Watch Video: " என்ன அவ்வளவு ஸ்பெஷலா " - பப்லு கொடுத்த பிரிவு.. புது கணவருடன் காதலர் தினம் கொண்டாடிய ஷீத்தல்!
Watch Video: காதலர் தினமான இன்றைய தினம், ஷீத்தல் தனது காதலனுடன் பகிர்ந்து கொண்ட காதல் அனுபவங்களை வீடியோவாக ஷீத்தல் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறார்.

Watch Video: குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி தமிழ் சினிமாவில் வில்லன், குணச்சித்திரம் உள்பட பல்வேறு கதாபாத்திரங்களி்ல் நடித்தவர் ப்ருத்விராஜ். பப்லு என்று அழைக்கப்படும் இவர் தற்போது டிவி சீரியல்களில் நடித்து வருகிறார்.
குழந்தை நட்சத்திரம்
சிவாஜி, எம்ஜிஆர் படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்த இவர் அஜித்குமாரின் அவள் வருவாளா, சூர்யாவின் வாரணம் ஆயிரம் படங்களில் நெகடிவ் கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். தமிழ் தவிர தெலுங்கு, மலையாளம், கன்னடம் மொழி படங்களிலும் நடித்துள்ளார் ப்ருத்விராஜ். அதேபோல் டிவி நிகழ்ச்சிக்கு தொகுப்பாளராகவும் இருந்துள்ளார்.
ப்ருத்விராஜ் சினிமாக்களில் நடித்து கொண்டிருக்கும் போதே 1994ஆம் ஆண்டில் பீனா என்பவரை திருமணம் செய்தார். இவர்களுக்கு அஹத் என்ற மகன் உள்ளார். அவருக்கு ஆட்டிசம் குறைபாடு இருக்கிறது.
காதல் வயப்பட்ட பப்லு!
இந்த நிலையில், இவர் ஷீத்தலுடன் காதல் வயப்பட்டார். இது சின்னத்திரை வட்டாரத்தில் பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது. லிவ் இன் ரிலேஷன்ஷிப்பில் இருந்த இவர்கள் கடந்த ஆண்டு திடீரென்று பிரிந்தனர். பப்லு இது குறித்து பேசாத நிலையில், ஷீத்தல் பேட்டி ஒன்றில் மறைமுகமாக காரணத்தை உடைத்தார். அதனை தொடர்ந்து, கடந்த வருட இறுதியில் சுமேஷ் சோமசேகரன் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இந்த நிலையில், காதலர் தினமான இன்றைய தினம், ஷீத்தல் தனது காதலனுடன் பகிர்ந்து கொண்ட காதல் அனுபவங்களை வீடியோவாக தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறார்.
பப்லுவுக்கும், தனக்கும் இடையே நடந்த பிரிவு குறித்து ஷீத்தல் கலாட்டா சேனலுக்கு கடந்த வருடம் பேசி இருந்தார். அந்த பேட்டி இங்கே!
காதலின் வலி அதிகம்
இது குறித்து அவர் பேசும் போது, “எனக்கும் சரி, பப்லுவுக்கும் சரி மக்கள் மத்தியில் ஒரு விதமான இமேஜ் இருக்கிறது. நாங்கள் எங்களுடைய வாழ்க்கையின் மோசமான பக்கங்களை அவர்களிடத்தில் காண்பிக்கவில்லை. எங்களுக்குள் நடந்த அந்த பர்சனலான விஷயங்களை ஷேர் செய்து, நாங்கள் ஒருவரை ஒருவர் வருத்தமடைய செய்ய விருப்பப்படவில்லை. ஒரு கட்டத்தில் நாங்கள் அந்த உறவில் இருந்து வெளியேற முடிவு செய்தோம்.
அந்தப் பிரிவின் வழியாக எனக்கு எந்த வலியும் இல்லை, நான் சகஜமாக வாழ்ந்து கொண்டிருக்கிறேன் என்று பொய் சொல்ல விரும்பவில்லை. எனக்கும் அந்த காதலின் வலி அதிகமாகவே இருக்கிறது. ஆனால் உண்மையில் என்ன நடந்தது என்பதை நான் வெளியே செல்ல விரும்பவில்லை. காரணம் என்னவென்றால், அது மக்கள் மத்தியில் எங்கள் மீது இருக்கும் அபிப்ராயத்தை முற்றிலுமாக மாற்றக்கூடும். நாங்கள் மீண்டும் சேர்வதற்கு முயற்சி செய்தோம் அந்த முயற்சியின் பலன்தான் அனிமல் படத்தின் புரோமோஷனில் நாங்கள் இருவரும் ஒன்றாக சேர்ந்து இருந்தது.
ஒரு மாதத்திற்கு மேலாக இருந்தேன்.
எல்லோரும் நீங்கள் பிரிந்த போது ஏன் நேர்காணல் கொடுக்கவில்லை என்று கேட்டுக் கொண்டிருந்தார்கள். உண்மையாகச் சொல்கிறேன். அந்த பிரிவு உடனடியாக நடந்து இருந்தால், நான் என்ன நடந்தது என்பதை ஓப்பனாக கூறி இருப்பேன். ஆனால் அது அப்படி நடக்கவில்லை. முதலில் சூழ்நிலை மாறியது. அதன் பின்னர் நாங்கள் இருக்கும் இடம் வெவ்வேறானது. அதன் பின்னர் எங்களுடைய வாழ்க்கையும் தனித்தனியாக பிரிந்தது. அதனால் நான் அதைப் பற்றி பேச விரும்பவில்லை. நான் என்னுடைய அம்மாவின் வீட்டில் தான் கிட்டத்தட்ட ஒரு மாதத்திற்கு மேலாக இருந்தேன்.
அந்த சமயத்தில் எனக்கு எழுதுவது தான் ஆறுதலாக இருந்தது இதனை நான் பிரேக்கப்பில் இருப்பவர்களுக்கு கூறிக் கொள்கிறேன், தயவு செய்து எழுத ஆரம்பிங்கள். உண்மையாகச் சொல்ல வேண்டும் என்றால், இதை நான் எதிர்பார்க்கவே இல்லை அதில் இருந்து வெளியே வருவதற்கு எனக்கு அதிக நேரம் பிடித்தது.
நீங்கள் ஒரு ரிலேஷன்ஷிப்பில் இருந்து வெளியே வந்து விட்டீர்கள் என்றால், அந்த நபர் நம்மைப்பற்றி என்ன நினைத்துக் கொண்டிருப்பார் என்பதை பற்றி யோசிக்க கூடாது. காரணம் என்னவென்றால், நீங்கள் அப்படி யோசிக்கும் பட்சத்தில் மீண்டும் அதே வலையில் சிக்குவதற்கான வாய்ப்பு இருக்கிறது. நான் பப்லுவை விட்டு பிரியும் பொழுது அவர் கொடுத்த மோதிரம் முதல் பரிசுப் பொருட்கள் உட்பட அனைத்தையும் கொடுத்துவிட்டுதான் வந்தேன்” என்று பேசினார்.

தொடர்புடையை செய்திகள்
டாபிக்ஸ்