கத்தியால் குத்தியவரிடமே கருணையை எதிர்பார்க்கும் கயல்.. பயத்தில் தவிக்கும் பெரியப்பா!.. கயல் சீரியல் அப்டேட்
எழிலை கத்தியால் குத்தியவர்கள் யார் என கண்டுபிடித்து அவர்களுக்கு தண்டனை வாங்கிக் கொடுக்க வேண்டும் என கயல், சரவண வேலுவிடம் கூறுகிறார்.
சிறு வயதில் இருந்து கயல் தான் என் மனைவி என மனதில் ஆசை வைத்து காத்திருந்த சரவண வேலுவிற்கு, கயல் எழிலை திருமணம் செய்து கொண்டதை தாங்கிக் கொள்ள முடியவில்லை. இன்னும் ஒரு வாரத்தில் எப்படியாவது எழில் இருக்கும் அந்த இடத்தில் தான் இருப்பேன் என சவால் விட்டு கயலையே சுத்தி சுத்தி வந்தார்.
சரவண வேலு திட்டம்
இதற்கிடையில், சொந்த ஊருக்கு வந்த கயல், குடும்பத்துடன் திரும்ப ஊருக்கு செல்ல முடிவெடுத்த சமயத்தில், கயலுக்கு ஊர் சுற்றி காண்பிப்பதாகக் கூறி சரவண வேலு அழைக்கிறான். அப்போது, கயல் எழிலையும் அழைத்ததால் சரவண வேலு ஆத்திரம் அடைகிறான்.
பின், இவர்கள் மூவரும் ஊரைச் சுற்றிப் பார்க்க செல்லும் போது, கயலும் எழிலும் ரொமான்ஸ் செய்வதை சரவண வேலுவால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. இதனால், எழிலை தீர்த்துக் கட்ட சரவண வேலு, அவனுடைய ஆட்களை வைத்து திட்டம் தீட்டுகிறான்.
கத்திக் குத்து பட்ட எழில்
கயல், எழில், சரவண வேலு 3 பேரும் ஊர் சுற்றி முடித்துவிட்டு வீட்டுக்கு திரும்பிக் கொண்டிருக்கின்றனர். அப்போது, சில முகமூடி அணிந்த ரவுடிகள் இவர்களை வழிமறித்தனர். அவர்களிடம் வேண்டுன்றே சரவண வேலு சண்டைக்கு சென்றான்.
இதைப்பார்த்த எழில், சரவண வேலுவிற்கு உதவ சென்ற போது, ரவுடிகள் எழிலை கத்தியால் குத்தினர். இதில் நிலை குலைந்த எழிலை சரவண வேலுவும் கயலும் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.
கோபமடைந்த கயல்
அங்கு, எழிலுக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வரும் சமயத்தில், எழிலை இப்படி ஆக்கியவர்களை சும்மா விடக்கூடாது. அவர்களை கண்டுபிடித்து, தக்க தண்டனை வாங்கித் தர வேண்டும் என கயல், சரவண வேலுவிடம் கூறுகிறாள். இதைக் கேட்டுக் கொண்டிருந்த சரவண வேலு, எழிலை இப்படி செய்ததே நான் தான் என மனதிற்குள் பேசி வருகிறான்.
பதறிய குடும்பம்
இதற்கிடையில், ஊர் சுற்றிப் பார்க்கப் போனவர்கள் நீண்ட நேரம் ஆகியும் வீட்டிற்கு திரும்ப வராமல் இருப்பதால், கயல் குடும்பத்தினர் பதறிப் போய் உள்ளனர். இதனால், கயல் வீட்டில் உள்ளவர்கள் அனைவரும் பதற்றத்தில் சரவண வேலுவின் வீட்டிற்கு வந்து அவர் அம்மாவிடம் இதைப் பற்றி கேட்கின்றனர்.
சில நாட்களாக மனம் திருந்தி, கயலை தன் சொந்த பெண் போல பார்த்துக் கொள்ளும் கயலின் பெரியப்பா தர்மலிங்கம், கயலையும் எழிலையும் காணாததால் மிகவும் கவலை அடைந்துள்ளார். இதுகுறித்த ப்ரோமோவை சன் டிவி வெளியிட்டுள்ளது.
அப்பாவிற்காக போராடும் கயல்
கல்யாணம் முடிந்த கையோடு, தன் அப்பா மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் பொய்யானது. அவர் ஒரு நிரபராதி என்பதை மக்களுக்கு நிரூபித்தே தீருவேன் என முடிவெடுத்து சொந்த ஊருக்கு வந்துள்ளார்.
கயல் குடும்பத்திடம் சண்டையிடும் மக்கள்
முன்னதாக, கோயிலுக்கு சென்ற கயல் குடும்பத்தை அவரது தந்தை ஊரில் உள்ளவர்களின் பணத்தை ஏமாற்றி சென்றதாகவும், கயல் குடும்பம் உடனடியாக ஊரைவிட்டு வெளியே போக வேண்டும் எனவும் ஊரில் உள்ளவர் சண்டைக்கு வருகின்றனர். இதனால் என்ன செய்வது என அறியாமல் கயல் குடும்பம் தவித்து வந்தது. இந்த சமயத்தில் கயல் குடும்பம் ஊருக்கு வந்ததை அறிந்த சரவண வேலு, பல வருடங்களுக்குப் பின் ஊருக்கு வந்த கயலைப் பார்க்க மிகவும் ஆர்வமாக இருந்தாார்.
சரவண வேலுவின் திட்டம்
ஆனால், கோயிலுக்கு சென்று பார்க்கும் போது தான் தெரிந்தது கயலுக்கு திருமணம் ஆனது. இதனால், ஒரு பக்கம் கோபமடைந்தாலும், முதலில் ஊர் மக்களிடம் இருந்து கயலை காப்பாற்ற வேண்டும் என்ற நோக்கத்தில், ஊரார் முன் கயல் குடும்பத்திற்காக பரிந்து பேசினார்.
பொறுப்புத் துறப்பு:
இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல், பொருள் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்களில் இருந்து சேகரித்து, உங்களுக்குத் தரப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.
டாபிக்ஸ்