'ஒரே ஒரு பாட்டு என்ன நிறைய பிரச்சனையில இருந்து காப்பாத்திருக்கு' - கவிஞர் கபிலன் பேட்டி
Lyricist Kabilan: நான் விஜய்க்கு எழுதின ஒரே ஒரு பாட்டு என்னை பல பிரச்சனையில இருந்து காப்பாற்றி இருக்கிறது என கவிஞர் கபிலன் தான் சில மாதங்களுக்கு முன் அளித்த பேட்டியில் கூறியுள்ளார்.

Lyricist Kabilan: தமிழ் சினிமாவில் ஹீரோக்களின் இமேஜை உயர்த்துவதில் மிகப்பெரிய பங்கு வகிப்பது பாடல்கள். அதுவும் அறிமுகப் பாடல்களுக்கு என தனி இடமும், ரசிகர்களும் இருக்கின்றனர். அப்படி, நடிகர் விஜய்யின் யூத் படத்தில் ஆல் தோட்ட பூபதி எனும் பாடலை எழுதி, ஹிட் கொடுத்தவர் கவிஞரும் பாடலாசிரியருமான கபிலன்.
இந்தப் படத்தின் ஹிட்டால் அவர் தன் வாழ்வில் ஏற்பட்ட மாற்றங்கள் குறித்து சினிமா பிரபலம் சித்ரா லட்சுமணனின் டூரிங் டாக்கீஸ் யூடியூப் சேனலில் சில மாதங்களுக்கு முன் பேட்டி அளித்துள்ளார்,
ஆல் தோட்ட பூபதி
அந்தப் பேட்டியில், "நான் விஜய்க்கு எழுதுன முதல் பாட்டு ஆல் தோட்ட பூபதி. இந்த பாட்டு வெளிவந்த கதைய சொல்லனும்ன்னா ஒரு எபிசோடே சொல்லலாம். நான் உன் சமையலறையில் பாட்டு எழுதுன புதுசு. அந்தப் பாட்ட படிச்சவங்க, காலேஜ் போற பசங்க எல்லாம் பாராட்டுறாங்க. அதுக்கு அடுத்ததா நான் எழுதுன பாட்டு. ஆல் தோட்ட பூபதின்னு நல்ல குத்து பாட்டு. இத நான் மிஷ்கின்கிட்ட குடுக்குறேன். அப்போ யூத் படத்துல மிஷ்கின் வேலை செஞ்சிட்டு இருக்காரு. அந்தப் படத்துல பாட்டு எழுதுறதுக்கு வாலி சாருக்கு பணம் எல்லாம் குடுத்துட்டாங்க. அந்த சயமத்துல தான் மிஷ்கின் வாலி சார் பாட்டுக்கு மேல இந்த பாட்டு வச்சுட்டாரு. அதுதான் ரெக்கார்டிங்கு போச்சு.