ஆனந்தியை ரவுட்டு கட்ட நடக்கும் சதித் திட்டம்.. பதறி ஓடும் ஆனந்தி.. அடுத்து என்ன நடக்கும்?
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  ஆனந்தியை ரவுட்டு கட்ட நடக்கும் சதித் திட்டம்.. பதறி ஓடும் ஆனந்தி.. அடுத்து என்ன நடக்கும்?

ஆனந்தியை ரவுட்டு கட்ட நடக்கும் சதித் திட்டம்.. பதறி ஓடும் ஆனந்தி.. அடுத்து என்ன நடக்கும்?

Malavica Natarajan HT Tamil
Nov 30, 2024 06:51 AM IST

ஆனந்தி அன்பு வீட்டில் தான் தங்கியிருக்கிறார் என மகேஷின் அம்மா, அன்புவின் அம்மாவிடம் கூறியதால் ஆனந்தி வீட்டை விட்டு வெளியே ஓடுகிறாள்.

ஆனந்தியை ரவுட்டு கட்ட நடக்கும் சதித் திட்டம்.. பதறி ஓடும் ஆனந்தி.. அடுத்து என்ன நடக்கும்?
ஆனந்தியை ரவுட்டு கட்ட நடக்கும் சதித் திட்டம்.. பதறி ஓடும் ஆனந்தி.. அடுத்து என்ன நடக்கும்?

தவித்த ஆனந்திக்கு உதவிய மகேஷ்

இதனால், நடு ராத்திரியில் எங்கு செல்வது எனத் தெரியாமல் தவித்த ஆனந்தியை தன் வீட்டிற்கு அழைத்துச் சென்றார் மகேஷ். ஆனால், அங்கிருப்பவர்கள் ஆனந்தி ஏழைக் குடும்பத்தை சேர்ந்தவர் என்பதால் மிகவும் அசிங்கப்படுத்தி வந்தனர்.

தன் காதலியை இவ்வாறு செய்வதை ஏற்றுக் கொள்ள முடியாத மகேஷ், தன் கம்பெனியில் வேலை செய்த அன்புவிடம் உதவி கேட்கிறான். ஆனந்தியை அன்புவும் காதலித்து வந்ததால், அவளை தன் வீட்டிலேயே தங்க வைக்க சம்மதித்தான்.

தங்கையிடம் சிக்கிய அன்பு

தன் வீட்டில் அம்மாவிற்கும், தங்கைக்கும் தெரியாமல் ஆனந்தியை மறைத்து மறைத்து வைத்திருந்த அன்பு பின், அவரது தங்கையிடம் சிக்கினார். ஆனந்தியின் நிலையை அறிந்த அன்புவின் தங்கையும் அவர் இங்கேயே இருக்க சம்மதித்ததுடன் இவர்கள் இருவருக்கும் உதவியாக இருந்தார்.

இதற்கிடையில், மித்ராவின் சூழ்ச்சியால் அழகன் யார் என்பதை கண்டுபிடித்தே தீருவேன் என ஆனந்தி திட்டவட்டமாக முடிவு செய்து, கடைசியில் அன்பு தான் அழகன் என்பதை, அவரது தங்கையின் மூலம் கண்டுபிடித்துவிட்டார்.

மகேஷின் அம்மாவால் வரும் புது பிரச்சனை

இதை மகேஷிடம் சொல்ல வேண்டாம் என அன்பு தடுத்ததால், ஆனந்தி அன்புவின் காதல் மகேஷிற்கு தெரியாமலேயே இருக்கிறது. அத்துடன், ஆனந்தியை புது ஹாஸ்டலுக்கு செல்ல வேண்டும் என வற்புறுத்திய மகேஷும் தற்போது அன்பு வீட்டிலேயே இருக்குமாறு தெரிவித்துவிட்டார்.

இதனால், இருவரும் சந்தோஷத்தில் இருந்த நிலையில்,தான் ஆனந்தியை காதலிப்பதாக மகேஷ் அவரது அம்மாவிடம் கூறியுள்ளார். தன் மகன் ஒரு வேலைக்காரியை காதலிப்பதை வெறுத்த அவர், ஆனந்தி அன்பு வீட்டில் தங்கி இருப்பதை அன்புவின் அம்மாவிடம் கூறியுள்ளார்.

ரவுண்டு கட்டும் அன்புவின் அம்மா

இதனால், ஆத்திரமடைந்த அன்புவின் அம்மா, அவசர அவசரமாக வீட்டிற்கு வந்து அன்பு அறையை சோதனை செய்கிறார். அங்கு யாரும் இல்லாததால், அவர் ஆனந்தியை வீடு முழுக்க தேடுகிறார்.

இதனால், பதறிப்போய் வீட்டின் மாடிக்கு சென்ற ஆனந்தி, அன்புவின் அம்மா குரலைக் கேட்டு பயத்தில் உறைந்து போயுள்ளார்.

ஆனந்திக்காக காத்திருக்கும் அப்பா

இது ஒருபுறம் இருக்க, இன்னும் 48 நாளுக்குள் நல்ல காரியம் நடக்க வேண்டும் என குடுகுடுப்பைக்காரன் சொன்னதைக் கேட்டு ஆனந்தியின் அப்பா ஒரு முடிவெடுத்துள்ளார். அதனால், மீண்டும் ஆனந்தியால் எந்த பிரச்சனையும் வரக்கூடாது என்பதால் அவர் ஆனந்தியை சந்தித்து பேச ஊரிலிருந்து கிளம்பி வந்துள்ளார்.

சமாளிக்கும் நண்பர்கள்

ஆனந்தியின் ஹாஸ்டல் முன் வந்து நின்று ஆனந்தியையும் ஹாஸ்டல் வார்டனையும் சந்தித்தே தீருவேன் என அடம்பிடிக்கிறார். இல்லாத ஆனந்தியை எப்படி சந்திக்க வைப்பது, ஹாஸ்டல் வார்டன் கண்ணுக்குப் படாமல் இவரை எப்படி சமாளித்து அழைத்து செல்வது என ஆனந்தியின் ஹாஸ்டல் நண்பர்கள் யோசித்து வருகின்றனர்.

ஒரே சமயத்தில் அன்பு வீட்டிலும், ஆனந்தி வீட்டிலும் இருப்பவர்கள் ஆனந்தியை ரவுண்டு கட்டுவதால், அவர் இவர்களிடமிருந்து தப்பிக்க தலை தெரிக்க ஓடுகிறார்.

இனி என்ன நடக்கும்?

இதற்கான ப்ரோமோவை சன் டிவி வெளியிட்டுள்ளது. ஆனந்தி அன்புவின் அம்மாவிடம் சிக்குவாரா?, அப்படி சிக்கினால் உண்மை வெளிவருமா? ஆனந்தி ஹாஸ்டலில் இல்லை என்பது அவரது அப்பாவிற்கு தெரிய வருமா? என்பதை இனி வரும் எபிசோடில் பார்க்கலாம்.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல், பொருள் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்களில் இருந்து சேகரித்து, உங்களுக்குத் தரப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

Whats_app_banner

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.