Sunitha Vs Soundarya: மீண்டும் மீண்டுமா? இறுதிகட்டத்தை எட்டியுள்ள பிக்பாஸ்! இன்னும் சண்டை குறைந்த பாடில்லையே!
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Sunitha Vs Soundarya: மீண்டும் மீண்டுமா? இறுதிகட்டத்தை எட்டியுள்ள பிக்பாஸ்! இன்னும் சண்டை குறைந்த பாடில்லையே!

Sunitha Vs Soundarya: மீண்டும் மீண்டுமா? இறுதிகட்டத்தை எட்டியுள்ள பிக்பாஸ்! இன்னும் சண்டை குறைந்த பாடில்லையே!

Suguna Devi P HT Tamil
Jan 13, 2025 06:26 PM IST

Sunitha Vs Soundarya: பிக்பாசில் இன்று சுனிதா மற்றும் சௌந்தர்யாவிற்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. மேலும் சுனிதா சௌந்தர்யாவின் புரோமா டீம் குறித்து குத்தி காட்டி பேசியுள்ளார்.

Suitha Vs Soundarya: மீண்டும் மீண்டுமா? இறுதிகட்டத்தை எட்டியுள்ள பிக்பாஸ்! இன்னும் சண்டை குறைந்த பாடில்லை!
Suitha Vs Soundarya: மீண்டும் மீண்டுமா? இறுதிகட்டத்தை எட்டியுள்ள பிக்பாஸ்! இன்னும் சண்டை குறைந்த பாடில்லை!

பிஆர் டீம் வைத்திருக்கும் சௌந்தர்யா 

பிக்பாஸ் இந்த சீசன் தொடங்கியதில் இருந்தே சௌந்தர்யா சிறப்பாக போட்டியிட வில்லை. இருப்பினும் அவர் மட்டும் போட்டியின் இறுதி வரை வந்திருப்பதாக ரசிகர்கள் தெரிவித்துள்ளனர். போட்டியாளர்களுமே சௌந்தர்யாவிற்கு பிஆர்டி இருப்பதாக நம்புகின்றனர். மேலும் அவர் குறித்த பாசிட்டிவான பதிவுகள் அனைத்தும் சமூக வலைதளங்களில் உலாவி வருவதாகவும், மற்ற போட்டியாளர்கள் குறித்து தரக் குறைவான கமெண்ட்களை பலரிட்டு வருவதாகவும் போட்டியாளர்கள் தெரிவித்தனர். 

இந்த நிலையில் போட்டியிலிருந்து வெளியேறிய போட்டியாளர்கள் அனைவரும் சமூகவலை சவுதி சௌந்தர்யாவிற்கு கிடைக்கும் வரவேற்பை பொறுத்து சௌந்தர்யாவிற்கு பிஆர் டீம் இருக்கிறது என உறுதிப்படுத்தியுள்ளனர். இதனையே தற்போது சுனிதாவும் சுட்டிக்காட்டுவது போல் உங்களுக்கு ஓட்டு போட சம்மந்திகள் உள்ளனர் என ஆக்ரோஷமாக கூறியுள்ளார். போட்டியின் ஆரம்பத்தில் இருந்தே அப்பாவி போல் தன்னை காட்டி வருவதாகவும் அவர் போட்டியில் தன்னை தக்க வைத்துக் கொள்ள எந்தவித முயற்சியும் எடுத்துக் கொள்ளாமலும் பலர் அவருக்கு ஓட்டு போடுவதால் மட்டுமே அவர் இன்றும் போட்டியில் இருப்பதாகவும் பலர் தெரிவித்துள்ளனர்.

சௌந்தர்யாவிற்கு ஆதரவு இருக்கா? 

சக போட்டியாளர்களின் குற்றச்சாட்டு இருப்பினும் எக்ஸ் தள பதிவுகளை பார்க்கும் போது உண்மையாகவே சௌந்தர்யாவை விரும்பும் போட்டியாளர்களும் உள்ளதாக தெரிகிறது.  மேலும் சமீபத்தில் எலிமினேட் செய்யப்பட்ட போட்டியாளரான அன்சிதா ஒரு கல்லூரிக்கு சிறப்பு விருந்தினராக சென்று இருந்த பொழுதும் அங்கிருக்கும் மாணவர்கள் பலர் சௌந்தர்யா சௌந்தர்யா என கத்தியதும் குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் சௌந்தர்யாவிற்கு இயல்பாகவே ஆதரவு இருக்கிறது எனவும் ஒரு தரப்பினர் வாதிட்டு வருகின்றனர். 

இந்த நிலையில் கடந்த சீசனில் வெற்றியாளராக அறிவிக்கப்பட்ட அர்ச்சனாவும் பிஆர்டிம் வைத்திருந்ததாக ஒரு குற்றச்சாட்டு வைக்கப்பட்டிருந்தது. இந்த சீசனில் விளையாடிய அவரது காதலரான அருண்  மீது தரைகுறைவான கமெண்ட்களையும் அர்ச்சனாவை திட்டியும் பலர் பதிவிட்டனர். இதனையும் அர்ச்சனா சுட்டிக்காட்டு பல சிலரின் பிஆர் டீமால் நாங்கள் அபியூஸ் செய்யப்படுகிறோம் எனவும் குறிப்பிட்டு ஒரு பதிவை போட்டிருந்தார். மேலும் அதனை குத்தி காட்டுவது போல கடந்த சீசன் போட்டியாளரான மாயாவும் ஒரு பதிவை போட்டிருந்தார். கடந்த சீசனிலும் நாங்களும் ஒரு குறிப்பிட்ட நபரின் பி.ஆர் டீமினால் அபியுசிவ் கமெண்ட் களுக்கு ஆளாக்கப்பட்டோம் என கூறியிருந்தார். இந்த நிலையில் கடந்த சீஷன்களாகவே பிஆர் டீம் ஆட்களை வைத்து ஓட்டு போட வைக்கிறார்கள் என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதனை விஜய் டிவி நிர்வாகமே தலையிட்டு தீர்க்க வேண்டும் என்பது ரசிகர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

Whats_app_banner

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.