GV Prakash Saindhavi: ‘உயிரும் உலகமும் பிரிந்தது’ …‘நாங்கள் பிரிந்து விட்டோம்’ - ஜிவிபிரகாஷ்குமார் அறிக்கை!
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Gv Prakash Saindhavi: ‘உயிரும் உலகமும் பிரிந்தது’ …‘நாங்கள் பிரிந்து விட்டோம்’ - ஜிவிபிரகாஷ்குமார் அறிக்கை!

GV Prakash Saindhavi: ‘உயிரும் உலகமும் பிரிந்தது’ …‘நாங்கள் பிரிந்து விட்டோம்’ - ஜிவிபிரகாஷ்குமார் அறிக்கை!

Kalyani Pandiyan S HT Tamil
May 13, 2024 11:35 PM IST

GV Prakash Saindhavi: நீண்ட யோசனைகளுக்கு பிறகு, 11 வருட திருமணவாழ்க்கையை முடித்துக்கொண்டு, அவரவர் பாதைகளில் செல்ல முடிவெடுத்து இருக்கிறோம். - ஜிவிபிரகாஷ்குமார்

GV Prakash Saindhavi: ‘உயிரும் உலகமும் பிரிந்தது’ …‘நாங்கள் பிரிந்து விட்டோம்’ - ஜிவிபிரகாஷ்குமார் அறிக்கை!
GV Prakash Saindhavi: ‘உயிரும் உலகமும் பிரிந்தது’ …‘நாங்கள் பிரிந்து விட்டோம்’ - ஜிவிபிரகாஷ்குமார் அறிக்கை!

இது குறித்து அவர்கள் வெளியிட்டு இருக்கும் அறிக்கையில், “ ஒருவருக்கொருவர் மேல் இருக்கும் பரஸ்பர மரியாதையை பேணுவதின் வாயிலாக, எங்களின் மன அமைதி மற்றும் முன்னேற்றத்திற்காக, நீண்ட யோசனைகளுக்கு பிறகு, 11 வருட திருமணவாழ்க்கையை முடித்துக்கொண்டு, அவரவர் பாதைகளில் செல்ல முடிவெடுத்து இருக்கிறோம். எங்களது இந்த தனிப்பட்ட மாற்றத்தை ஊடகங்கள், ரசிகர்கள், நண்பர்கள் புரிந்துகொண்டு, எங்களது தனிப்பட்ட விவகாரத்திற்கு மதிப்பளிக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.” என்று குறிப்பிட்டு இருக்கின்றனர். 

முன்னதாக, பள்ளி நாட்களில் இருந்தே காதலித்து வந்த இவர்கள், கடந்த 2013ம் ஆண்டு, ஜூன் 27 அன்று சென்னையில் பிரமாண்டமான முறையில் திருமணம் செய்து கொண்டனர். இவர்கள் கடந்த 2020ம் ஆண்டு தங்களின் பெண் குழந்தையை வரவேற்றனர்.

ஜி.வி. பிரகாஷ் - சைந்தவி இடையே கருத்து வேறுபாடு?

இந்நிலையில்தான், இருவரும் விவாகரத்து பெற போவதாக, சமூக வலைதளங்களில் தகவல் வெளியாகி வந்தது. அதில் இருவருக்கும் இடையே கருத்துவேறுபாடு ஏற்பட்டு பிரிந்து வாழ்ந்து வருவதாகவும், விரைவில் விவாகரத்து செய்ய இருப்பதாகவும், குறிப்பிடப்பட்டு இருந்தது. பலருக்கும் அதிர்ச்சியளித்த இந்த தகவல் தற்போது உறுதியாகி இருக்கிறது. 

இசையமைப்பாளராக பல படங்களில் பணியாற்றி வரும் ஜிவி பிரகாஷ், த்ரிஷா இல்லன்னா நயன்தாரா படத்தில் நடிகராக அறிமுகமானார். தொடர்ந்து பல்வேறு திரைப்படங்களில் நடிகராக நடித்து வந்தாலும், இசையிலும் தன்னுடைய முத்திரையை பதித்து வருகிறார். 

செட்டிநாடு பள்ளியில் படிப்பு

முன்பு ஒரு முறை பேட்டியில், ஜி .வி. பிரகாஷ் மற்றும் சைந்தவி தங்கள் காதல் கதை பற்றி பேசுகையில், “ நான் 10 ஆம் வகுப்பு படிக்கும் போது அவரை பார்த்தேன். அப்போது நாங்கள் இருவரும் சென்னையில் உள்ள செட்டிநாடு பள்ளியில் படித்துக் கொண்டிருந்தோம். 

சிறுவயது முதலே இசையின் மீது ஆர்வம் கொண்ட இவர், பள்ளியில் மியூசிக் பேண்ட் ஒன்றை நடத்தி வந்தார். பள்ளியில் நல்ல பாடகர்கள் இருக்கிறார்கள் என்று தெரிந்தால், அவர்களை இசைக்குழுவில் சேர்த்துக் கொள்வார்” என்று சைந்தவி பேச, தொடர்ந்து பேசிய ஜிவி,  “ஒருமுறை சைந்தவி பாடுவதைக் கேட்டேன். 

அவளுடைய பாடலைக் கேட்டு, நான் என்னை மறந்துவிட்டேன். அவள் அழகும் கூட.. பள்ளியில் எந்த போட்டியிலும், எங்கள் அணி வெற்றி பெறும். அவள் பாடிக்கொண்டிருந்தால், நான் என்னையே மறந்துவிடுவேன். அவளது பாடல் மட்டுமல்ல, அவளது வார்த்தைகளும் என் இதயத்தை இனிமையாகத் தொட்டன. நாங்கள் போனில் அழைப்பது வழக்கம். அப்போது சைந்தவிக்கும் என்னை பிடிக்கும் என்று உறுதியாக நம்பினேன்.” என்றார். 

பள்ளி காதல் மீது நம்பிக்கை இல்லையா?

மேலும் பேசிய அவர் “பெரும்பாலான மக்கள் பள்ளி காதல் மீது நம்பிக்கை இல்லை என சொல்கிறார்கள். ஆனால் நான் நம்புகிறேன். எங்களுடைய காதல் உண்மையான காதல். அதனால் தான் 10 ஆம் வகுப்பு படிக்கும் போதே சொல்ல நினைத்தேன். 

ஆனால், அவள் எனக்கு அந்த வாய்ப்பை தரவில்லை. ஒரு நாள் நாங்கள் சந்தித்தபோது, அவள் என்னை விரும்புகிறாள் என்று சொன்னாள். ஆச்சரியம்...! நான் ப்ரோபோஸ் செய்ய நினைத்தால், அவள் எதிர்பாராத விதமாக என்னிடம் சொன்னாள். யோசித்து விட்டு கிளம்பினேன். இரண்டாவதாக என் காதலை சொன்னேன்” என்றார்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Whats_app_banner

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.