தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  11 Years Of Udhayam Nh4 : சித்தார்த்துக்கும் போலீஸுக்கும் இடையிலான சேஸ்.. பரபரகாட்சிகளுடன் வெளியான உதயம் என்எச் 4!

11 Years of Udhayam NH4 : சித்தார்த்துக்கும் போலீஸுக்கும் இடையிலான சேஸ்.. பரபரகாட்சிகளுடன் வெளியான உதயம் என்எச் 4!

Divya Sekar HT Tamil
Apr 19, 2024 06:00 AM IST

Udhayam NH4 : கொஞ்சம் த்ரில்லர், பின்னணியில் கொஞ்சம் அரசியல், வழக்கமான காதல் கதை என கலந்து கட்டி முழு என்டர்டைன்ராக அமைந்த உதயம் nh4 திரைப்படம் வெளியாக இன்றுடன் 11 ஆண்டுகள் ஆகிறது.

Udhayam NH4
Udhayam NH4

ட்ரெண்டிங் செய்திகள்

இப்படத்தில் சித்தார்த், அஷ்ரிட ஷெட்டி,கே கே மேனன், கிஷோர் தீபக், ரம்யா ஆகியோர் நடித்துள்ளனர். இதில் கவுரவ தோற்றத்தில் ரம்யா நடித்து இருப்பார். ஹீரோவாக சித்தார்த்தும், ஹீரோயினாக அஷ்ரிட ஷெட்டியும், கேகே மேனன் முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்திருப்பார்கள். இதுதவிர ஆடுகளம் நரேன், காளி வெங்கட் போன்ற நடிகர்களும், பல்வேறு புதுமுகங்களும் இந்த படத்தில்  சிறப்பாக நடித்து இருப்பார்கள்.

நாயகன் சித்தார் பெங்களூர் உள்ள கல்லூரி ஒன்றில் தனது கல்லூரி படிப்பை பயில்கிறார். அதே கல்லூரியில் பெங்களூருவின் அரசியல் பெரும் புள்ளியின் மகளான நாயகி அஷ்ரிட ஷெட்டி பயில்கிறார். அஷ்ரிட ஷெட்டிக்கும், சித்தார்த்துக்கும் காதல் மலர்கிறது. மைனராக உள்ள அஷ்ரிட ஷெட்டியை தந்தையிடம் இருந்து காப்பாற்ற சித்தார்த் கடத்தல் நாடகம் தனது நண்பர்களுடன் சேர்ந்து செய்கிறார். அப்போது அவர்களுக்கும் போலீசுக்கும் இடையே சேஸ் என பரபரப்பான காட்சிகளுடன் படம் எடுக்கப்பட்டிருக்கும். கிளைமாக்ஸ் என்பது சுபமாக முடிவடைந்திருக்கும்.

இந்தக் கதை என்பது எப்பொழுதும் போல காதல் கதையாக இருந்தாலும், காதலுக்கு எதிரான இந்தத்துவ அமைப்புகளின் எதிர்ப்பில் தொடங்கி தனது மகளின் காதல் விவகாரத்தால் தனது அரசியல் வாழ்க்கை பறிபோக இருக்கும் நிலையில் அரசியல் எதிர்காலத்தை காப்பாற்ற தந்தை என்ன செய்கிறார் என ஆங்காங்கே கர்நாடகா அரசியலை தனது திரைக்கதையில் கொண்டு வந்திருப்பார் வெற்றிமாறன்.

இந்த திரைப்படத்தை பொருத்தவரை சித்தார்த் கதாபாத்திரம் மிகவும் கேஷுவலாக கேரிங் நபராக காட்சிப்படுத்தப்பட்டிருக்கும் அதேபோலஅஷ்ரிட ஷெட்டிக்கும், சித்தார்த்துக்கும் இடையே காதல் மலரும் காட்சி அவ்வளவு அருமையாக அமைக்கப்பட்டிருக்கும். இவர்களின் காதல் மிகவும் யதார்த்தமாக இந்த திரைப்படத்தில் அமைந்திருக்கும்.

அதேபோல இப்படத்தில் என் எச் 4ல் தப்பிக்கும் பரபர சேசிங் காட்சிகள் அப்போது வரும் பிளாஷ்பேக் பின்னணி காட்சிகள் என நான் லீனர் பாணியில் திரைக்கதை அமைக்கப்பட்டிருப்பதால் பார்வையாளர்களை படம் பயணிக்க வைக்கிறது. ஒரு விறுவிறுப்பான காட்சியாக அமைக்கப்பட்டிருக்கும்.

அதேபோல இப்படத்திற்கு இசையும் அற்புதமாக அமைந்திருக்கும் ஜிவி பிரகாஷ் இசையில் யாரோ இவன் யாரோ இவன் என்ற பாடல் காதலர்களுக்கு ஒரு வரப் பிரசாதம் என்றே சொல்லலாம் இன்று வரை இந்த பாடல் whatsapp ஸ்டேட்டஸிலும் நாம் பார்க்க முடியும். அதேபோல இப்படத்தில் இடம்பெற்ற கானா பாலாவின் ஓரக்கண்ணாலே பாடல் செம ஹிட் அடித்த பாடல்.

இப்படம் மொத்தத்தில் கொஞ்சம் த்ரில்லர், பின்னணியில் கொஞ்சம் அரசியல், வழக்கமான காதல் கதை என கலந்து கட்டி முழு என்டர்டைன்ராக அமைந்த உதயம் nh4 திரைப்படம் வெளியாக இன்றுடன் 11 ஆண்டுகள் ஆகிறது.

வெற்றிமாறன் தேசிய நெடுஞ்சாலை என்ற பெயரில் தனுஷிடம் இந்த கதையை சொல்லியுள்ளார். தனுசும் இதற்கு நடிக்க ஒப்புக்கொண்டார். ஆனால் பல தயாரிப்பாளர்கள் கையில் மாறி மாறி இந்த கதை டிராப்பானது. அதனால் இந்த கதையை ஒதுக்கி வைத்து விட்டு முதல் படமாக தனுஷை வைத்து பொல்லாதவன் படத்தை எடுத்தார் வெற்றிமாறன். பின்னர் தனது உதவி இயக்குனருக்கு இந்த கதையை கொடுத்து படத்தை எடுத்து வெற்றியும் கண்டார் வெற்றிமாறன்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

IPL_Entry_Point

டாபிக்ஸ்