L2 - Empuran : மாஸ் லுக்கில் மோகன்லால்.. ‘L2 - எம்புரான்’ படத்தின் புதிய போஸ்டரை வெளியிட்டு படக்குழு வாழ்த்து!
Mohanlal Birthday : நடிகர் மோகன்லாலின் பிறந்தநாளை முன்னிட்டு பிருத்திவிராஜ் இயக்கத்தில் அவர் நடிக்கும் ‘L2 - எம்புரான்’ படத்தின் புதிய போஸ்டரை படக்குழு வெளியிட்டு வாழ்த்து தெரிவித்துள்ளது.

கடந்த 2019ஆம் ஆண்டு மலையாள நடிகர் பிருத்விராஜ் மற்றும் மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால் நடிப்பில் வெளிவந்த லூசிஃபர் படம் பிரமாண்ட வெற்றி பெற்றது. இப்படம் ரூ. 200 கோடி வசூல் செய்து சாதனை படைத்தது. இந்நிலையில் இதன் இரண்டாம் பாகம் எப்போது வரும் ரசிகர்கள் ஆவலோடு காத்திருந்தனர். இந்த நிலையில் லூசிஃபர் படத்தின் இரண்டாம் பாகத்திற்கு 'L2 எம்புரான்’ என டைட்டில் வைக்கப்பட்டிருந்தது.
L2 - எம்புரான்’ படத்தின் புதிய போஸ்டர்
பிருத்விராஜ் சுகுமாறன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் எம்புரான்' படத்தை லைக்கா புரொடக்ஷன்ஸ் சுபாஷ்கரன் மற்றும் ஆசீர்வாத் சினிமாஸ் ஆண்டனி பெரும்பாவூர் ஆகியோர் இணைந்து தயாரித்துள்ளனர்.
இந்த பாகத்திலும் மோகன்லால் நடித்துள்ளார். மிகப்பெரிய பொருட்செலவில் பிரம்மாண்டமாக படம் உருவாகியுள்ளதாகவும் படம் ரிலீசாகி தென்னிந்தியாவில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும் படத்தின் தயாரிப்பு குழு தெரிவித்துள்ளது. லூசிஃபர் 2 படத்தின் ஃபர்ஸ்ட் லுக் கடந்த ஆண்டு வெளியானது. இந்த ஃபர்ஸ்ட் லுக் இணையத்தில் வைரலாக பரவியது.