'போடு அடிய போடு'.. சன் டிவி சீரியல்களை அடிச்சு காலி பண்ணிய விஜய் டிவி.. ஒரு வழியா விட்டத புடிச்சிட்டாங்க..
இந்த வாரம் வெளியான தமிழ் சீரியல்களில் மக்கள் மனதைக் கவர்ந்த டாப் 10 சீரியல்கள் எது என்ற பட்டியல் தற்போது வெளியாகி உள்ளது. இந்தப் பட்டியலில் நீண்ட நாட்களுக்குப் பின் விஜய் டிவி சீரியல்கள் அதிக இடம் பிடித்துள்ளன.
திரைப்படங்களைக் காட்டிலும் அதிகமான இல்லத்தரசிகளை ரசிகர்களாக கொண்டது டிவி சீரியல்கள்தான். ஒவ்வொரு சீரியலும் அதன் கதை, கதாபாத்திரங்களின் அமைப்பு, நடிகர்களின் நடிப்புத் திறன் ஆகியவற்றால் மட்டுமே சிறப்பு பெறுகின்றன.
இவை அனைத்தும் சரியாக இருந்து ஒரு நேர்த்தியான படைப்பாக இருந்தால் மட்டுமே மக்களால் அதிகம் விரும்பப்படுகிறது. தமிழ் சீயல்களுக்கான சேனல்களை பொறுத்த வரை, சன் டிவி, ஜீ தமிழ், விஜய் டிவி ஆகிய சேனல்கள் முன்னணி வகிக்கின்றன. இதில் ஓடும் பிரைம் டைம் சீரியல்களே அதிகம் பேரால் பார்க்கப்படுகிறது.
ஒவ்வொரு வாரமும் டிவி சீரியல்கள் எந்த அளவுக்கு ஓடியுள்ளது என டி.ஆர்.பி ரேட்டிங் வெளியாகும். கடந்த வாரம் தமிழ் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பப்பட்ட சீரியல் மக்கள் மத்தியில் பெற்ற வரவேற்புகளின் அடிப்படையில் டிஆர்பி புள்ளிப் பட்டியல் வெளியாகியுள்ளது. அதன் அடிப்படையில், முதல் 10 இடங்களைப் பெற்ற சீரியல்களைப் பற்றி இங்கு பார்ப்போம்.
முதல் இடத்தை தொடர்ந்து தக்கவைத்திருக்கும் கயல்
சன் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல் கயல். இந்த சீரியலில் பலகட்ட போராட்டத்திற்கு பின் கயல், அவரது காதலன் எழிலை திருமணம் செய்த நிலையில், தற்போது புதிதாக வந்த வில்லன் அவர்களை பிரிக்க திட்டமிடுகிறான். இதில், எழிலை கத்திக்குத்து பட்டு கிடப்பதால், அடுத்து என்ன நடக்கும் என்பதைக் காண மக்கள் விறுவிறுப்பாக உள்ளதால், இது டிஆர்பி பட்டியலில் 10.34 புள்ளிகள் பெற்று முதலிடத்தில் உள்ளது.
சிங்கப்பெண்ணே சீரியல்
சன் டிவி சீரியலான சிங்கப்பெண்ணேவில், கதாநாயகி ஆனந்தி, தான் காதலித்த அழகனை கண்டுபிடித்த நிலையில், குடுகுடுப்பைகாரனால் அடுத்த பிரச்சனை வரவுள்ளது தெரியாமல் இருக்கிறார். ஆனந்திக்கு என்ன ஆகப் போகிறது. அவர் அவருடைய காதலால் என்ன அவஸ்தை படப்போகிறார் என்பதைக் காண மக்கள் ஆர்வமாக இருந்த நிலையில், இந்த சீரியல் 10.03 புள்ளிகள் பெற்று டிஆர்பியில் இரண்டாம் இடம் பிடித்துள்ளது.
மூன்று முடிச்சு
சன் டிவி சீரியலான மூன்று முடிச்சு சீரியலலில், தன்னை மீறி நடந்த கல்யாணத்தை ஏற்கமுடியாமல் தவிக்கும் கதாநாயகனின் அம்மா திட்டம் தீட்டி, கதாநாயகியை கடத்தினர். கதாநாயகன் நடந்ததை கண்டுபிடிப்பாரா என்ற சீரியஸான கட்டத்தில் சீரியல் செல்வதால் இது 9.95 புள்ளிகளுடன் 3ம் இடத்தில் உள்ளது.
மருமகள், ராமாயணம்
சன் டிவியில், கல்யாணம் முடிந்த உடன் தனிக்குடித்தனம் போக நினைக்கும் ஹீரோ, அதை எதிர்க்கும் ஹீரோயின் என்ற கோணத்தில் மருமகள் சீரியலும், ராமனுக்கும், ராவணனுக்கும் நடக்கும் யுத்தம் ஒருபுறமும் மக்களை கவர்ந்து இழுத்த நிலையில், இந்த 2 சீரியலும் 8.89 புள்ளிகள் பெற்று 4ம் இடத்தை பகிர்ந்துள்ளன. முன்னதாக 6ம் இடத்தில் இருந்த ராமாயணம் தற்போது முன்னேறி 4ம் இடத்திற்கு வந்துள்ளது.
சுந்தரி
சன் டிவி தொடரான சுந்தரி, கணவனால் துன்புறுத்தலுக்கு ஆளாகி, அதிலிருந்து மீண்டு கலெக்டரான சுந்தரி தான் விரும்பிய நபரை திருமணம் செய்கிறாரா இல்லையா என்பதை வைத்து சீரியலின் இறுதிக் கட்டத்தை எட்டியது. இதனால், மக்களின் ஆதரவைப் பெற்று இது 8.81 புள்ளிகள் பெற்று 5ம் இடம் பிடித்துள்ளது.
சிறகடிக்க ஆசை
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சிறகடிக்க ஆசை சீரியல், செல்போன் திருட்டு, பில்லி சூனியம் என்ற கதையுடன் சென்று டிஆர்பியில் 7.64 புள்ளிகள் பெற்றுள்ளது. இதனால் இது கடந்த வாரத்தைக் காட்டிலும் ஒரு படி முன்னேறி 6ம் இடத்திற்கு வந்துள்ளது.
பாண்டியன் ஸ்டார்ஸ் 2
விஜய் டிவி சீரியலான பாண்டியன் ஸ்டோர்ஸ் 2ல் மூத்த மருமகளின் போலி நகை, மகளின் மாமியார் கொடுமை போன்ற பரபரப்பான கதையால் 10ம் இடத்திலிருந்து முன்னேறி 7ம் இடத்தை பிடித்துள்ளது. மேலும் இது 6.43 புள்ளிகள் பெற்றுள்ளது.
பாக்கியலட்சுமி
விஜய் டிவியில் ஒரு காலத்தில் செக்கைபோடு போட்ட பாக்கியலட்சுமி சீரியல் நீண்ட நாட்களுக்குப் பின் டிஆர்பி பட்டியலில் முதல் 10 இடத்திற்குள் வந்துள்ளது. இந்த சீரியலில் கோபி நெஞ்சுவி வந்து மருத்துவமனையில் சிகிச்சை எடுப்பது போன்ற காட்சிகள் தற்போது ஒளிபரப்பாகி வருகிறது. இந்த சீரியல் 6.22 புள்ளிகள் பெற்று 8ம் இடத்தை பிடித்துள்ளது.
சின்ன மருமகள்
விஜய் டிவி சீரியலான சின்ன மருமகளில் கதாநாயகி 12ம் வகுப்பு தனித்தேர்வை எழுத அவரது கணவரும் பாட்டியும் உதவுவது போல காட்சி அமைக்கப்பட்டு வருகிறது. இது, காதலும் படிப்பும் கலந்து ஒளிபரப்பப்படுவதால் தற்போது டிஆர்பி பட்டியலில் 6.02 புள்ளிகள் பெற்று 9ம் இடத்தில் உள்ளது.
ஆஹா கல்யாணம்
விஜய் டிவி சீரியலான ஆஹா கல்யாணத்தில், தங்கள் வீட்டு வாரிசு என வரும் அழகியின் அப்பா யார் என்பதை பல்வேறு திகில் சம்பவங்களுடன் கூறி வருவதால் இந்த சீரியலும் 5.98 புள்ளிகள் பெற்று 10ம் இடத்தில் இடம் பெற்றுள்ளது.
இதனால், இதுவரை புள்ளிப் பட்டியலில் முன்னணி பெற்று வந்த சன் டிவிக்கு போட்டியாக தற்போது விஜய் டிவி நீண்ட நாட்களுக்குப் பின் களமிறங்கி உள்ளது.
டாபிக்ஸ்