ராஜநடை.. அதே ஒய்யாரம்.. கரகரனு அறுத்து கம்பேக் கொடுக்கும் அனுஷ்கா.. காடி ரிலீஸ் தேதி எப்போது தெரியுமா?
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  ராஜநடை.. அதே ஒய்யாரம்.. கரகரனு அறுத்து கம்பேக் கொடுக்கும் அனுஷ்கா.. காடி ரிலீஸ் தேதி எப்போது தெரியுமா?

ராஜநடை.. அதே ஒய்யாரம்.. கரகரனு அறுத்து கம்பேக் கொடுக்கும் அனுஷ்கா.. காடி ரிலீஸ் தேதி எப்போது தெரியுமா?

Marimuthu M HT Tamil
Dec 15, 2024 02:23 PM IST

ராஜநடை.. அதே ஒய்யாரம்.. கரகரனு அறுத்து கம்பேக் கொடுக்கும் அனுஷ்கா.. காடி ரிலீஸ் தேதி எப்போது தெரியுமா? என்பது குறித்துப் பார்ப்போம்.

ராஜநடை.. அதே ஒய்யாரம்.. கரகரனு அறுத்து கம்பேக் கொடுக்கும் அனுஷ்கா.. காடி ரிலீஸ் தேதி  எப்போது தெரியுமா?
ராஜநடை.. அதே ஒய்யாரம்.. கரகரனு அறுத்து கம்பேக் கொடுக்கும் அனுஷ்கா.. காடி ரிலீஸ் தேதி எப்போது தெரியுமா?

தென்னிந்தியாவில் பிரபல நடிகையாக இருந்தவர், நடிகை அனுஷ்கா ஷெட்டி. தமிழில் சுந்தர்.சி இயக்கத்தில் ’ரெண்டு’ படம் மூலம் ஹீரோயினாக அறிமுகமாகி, முன்னணி ஹீரோக்கள் பலருடனும் ஜோடியாக நடித்து தமிழ் ரசிகர்கள் பலரை தன்வசப்படுத்தியவர்.

குறிப்பாக, வேட்டைக்காரன் திரைப்படத்தில் நடிகர் விஜய்யுடனும், சிங்கம் பட சீரிஸில் சூர்யாவுடனும், தெய்வத்திருமகள் மற்றும் தாண்டவம் படத்தில் நடிகர் விக்ரமுடனும் நடித்து பிரபலமானார். அதைத்தொடர்ந்து சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் லிங்கா படத்திலும், என்னை அறிந்தால் படத்தில் அஜித்துடனும் நடித்து தமிழ்நாட்டின் பட்டிதொட்டியெங்கும் பெரிய நாயகியாக ஆனார்.

இந்நிலையில் பாகுபலி மற்றும் பாகுபலி 2-வுக்குப் பின் பெரிய ஹிட் படங்கள் எதிலும் நடிக்காமல் ஒதுங்கியிருந்தார். முன்னதாக, இஞ்சி இடுப்பழகி என்னும் படத்தில் நடிப்பதற்காக, அதிக எடையுடைய பெண்ணாக அனுஷ்கா மாறியதாகவும், அதனால் தான், அவர் சினிமாவில் நடிக்கவில்லை எனவும் பேச்சுக்கள் எழுந்தன.

பான் இந்தியப் படமாக உருவாகும் ’காடி’ திரைப்படம்:

இந்நிலையில் ஒரு புதிய பான் இந்தியப் படத்தில் நடித்து வருகிறார். 2011ஆம் ஆண்டு, வானம் படத்தில் அனுஷ்காவை, விலை மாந்தர் போல் நடிக்கவைத்து கவனம் ஈர்த்த கிரிஷ் ஜகர்லமுடி இயக்கத்தில் ‘காடி’ என்ற படத்தில் மிரட்டலாக நடித்து வருகிறார்.

இப்படத்தை ராஜீவ் ரெட்டி மற்றும் சாய் பாபு ஜகர்லமுடி ஆகியோர் காதி இணைந்து தயாரிக்கிறார்கள். இது யுவி கிரியேஷன்ஸ் பேனரின் கீழ் அனுஷ்கா நடிக்கும் நான்காவது படம் ஆகும். இப்படத்தில் நாகவல்லி வித்யாசாகர் இசையமைப்பாளராகவும், மனோஜ் ரெட்டி கட்டசானி ஒளிப்பதிவாளராகவும், தோட்டா தரணி கலை இயக்குநராகவும் பணியாற்றியுள்ளனர். சாய் மாதவ் புர்ரா வசனம் எழுதியுள்ளார்.

மிரட்டலான டீஸர்:

முன்னதாக அனுஷ்கா ஷெட்டியின் பிறந்தநாளான டிசம்பர் 7ஆம் தேதி, காடி திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியானது.

அதனைத்தொடர்ந்து அந்த காடி படத்தின் டீசர் வீடியோ வெளியானது. அதில், 47 விநாடிகள் ஓடும் இந்த கிளிம்ப்ஸ் வீடியோவில் அனுஷ்கா ஷெட்டி சேலை அணிந்து, கருப்பு சால்வை அணிந்து, பாரம்பரிய நகைகளை அணிந்திருக்கிறார்.

போலீசார் அவரை தேடி வரும்போது, பேருந்தில் ஏறி ஒருவரின் தலையை கூரான அரிவாளால் வெட்டுகிறார். குறிப்பாக, அவர் நேராகப் பார்த்து அறுக்காமல், பேருந்தின் ரியர் வியூ கண்ணாடியில் பார்த்துக் கொண்டே ஒருவரை அரிவாளால் அறுக்கிறார். இறுதியில் கஞ்சா புகைக்கிறார்.

புதிய அப்டேட்:

இந்நிலையில் ‘காடி’ திரைப்படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு ஒரு வீடியோவாகப் பதிவு செய்து வெளியிட்டுள்ளது. அதன்படி, படத்தை முடிக்க தயாரிப்பாளர்களிடம் இயக்குநர் மூன்று மாதங்கள் கால அவகாசம் கேட்கிறார். அதற்கு, தயாரிப்பாளர்களோ நான்கு மாதங்கள் எடுத்துக்கொள்ளுங்கள் என்கிறார். உடனே, ரிலீஸ் தேதி எப்போது எனக் கேட்கிறார், டைரக்டர் கிரிஷ். அதற்கு அனுஷ்கா அடுத்த வருடம் ஏப்ரல் 18ஆம் தேதி என சஸ்பென்ஷாக முகம் காட்டி சொல்கிறார்.

இப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய ஐந்து மொழிகளில் வெளியாகவுள்ளது. 

அதற்கு ஒரு ரசிகர், "ராணி திரும்பி வந்துவிட்டாள்" என்று சோசியல் மீடியாவில் கமெண்ட் எழுதியிருக்கிறார். மற்றொரு ரசிகர், "தேவசேனா ஒரு உண்மையான லேடி சூப்பர் ஸ்டார்' என்று புகழ்ந்தார். 

Whats_app_banner

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.