தமிழ் செய்திகள்  /  Entertainment  /  Nutritionist Divya Sathyaraj Talk About Private Hospitals

Divya Sathyaraj About Private Hospitals: நோயாளிகள் பணம் உருவாக்கும் இயந்திரமா? - நடிகர் சத்யராஜ் மகள் திவ்யா வேதனை!

Karthikeyan S HT Tamil
Mar 09, 2024 06:41 PM IST

Divya Sathyaraj Video: கோலிவுட் சினிமாவின் முன்னணி நடிகரான சத்யராஜின் மகள் திவ்யா சத்யராஜ், தனியார் மருத்துவமனையில் நடக்கும் மோசடிகள் குறித்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

ஊட்டச்சத்து நிபுணர் திவ்யா சத்யராஜ்.
ஊட்டச்சத்து நிபுணர் திவ்யா சத்யராஜ்.

ட்ரெண்டிங் செய்திகள்

கோலிவுட்டின் பிரபல நடிகரான சத்யராஜின் மகள் திவ்யா சத்யராஜ். ஊட்டச்சத்து நிபுணராக பணியாற்றி வரும் இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் உடல் ஆரோக்கியம் குறித்துத் தொடர்ந்து பதிவிட்டு வருகிறார். இந்த நிலையில், இன்று அவர் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்த வீடியோ ஒன்று சமூக வலைதலங்களில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில், "தனியார் மருத்துவமனையில் நடக்கும் ஒரு முக்கியமான விஷயத்தை சொல்வதற்காகதான் இந்த வீடியோவை வெளியிட்டிருக்கிறேன். இது என்னுடைய மருத்துவ நண்பர்கள் சொன்ன தகவல். சில தனியார் மருத்துவமனைகள் லாபம் வரவேண்டும் என்பதற்காக நோயாளிகளுக்குத் தேவையில்லாத ரத்த பரிசோதனை, ஸ்கேன், எம்.ஆர்.ஐ ஸ்கேன் போன்றவற்றை எடுக்கவைக்கிறார்கள்.

சில நோயாளிகள் குணமானதற்குப் பிறகும் இரண்டு நாட்கள் கழித்தே அவர்களை டிஸ்சார்ஜ் செய்கிறார்கள். தனியார் மருத்துவமனைக்குப் போனால் நோய் குணமாகும் என்ற நம்பிக்கையை விட, பணம் செலவாகும் என்கிற பயம்தான் அதிகமாக இருக்கிறது. எங்கள் அமைப்பு மூலம் சில நோயாளிகளுக்கு நாங்கள் உதவி செய்தாலும், எல்லா நோயாளிகளுக்கும் உதவி செய்வது என்பது முடியாத விஷயம். நோயாளிகள் வருவாய் உருவாக்கும் இயந்திரங்கள் கிடையாது. தனியார் மருத்துவமனை வைத்திருப்பவர்கள் நோயாளிகளை மனிதாபிமானத்தோடு நடத்த வேண்டும் என்று தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்." என்று திவ்யா சத்யராஜ் பேசி உள்ளார். இந்த வீடியோ தான் தற்போது சமூக வலைதலங்களில் வேகமாக பரவி வருகிறது.

சமீபத்தில் திவ்யா சத்யராஜ் தேர்தலில்‌ போட்டியிடப்போவதாக செய்திகள் வெளியாகி இருந்தன. இதற்கு விளக்கம் கொடுத்த திவ்யா, "எனக்கு ஒரு கட்சியில் இருந்து அழைப்பு வந்தது உண்மைதான்‌. நான்‌ பதவிக்காகவோ அல்லது தேர்தலில்‌ வெல்வதற்காகவோ அரசியலுக்கு வரவேண்டும்‌ என்று நினைக்கவில்லை. மக்களுக்காக வேலை செய்வதற்காகத்‌ தான்‌ அரசியலுக்கு வரவேண்டும்‌ என்று நினைக்கிறேன்‌. ஆனால், எந்த ஒரு மதத்தைப்‌ போற்றும்‌ கட்சியுடனும் இணைய எனக்கு விருப்பம்‌ இல்லை." என்று திவ்யா சத்யராஜ் அறிக்கை வெளியிட்டு இருந்தார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டிருந்த அறிக்கையில், "வணக்கம்‌. எனக்கு அரசியலில்‌ ஆர்வம்‌ உண்டு என்று சில பத்திரிக்கை நண்பர்களிடம்‌ சொல்லியிருந்தேன்‌. அதற்குப்‌ பிறகு எல்லோரும்‌ என்னைக்‌ கேட்கும்‌ கேள்விகள்‌ ‘நீங்கள்‌ எம்‌.பி ஆவதற்காக அரசியலுக்கு வருகிறீர்களா? ராஜ்யசபா எம்‌.பி ஆகனும்கற ஆசை இருக்கா? மந்திரி பதவி மேல்‌ ஆர்வம்‌ உள்ளதா? சத்யராஜ்‌ உங்களுக்குப்‌ பிரச்சாரம்‌ செய்வாரா?’ இப்படிப்‌ பல கேள்விகள்‌.

நான்‌ பதவிக்காகவோ, தேர்தலில்‌ வெல்வதற்காகவோ அரசியலுக்கு வரவேண்டும்‌ என்று நினைக்கவில்லை. மக்களுக்காக வேலை செய்வதற்காகத்‌ தான்‌ அரசியலுக்கு வரவேண்டும்‌ என்று நினைக்கிறேன்‌. நான்‌ களப்பணிகள்‌ செய்ய ஆரம்பித்து சில வருடங்கள்‌ ஆகிறது. 'மகிழ்மதி இயக்கம்‌' என்ற அமைப்பை மூன்று வருடங்களுக்கு முன்‌ ஆரம்பித்தேன்‌. அந்த அமைப்பின்‌ மூலம்‌ தமிழகத்தில் வறுமைக்கோட்டிற்குக்‌ கீழ்‌ இருக்கும்‌ மக்களுக்கு இலவசமாக ஊட்டச்சத்து நிறைந்த உணவு வழங்கப்படுகிறது. நான்‌ தனிக்கட்சி ஆரம்பிக்கப்‌ போவதில்லை.

வரும்‌ தேர்தலில்‌ போட்டியிட எனக்கு ஒரு கட்சியிலிருந்து அழைப்பு வந்தது உண்மைதான்‌. ஆனால்‌, எந்த ஒரு மதத்தைப்‌ போற்றும்‌ கட்சியுடனும் இணைய எனக்கு விருப்பம்‌ இல்லை. எந்தக்‌ கட்‌சியுடன்‌ இணையப்‌ போகிறேன்‌ என்பதை தேர்தல்‌ முடிந்தவுடன்‌ அறிவிப்பேன்‌. சத்யராஜ்‌ அவர்களின்‌ மகளாகவும்‌, ஒரு தமிழ்‌ மகளாகவும்‌, தமிழகத்தின் நலன்‌ காக்க உழைப்பேன்‌” என்று தெரிவித்திருந்தார்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

IPL_Entry_Point

டாபிக்ஸ்