BigBoss7: சிறை செல்லாமல் ஸ்டிரைக் செய்த விசித்ரா, அர்ச்சனா; மாத்தியோசித்த தினேஷ்
பிக்பாஸ் சீசன் 7ல் விசித்ராவும் அர்ச்சனாவும் செய்த அட்ராசிட்டி எக்ஸ் தளத்தில் ட்ரெண்ட் ஆகி வருகிறது.
பிக்பாஸ் சீசன் 7, 46 நாள்களைக் கடந்து பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ளது. பிக்பாஸ் சீசன் 7ல் விசித்ராவையும் அர்ச்சனாவையும் கடந்தவாரம் சரியாக விளையாடவில்லை எனக்கூறி, பிக்பாஸ் ஜெயிலுக்குச் செல்ல சொல்கிறார். அவர்கள் அதனை மறுத்து, பிக்பாஸ் ஹவுஸ் வராண்டாவில் உட்கார்ந்துகொள்கின்றனர்.
அப்போது இந்த வாரத்திற்கான பிக்பாஸின் வீட்டின் கேப்டன் தினேஷ், விசித்ரா மற்றும் அர்ச்சனாவிடம் போய் ’அப்படியெல்லாம் வெளியில் அமராதீர்கள். இது தன்னுடைய முடிவல்ல, குறைவான மதிப்பெண்கள் எடுத்ததால் பிக்பாஸ் சொன்ன முடிவு; ஆகையால் தாங்கள் இருவரும் ஜெயிலுக்குப் போய் தான் ஆகவேண்டும். அது தான் விதி; இப்படி ஸிம்பதிக்காக உட்காரவேண்டாம்’ எனத் தெரிவிக்கிறார். உடனே, விசித்ராவும் அர்ச்சனாவும் தாங்கள் ஸிம்பதிக்காக வெளியில் உட்காரவில்லையென்றும்; கடந்த வாரம் தாங்கள் இருவரும் நன்றாக விளையாடியதாகவும் கூறுகிறார்.
அதற்கு தினேஷ், ’பிக்பாஸ் கூறியதை ஒரு சவாலாக எடுத்துக்கொண்டு அதில் வெற்றிபெற்றிருக்கவேண்டும்’ என்கிறார். அதற்குப் பதில் கூறும் அர்ச்சனா, ’இல்லை தாங்கள் உள் அரசியலால் பாதிக்கப்பட்டிருக்கோம்’ என்று கூறுகிறார். மேலும் விசித்ரா, கடந்த வாரம் முழுக்க தாங்கள் கார்னர் செய்யப்பட்டதாகவும் புலம்புகின்றார். இதுகுறித்தான காணொலி வைரல் ஆகி வருகிறது.
ஒரு வீடியோவில் வெளியில் அமர்ந்து இருக்கும் விசித்ராவும் அர்ச்சனாவும் ஜோடிகள் குறித்துப்பேசி கிண்டல் அடித்துக்கொண்டனர். அதில், 'விக்ரம் அக்ஷயாவுடனும், மணி ரவீனாவுடனும், அர்ச்சனா விசித்ராவுடனும் இருப்பதாக ஜோடி சேர்த்து பேசுகின்றனர். தங்களது ஜோடியை நான் ஒத்துக்கொள்ளமுடியாது’என்கிறார், விசித்ரா. மேலும் தான் தனது கணவருடன் மட்டும் தான் ஜோடி என்றும் விசித்ரா கூறுகிறார். அப்போது சிரித்தபடி பேசும் விஜே அர்ச்சனா, தான் இனிமேல் தான் போய் தேட வேண்டும் என்கிறார். இக்காணொலி எக்ஸ் தளத்தில் வைரல் ஆகி வருகிறது.
அதன்பின், அவ்விடம் வரும் கேப்டன் தினேஷ், அவர்கள் இருக்கும்பகுதியில் வந்து உணவினை கொடுத்துவிட்டுச் செல்கின்றார்.
இந்தக் கூத்தையெல்லாம் பார்த்துகொண்டு இருக்கும் மாயா, பூர்ணிமா மற்றும் ஜோவிகா ஆகியோர் மணியையும் ரவீனாவையும் விசித்ரா மற்றும் அர்ச்சனாவுக்கு எதிராக மூளைச்சலவை செய்ய முயற்சிக்கின்றனர். அப்போது மணி, பிரதீப்பை மட்டும் குத்திகாட்டிட்டே இருந்தீங்க எனச் சொல்லி, மாயாவின் பேச்சை தவிர்க்கிறார்.
பின் கேப்டன் தினேஷ், ரவீனா, மணி ஆகியோர் விசித்ரா மற்றும் அர்ச்சனாவைச் சுற்றி தூங்குகின்றனர். அப்போது, நீங்கள் உள்ளே செல்ல தயார் என்றால் தாங்கள் ஜெயிலுக்குச் செல்ல தயார் என தெரிவிக்கிறார், விஜே அர்ச்சனா. பின் அனைவரும் உள்ளே சென்று தூங்கச் செல்கின்றனர். அர்ச்சனாவும் விசித்ராவும் ஜெயிலுக்குச் சென்று தூங்குகின்றனர்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், ஆன்மிகம், புகைப்பட கேலரி, வெப் ஸ்டோரி, வேலைவாய்ப்பு தகவல்கள், சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.