சரவண வேலுவின் சதித்திட்டம்.. கத்திக்குத்து பட்ட எழில்.. தவிக்கும் கயல்.. கயல் சீரியல் அப்டேட்
கயல் கண்முன்னே எழிலை முகமூடி அணிந்த சிலர் சண்டையிட்டு எழிலை கத்தியால் குத்தியுள்ளனர். இதனால் கயல் தவித்துப் போயுள்ளார். இதற்கான ப்ரோமோவை சன் டிவி வெளியிட்டுள்ளது.
கயல், அவரது கணவரோடு சொந்த ஊரை சுற்றிப் பார்த்துக் கொண்டிருக்கிறாள். கயலை மட்டும் தன்னோடு அழைத்துச் சென்று ஊர் சுற்ற எண்ணிய சரவண வேலுவின் ஆசையை கயல் நிறைவேற்றாமல், எழிலுடன் புறப்பட்டார். இதனால் கோவத்தில் இருந்த சரவண வேலு கயலையும் எழிலையும் பிரிக்க ஏதாவது செய்ய வேண்டும் என திட்டம் தீட்டுகிறான்.
கோபமடைந்த எழில்
அதற்குள் சரவண வேலு, ஊர்க்காரர் ஒருவரிடம் கயல் தான் கல்யாணம் செய்ய உள்ள பெண் எனக் கூறி அறிமுகப்படுத்தி வைக்கிறான். இதைப் பார்த்த எழிலுக்கு மிகவும் கோவம் ஏற்பட்டது. இதையடுத்து, கயலிடம் நெருங்கிப் பழகுவதை நிருத்துமாறு எழில், சரவண வேலுவை எச்சரித்தார்.
எழிலுக்கு கத்திக்குத்து
இந்நிலையில், முகமூடி அணிந்த சிலர், ஊரைச் சுற்றி பார்க்கும் எழில், சரவண வேலுவை பயங்கரமாகத் தாக்கினர். அப்போது, சரவண வேலு தூண்டிவிட ஒருவன் எழிலை கத்தியால் குத்தினான். இதைப் பார்த்த கயல், கதறி துடித்தார். இதுகுறித்த ப்ரோமோவை சன் டிவி வெளியிட்டுள்ளது.
ஊரைச்சுற்றிப் பார்க்கும் கயல்
கல்யாணம் முடிந்த கையோடு, தனது சொந்த ஊருக்கு வந்த கயல், தன்னை நெருங்கி வந்த பிரச்னைகளை எல்லாம் சமாளித்து எழிலுடன் நேரத்தைச் செலவழிக்க விரும்புகிறார். இதனால், தனக்கு உதவி செய்ய வந்த சரவண வேலுவையே டிரைவராக்கி ஊரை சுற்றிக் காண்பிக்குமாறு கூறுகிறார். கயலை கல்யாணம் செய்வது தான் தன் வாழ்நாள் லட்சியம் என பல வருடங்களாக ஒருதலைக் காதலுடன் காத்திருந்த சரவண வேலுவிற்கு இது கோபத்தை ஏற்படுத்தினாலும், அவன் அதை கயலுக்காக ஏற்றுக் கொள்கிறான்.
சேட்டை செய்யும் கயல்- எழில்
பின், காரில் ஊரைச் சுற்றி வரும் கயல், எழிலுடன் பல சேட்டைகள் செய்கிறார். காரில் எழிலும், கயலும் நின்று கொன்டு ஊரைச் சுற்றிப் பார்த்து சந்தோஷப்பட்டு வருகின்றனர்.
சரவணவேலுவின் எண்ணம்
ஆனால், கயலுக்கு உதவுவதுபோல் வந்த சரவண வேலு, கயலை எப்படியாவது எழிலிடம் இருந்து பிரிக்க வேண்டும். தான் இத்தனை நாள் காத்திருந்த கயலை எப்படியாவது அடைய வேண்டும் என்ற வஞ்சத்தில் இருக்கிறான். இதையடுத்து, இன்னும் ஒரே வாரத்திற்குள் கயலிடமிருந்து எழிலை பிரிப்பதாகவும் மனதிற்குள் சவால்விட்டுக் கொள்கிறான்.
அதற்கான வேலைகளைப் படிப்படியாக செய்யத்தொடங்குகிறான். கயல் திருமணம் ஆனவர் என்பதை அவரது தாயும், உடன் பக்கபலமாக இருக்கும் நண்பர்கள் எடுத்துரைத்தாலும் அதை சரவணவேலு ஏற்றுக்கொள்ளவில்லை.
மனகுமுறலுடன் இருக்கும் பெரியப்பா
கயல் சந்திக்கும் அனைத்து பிரச்சனைக்கும் தான் தான் காரணம் என, அவரது பெரியப்பா நடந்த உண்மை எல்லாம் சொல்லி கயலிடம் சரண்டர் ஆவேன் என தனது மனைவியிடம் கூறினார். அதற்கு அவர், ‘நடந்ததை எல்லாம் சொன்னால் கயல் சும்மாவிட்டுவிடுவாரா’ என பயமுறுத்துகிறார்.
பொறுப்புத் துறப்பு:
இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல், பொருள் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்களில் இருந்து சேகரித்து, உங்களுக்குத் தரப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.
டாபிக்ஸ்