Tamil News  /  Entertainment  /  Nteresting Story Of The Song Oru Naala Pothuma Which Was Featured In The Movie Thiruvilayadal

Story of Song : வரி கிடைக்காமல் திணறிய கண்ணதாசன்.. நக்கல் செய்த கேவிஎம்.. ஒரு நாள் போதுமா பாடல் உருவான கதை!

Divya Sekar HT Tamil
Jan 10, 2024 05:45 AM IST

திருவிளையாடல் படத்தில் இடம்பெற்ற ஒரு நாள் போதுமா பாடல் உருவான சுவாரஸ்யமான கதை குறித்து இதில் காண்போம்.

ஒரு நாள் போதுமா பாடல் உருவான கதை
ஒரு நாள் போதுமா பாடல் உருவான கதை

ட்ரெண்டிங் செய்திகள்

சிவாஜி கணேசனும், சாவித்ரி கடவுள்களான பரமசிவன் -பார்வதியை கண் முன் காட்டியிருப்பார்கள். அதேபோல நடிப்பில் பிரமாதப்படுத்தி இருப்பார். சிவாஜியும் நாகேஷ் இருவரும் பேசி நடிக்கும் காட்சி இன்று வரை தமிழ் சினிமாவில் முக்கிய காட்சியாக பார்க்கப்படுகிறது.

கே.வி மகாதேவன் இசையில் இந்த படத்தில் உள்ள அனைத்து பாடல்களும் பெரிய வரவேற்பை பெற்றன. இந்தப் பாடல்கள் அனைத்தையும் கவியரசு கண்ணதாசன் எழுதியிருப்பார். குறிப்பாக ஒரு நாள் போதுமா பாடல் இன்றும் பலராலும் ரசிக்கப்பட்டு வருகிறது. அப்படியான இந்தப் பாடல் உருவான சுவாரஸ்யமான கதை குறித்து இதில் காண்போம்.

”ஒரு நாள் போதுமா

இன்றொரு நாள் போதுமா

நான் பாட இன்றொரு நாள்

போதுமா நாதமா கீதமா

அதை நான் பாட இன்றொரு

நாள் போதுமா புது ராகமா

சங்கீதமா அதை நான் பாட

இன்றொரு நாள் போதுமா

ராகமா சுக

ராகமா கானமா தேவ

கானமா ராகமா சுக

ராகமா கானமா தேவ

கானமா

என் கலைக்கிந்த

திரு நாடு சமமாகமா என்

கலைக்கிந்த சிறு நாடு

சமமாகமா நாதமா கீதமா

அதை நான் பாட இன்றொரு

நாள் போதுமா”

இந்த பாடலை முதலில் பாட வைக்க அணுகியது சீர்காழியை தான். ஆனால் இந்தப் பாடலில் தோற்றுப் போவது போன்ற காட்சி அமைக்கப்பட்டதால் தோற்றுப் போகும் பாடலை நான் பாட மாட்டேன் என சீர்காழி சொல்லிவிட்டாராம். அதன் பிறகு உண்மையை சொல்லி டாக்டர் பாலமுரளி கிருஷ்ணனை இயக்குனர் அணுகுகிறார். அதற்கு இதில் என்ன இருக்கிறது நான் பாடுகிறேன் என சொல்கிறார்.

அதன் பிறகு பாடலை எழுதுவதற்கு கண்ணதாசனை அணுகுகிறார் கே பி நாகராஜன். பின்னர் பாடலுக்கான காட்சியை கண்ணதாசனிடம் அவர் கூற ஓகே எழுதிவிடலாம் என கண்ணதாசன் சொல்கிறார். பின்னர் காலையில் அலுவலகத்திற்கு கண்ணதாசன் வருகிறார். காலை உணவை உண்கிறார் பின்னர் காட்சிக்கான பாடலை எழுத யோசிக்கிறார். ஆனால் பாடல் வரி அவருக்கு ஏற்றார் போல் வரவில்லை. பிறகு மதிய உணவு சாப்பிடுகிறார் அதன் பிறகு பாடல் வரிகளை எழுத முயற்சிக்கிறார்.

ஆனாலும் முதல் வரி அவருக்கு வரவில்லை. இதைப் பார்த்த கேவிஎம் என்ன கவிஞரே இந்த பாடல் எழுத ஒரு நாள் போதுமா இல்லை இன்னும் வேண்டுமா என கேட்கிறார். இதைக் கேட்ட கண்ணதாசன் எனக்கு பாடல் வரி கிடைத்துவிட்டது என கூறி ஒருநாள் போதுமா என வரிகள் எழுத ஆரபித்து பாடலை முடிக்கிறார். இப்படி தான் இந்தப் பாடல் வரி உருவானது. இந்தப் பாடல் கதை படி தோற்றாலும் மக்கள் மனதில் வெற்றியடைந்த ஒரு பாடலாக தான் உள்ளது.

நன்றி : ஆலங்குடி வெள்ளைச்சாமி

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

WhatsApp channel

டாபிக்ஸ்

பொழுதுபோக்கு மற்றும் பிக்பாஸ் , கோலிவுட் தொடர்பான அப்டேட் செய்திகளை இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் மூலம் உடனுக்குடன் அறியலாம்.