ஆனந்தி வீட்டில் விளையாடிய ஜோசியர்.. வாந்தி எடுத்து ஷாக் கொடுக்கும் ஆனந்தி.. என்ன தான் நடக்கிறது? சிங்கப்பெண்ணே சீரியல்
இன்னும் 48 நாளுக்குள், ஆனந்தியால் பெரிய அவமானம் காத்திருப்பதாக ஜோசியர் குண்டைத் தூக்கி போட்ட நிலையில், ஆனந்தி திடீரென வாந்தி எடுத்து அன்புவை பதற்றப்பட வைத்துள்ளார்.

கிராமத்தில் ஆனந்தியின் தந்தை 48 நாளுக்குள் நல்லது நடக்கவில்லை என்றால் பெரிய அவமானம் வரும் என்று குடுகுடுப்பைக்காரன் சொல்லிவிட்டுப்போனதை தனது மனைவியிடம் வேதனையுடன் சொன்னார்.
அதிர்ச்சி தந்த ஜோசியர்
இதையடுத்து, ஆனந்தியின் அப்பா வீட்டிற்கு ஜோசியரை வரவைத்த ஜாதகம் பார்த்தனர். அப்போது, அந்த ஜோசியர், கூட பிறந்தவங்களால கோகிலா கல்யாணத்தில் அசம்பாவிதம் நடந்தது. இப்போது மறுபடியும் நடக்கும் என சொல்லி அதிர்ச்சி அளிக்கிறார். இதனால், ஆனந்தி வீட்டில் எல்லோரும் செய்வது அறியாது தவிக்கின்றனர்.
பதற்றமான அன்பு
இது ஒருபுறம் இருக்க, அன்பு தங்கை ஆனந்தியுடன் செல்ல வேண்டும் எனக் கூறியதற்கு, அன்பு மறுப்பு தெரிவிக்கிறார். இதனால், அவர் ஆனந்தியின் உதவியை நாடி,அன்புவை சம்மதிக்க வைக்கிறார். இதனால் அன்பு ஏதாவது பிரச்சனை வருமோ என யோசிக்கும் சமயத்தில் ஆனந்தி திடீரென வாந்தி எடுக்கிறாள். இதனால், அன்புவிற்கு பதற்றம் அதிகரித்தது.